முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இரவு தூக்கத்தை பாதிக்கும் பணிச்சுமை- வேலை பாதுகாப்பின்மை... நிம்மதியான தூக்கத்திற்கு டிப்ஸ்.!

இரவு தூக்கத்தை பாதிக்கும் பணிச்சுமை- வேலை பாதுகாப்பின்மை... நிம்மதியான தூக்கத்திற்கு டிப்ஸ்.!

தூக்கம்

தூக்கம்

ஊழியர்களுக்கு Flexible work schedule-களை வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சமநிலையை மேம்படுத்தலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் அனைவரும் வாரத்தில் குறைந்தபட்சம் 5 - 6 நாட்களுக்கு நாளொன்றுக்கு 8 முதல் 10 மணி நேரம் வேலை செய்து வரும் நிலையில், நம்முடைய தொழில் வாழ்க்கை பல வழிகளில் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெருந்தொற்றின் பின்விளைவுகள் நம் வாழ்க்கையின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன. இந்த சூழலில் அதிக வேலைப்பளு மற்றும் வேலை உறுதியின்மை உள்ளிட்ட பல காரணங்கள் பலரின் தூக்க முறைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன. தூக்கத்தில் சமரசம் செய்து கொள்வது சிறப்பாக செயல்பட முடியாமல் செய்வதோடு முக்கிய விஷயங்களில் உங்களின் முடிவெடுக்கும் திறனையும் பாதிக்கிறது.

சிறப்பான தூக்க முறையை பெறுவது ஏன் முக்கியம்.!

நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய விஷயங்களில் தூக்கம் ஒன்றாகும். தினசரி சராசரியாக 7 - 8 மணி நேரம் இரவு நன்றாக தூங்குவது உங்களை புத்துணர்ச்சியாக வைப்பதோடு அடுத்த நாளுக்கு தயாராக உதவுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி வேலை சுமைகளை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு தூங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மோசமான தூக்க நேரம் என்பது ஒருவரின் செயல்திறனை குறைப்பதோடு, விடுப்பு அதிகம் எடுக்க மற்றும் விபத்துகளை சந்திக்க வழிவகுக்கிறது. பெருந்தொற்று காரணமாக ஹைபிரிட் ஒர்க் மாடல்களில் பணியாற்றிய பலர் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பேலன்ஸ் செய்ய முடியாமல் சவால்களை சந்திப்பதாக குமுறினர்.

வேலையை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக தூக்கமின்மை, நீண்ட நேரம் நிற்பது, உடற்பயிற்சியின்மை மற்றும் அதிக வேலை அழுத்தம் உட்பட பல ஆரோக்கியமற்ற நடத்தைகள் மற்றும் வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். ஊழியர்களின் தூக்க முறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதில் பணிச்சுமை மற்றும் வேலை பாதுகாப்பின்மை முக்கிய பங்கு வகிக்கின்றன.

பணியிடம் மற்றும் தூக்கம்:

உங்கள் தூக்கத்தின் தரம் மற்றும் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் இரண்டுமே முக்கியம். குறிப்பாக நமது தூக்கத்தின் தரம் நல்வாழ்வில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூக்கத்தில் இருக்கும் நான்கு நிலைகளில் மூன்றாவது மற்றும் இறுதி நிலைகள் முறையை Non-Rapid Eye Movement மற்றும் Rapid Eye Movement ஆகும்.

NREM 1 & 2 ஸ்டேஜில் இருக்கும் போது, நமது உடல் மெதுவாக தூக்கத்தில் மூழ்க தொடங்குகிறது, இதனால் நமது தசைகள் ஓய்வெடுக்கின்றன மற்றும் உடல் வெப்பநிலை குறைகிறது. NREM 3 ஸ்டேஜில் ஒரு நபர் ஆழ்ந்த உறக்க நிலைக்குச் செல்கிறார். இந்த ஸ்டேஜில் தான் நம் உடலில் செல்லுலார் ரிப்பேர், மறுசீரமைப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. சுவாரஸ்யமாக, இந்த கடைசி கட்டத்தில் தான் நாம் கனவு காண்கிறோம். இந்த ஸ்டேஜ் நமது மனநல செயல்பாடு, நினைவகத்தை தக்கவைத்தல், அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி செயலாக்கம் போன்றவற்றுக்கு பொறுப்பாகும்.

Also Read | படுத்த உடனே தூங்க வேண்டுமா..? தூக்கமின்மையை போக்க உதவும் 5 உணவுகள்

இதற்கிடையே பணியிடத்திலிருந்து ஏற்படும் மனஅழுத்தம் ஒருவரது தூக்க முறைகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இருக்கும் பிரச்சனை வேலையில் சிக்கல் மற்றும் கவனக்குறைவு, செயல்திறன் குறைவு உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்.

வேலை நிமித்தமாக டிஜிட்டல் டிவைஸ்களை நீண்ட நேரம் பயன்படுத்துவது மூளையை அதிக நேரம் விழிக்க வைப்பதோடு தூங்குவதிலும் தாமதத்தை ஏற்படுத்தும். வேலையில் காணப்படும் பாதுகாப்பின்மை கவலையை ஏற்படுத்தி இரவில் தூங்க விடமால் விழித்திருக்க வைக்கும் அல்லது தூக்கத்தில் தொந்தரவு ஏற்படுத்தும். வேலை சார்ந்து எழும் கவலைகள் இதய துடிப்பில் மாற்றம், படபடப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடலியல் சிக்கல்களை தூண்ட கூடும். மேலும் தூக்கமின்மை வேலையில் தினசரி போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது. மோசமான தூக்கம் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்வதோடு, பகல்நேர தூக்கத்திற்கு ஏங்கவும் வழிவகுக்கும், மேலும் செயல்திறனில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி, வேலை பாதுகாப்பு குறித்து ஒருவரை கவலை கொள்ள செய்கிறது.

ஊழியர்கள் நன்றாக தூங்குவதையும், வேலையை நிர்வகிப்பதையும் நிறுவனங்கள் உறுதிப்படுத்த சில டிப்ஸ்:

- ஊழியர்களுக்கு Flexible work schedule-களை வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சமநிலையை மேம்படுத்தலாம். தேவைப்படும் போது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது, லீவ் பாலிசிகளை வழங்குவது மற்றும் பணியாளர்களை ஓய்வு எடுக்க ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

8 Steps To Make Catnapping At Work Boost Productivity And Career Advancement

- ஊழியர்களின் மனநலம் மற்றும் ஓய்வு நேரத்துக்கு நிறுவனங்கள் முன்னுரிமை கொடுக்கலாம். இதற்காக Employee assistance programs-களை ஊழியர்களுக்கு வழங்கலாம். EAPs பணியாளர்களின் மன உறுதியை அதிகரிப்பதோடு அவர்களது மனநலனுக்கு தேவையான ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கும்.

- நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், நிறுவனங்கள் தங்கள் உத்திகளில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது முக்கியம். பணியாளர் - முதலாளி உறவில் மாற்றங்களை சரிசெய்யும்போது, பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மூலம் ஊழியர்களுக்கு ஆதரவளிப்பது இன்றியமையாதது. அவர்களுக்கான வேலை பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு வேலை நாளுக்கு பிறகும் சற்று மனநிம்மதியுடன் தூங்க செல்வார்கள்.

- பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், பொறுப்புகளை பிரித்து ஒப்படைப்பதன் மூலமும், யதார்த்தமான காலக்கெடுவை அமைப்பதன் மூலமும் பணியாளர்கள் மீதான பணிச்சுமை அழுத்தங்களை நிர்வாகம் கையாளலாம்.

Also Read | இரும்பு சத்து நிறைந்த கசகசா பால்.! இரவு நிம்மதியான தூக்கத்திற்கு கியாரண்டி..!

 ஊழியர்கள் தங்களது உடல்நலனை கவனித்து கொள்ள வேலைக்குப் பிறகு தேவைப்படும் போது மட்டுமே மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது, வேலைக்கு பிறகு சிஸ்டமை ஆஃப் செய்வது உள்ளிட்ட பழக்கங்களை பின்பற்றலாம்.

இரவு நல்ல தூக்கத்திற்கு உதவும் முக்கிய டிப்ஸ்:

- பிற்பகல் 2 மணிக்கு பிறகு காஃபின் எடுக்காதீர்கள்

- தூங்க செல்வதற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல், டிவி-க்களை ஆஃப் செய்து விடுங்கள்

- தூங்க செல்வதற்கு சுமார் 3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை சாப்பிட்டு விடுங்கள்

- தூங்க செல்லும் மின் வாக்கிங், தியானம் அல்லது புத்தகம் படிக்கும் பழக்கம் தூக்கத்தை மேம்படுத்துகிறது

First published:

Tags: Sleep, Sleep deprivation, Sleepless