நாடு முழுவதும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் 20 கோடி பேர் உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகவும், 10-ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு ஆகியவை ஏற்படுவதாகவும் நாட்டில் ஏற்படும் 63 சதவீத இறப்புகளுக்கு தொற்றா நோய்களே காரணம் எனவும் கூறியுள்ளது.
இதில், 55 சதவீதம் பேர் சராசரி ஆயுளை விட குறைந்த வயதில் உயிரிழப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதை தடுக்க, பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க... “ரயில் போல நெனச்சுட்டேன்...” - பறக்கும் விமானத்தில் பீடி புகைத்த நபர் கைது...!
உலக உயர் ரத்த அழுத்த நாளான மே 17-ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள், ஏழு கோடியே 50 லட்சம் பேர் நிரந்தர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுவர் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood Pressure, Blood Sugar, Health, Health Minister