முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கேன்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் இவ்வளவு ஆபத்துகளா..? எச்சரிக்கும் மருத்துவர்..!

கேன்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் இவ்வளவு ஆபத்துகளா..? எச்சரிக்கும் மருத்துவர்..!

கேன் பானங்கள்

கேன் பானங்கள்

கோடைகாலத்தில் கேன்களில் அடைக்கப்பட்ட பானங்களை காட்டிலும் இயற்கையான குளிர்பானங்களை அருந்துவது நல்லது. இளநீர், பதநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வழக்கமாக கோடை வெயில் வாட்டி வதைக்கின்ற தற்போதைய மே மாதத்தில் மழை பெய்து வருகிறது என்றாலும் இது தற்காலிகம்தான். எப்படியும் இனி வரக் கூடிய நாட்களில் மீண்டும் கோடைவெயில் வாட்டி வதைக்கப்போவது உறுதி. கோடையின் தாக்கத்தை எதிர்கொள்ள குளிர்பானங்களை அருந்துவது நம் பழக்கமாக இருக்கிறது.

சத்து பானங்கள், சோடா என பல வகைகளில் கேன்களில் அடைக்கப்பட்டு அவை விற்பனைக்கு வருகின்றன. வெயிலை சமாளிக்கும் விதமாக இவற்றை ருசித்து அருந்தி மகிழ்வதற்கு பின்னே சில ஆபத்துகளும் ஒளிந்திருக்கின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும். ஏனென்றால், குளிர்பானங்களை அடைப்பதற்கு முன்பாக கேன்களை பெரும்பாலும் கழுவுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதனால் கிருமிகளும், தொற்றுகளும் இந்த கேன்களில் இயல்பாகவே நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா, இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொதுவாக கேன்களை கிடங்குகளில் சேமித்து வைக்கின்றனர். பெரும்பாலும் அவற்றை கழுவுவதோ, சுத்தம் செய்வதோ கிடையாது. குளிர்பானங்களை சேமித்து வைத்திருக்கும் இடங்களில் கேன் மீது எலிகள் ஓடலாம். அதன் மீது சிறுநீர் அல்லது கழிவுகளை அந்த எலிகள் வெளியேற்றலாம். அத்தகைய கேன்களில் இருந்து பானங்களை அருந்தும்போது லெப்டோசிரோசிஸ் என்னும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “லெப்டோசிரோசிஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில் காய்ச்சல், தலைவலி, வயிறு வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு மற்றும் மூச்சு பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம். ஆகவே, கேன்களில் குளிர்பானங்களை அருந்துவதற்கு முன்பாக அந்த கேன்களின் வெளிப்புறத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும் அல்லது ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அதேபோல நேரடியாக அருந்தாமல் ஸ்ட்ரா வைத்து அருந்தலாம்’’ என்றார்.

கேன் பானங்களை அருந்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

  • கேன்களின் டாப் லேயரில் கிருமிகள், பாக்டீரியா மற்றும் அழுக்கு போன்றவை ஒட்டிக் கொண்டிருக்கலாம். இந்த நிலையில் நேரடியாக பானங்களை அருந்தும்போது அந்த நச்சுக்கள் உங்கள் உடலுக்குள் சேர்ந்து நோய்களை உண்டாக்கலாம்.
  • கேன்களின் உட்புறத்தில் பிஸ்பெனால் ஏ போன்ற ரசாயனங்கள் இருக்கும். அதன் மூலமாக உடல்நல பாதிப்புக்கான அபாயங்கள் உண்டாகும். மேலும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை இந்த ரசாயனம் பாதிக்கும்.
  • கேன்களில் வாய் விளிம்பு பகுதியானது கூர்மையாக இருக்கும். அவை உங்கள் வாய் அல்லது உதடுகளை கிழித்து காயம் ஏற்படுத்தக் கூடும். இதனால் தொற்றுகள் ஏற்படும்.
  • Also Read | சோடா பானங்கள் பற்களை அரித்து சேதப்படுத்துமா..? தவறி கூட தொட்டுடாதீங்க...

top videos

    கோடைகாலத்தில் கேன்களில் அடைக்கப்பட்ட பானங்களை காட்டிலும் இயற்கையான குளிர்பானங்களை அருந்துவது நல்லது. இளநீர், பதநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகளில் கூடுதல் இனிப்பு சேர்க்காமல் நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.

    First published:

    Tags: Carbonated Drinks, Hydrating drinks, Life18, Soft Drinks