முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மென்ஸ்சுரல் கப் பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கா..? இந்த பதிவை படியுங்கள்..!

மென்ஸ்சுரல் கப் பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கா..? இந்த பதிவை படியுங்கள்..!

மென்சுரல் கப்

மென்சுரல் கப்

கர்ப்பப்பையில் இருந்து கழிவுகளுடன் வெளியேறக் கூடிய உதிரப்போக்கை இந்த கப் சேமிக்கும். பொதுவாக மருத்துவ தரம் வாய்ந்த சிலிகான், லேடக்ஸ் அல்லது தெர்மோ பிளாஸ்டிக் ஐசோமர் போன்றவற்றை கொண்டு மென்ஸ்சுரல் கப் தயாரிக்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தங்களுடைய தனி சுகாதாரத்தை பேணி காப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சேனிட்டரி நாப்கின், டேம்பான் மற்றும் மென்ஸ்சுரல் கப் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். மென்ஸ்சுரல் கப் என்பது நேரடியாக பெண்ணுறுப்பின் உள்ளே பொருத்திக் கொள்ளக் கூடிய கப் ஆகும்.

கர்ப்பப்பையில் இருந்து கழிவுகளுடன் வெளியேறக் கூடிய உதிரப்போக்கை இந்த கப் சேமிக்கும். பொதுவாக மருத்துவ தரம் வாய்ந்த சிலிகான், லேடக்ஸ் அல்லது தெர்மோ பிளாஸ்டிக் ஐசோமர் போன்றவற்றை கொண்டு மென்ஸ்சுரல் கப் தயாரிக்கப்படுகிறது.

மணி போன்றதொரு அமைப்பில் வேர் சேர்க்கப்பட்டதை போல இதன் வடிவம் இருக்கும். இந்த வேர் போன்ற அமைப்பை பெண்ணுறுப்பின் உள்ளே பொருத்திக் கொள்ள வேண்டும் மற்றும் மணி போன்ற கப் அமைப்பானது உங்கள் பெண்ணுறுப்பு சுவர்களுக்கு இடையே ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பெண்ணுறுப்புடன் பொருந்திக் கொள்ளும்.

நாப்கின், டேம்பான் போன்றவற்றை காட்டிலும் சிறப்பானதா..?

நாப்கின் அல்லது டேம்பான் போன்றவை பெரும்பாலும் மரக் கூலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதேபோல, உறிஞ்சும் தன்மை கொண்ட பாலிமர்கள், மனமூட்டுகின்ற மூலப் பொருட்கள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. மாதவிலக்கு கால உதிரப்போக்கை உறிஞ்சுக் கொள்ளும் வகையில், மேற்கண்ட மூலப் பொருட்களுடன் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

அதற்குப் பிறகு, இவையெல்லாம் ஒரு பேஸ்ட் அல்லது ஜெல்லி போன்ற பொருளாக மாற்றம் செய்யப்பட்டு நாப்கின் அல்லது டேம்பான் உள்ளே பொருத்தப்படுகிறது.

Also Read : அடிக்கடி குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

இந்த பேஸ்ட் என்பது மிக எளிதாக பாக்டீரியாவை ஈர்க்கும். இதனால் உடனடியாக கெட்ட வாடை வீச தொடங்கும் மற்றும் பெண்ணுறுப்பு தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. நாப்கின் பயன்படுத்துவதால் பெண்ணுறுப்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீடித்த அரிப்பு, எரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

ஆனால், மென்ஸ்சுரல் கப் என்பது வேறு எந்தவகை பொருட்களையும் உள்ளே கொண்டிருக்காமல் நேரடியாக உதிரப்போக்கை சேமித்து வைத்திருக்கும். உதிரப்போக்கு இயற்கையானது என்பதால், அது பெண்ணுறுப்பில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தாது. இதில் எந்தவித ரசாயன பொருட்களும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் நோய் அபாயங்கள் தவிர்க்கப்படுகின்றன.

மென்ஸ்சுரல் கப் ஏன் நல்லது..?

இதை 10 ஆண்டுகள் வரையிலும் கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பெண்ணுறுப்பில் பொருத்திய பிறகு ஒவ்வொரு 4 முதல் 12 மணி நேரத்திற்கு ஒருமுறை இதை நீங்கள் வெளியே எடுத்து, சுத்தம் செய்து, பின்னர் மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதால் திடக் கழிவுகள் சேருவதில்லை.

top videos

    நாப்கின், டேம்பான் போன்றவை கழிவுநீருடன் சேர்ந்து கடலில் கலக்கும்போது, அதை முற்றிலுமாக அழிந்து போக 25 ஆண்டுகள் பிடிக்கும். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு மிகுதியாக இருக்கும். மென்ஸ்சுரல் கப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து மகப்பேறு மருத்துவருடன் ஆலோசனை செய்து, பின்னர் பயன்படுத்தலாம்.

    First published:

    Tags: Menstrual Cup, Periods, Women Health