ஃப்ரண்டோ டெம்போரல் டிமென்ஷியா (frontotemporal dementia) நமது மூளையின் முன் மற்றும் தற்காலிக மடல்களில் ஏற்படும் தற்காலிக ஈடுபட்டினால் உண்டாகும் ஒரு நரம்பியல் குறைபாடு ஆகும். இது ஃப்ரண்டோ டெம்போரல் டிமென்ஷியா என்பது லோபர் டிஜெனரேஷன் வகையை சேர்ந்த ஒரு குறைபாடு ஆகும். இது பொதுவாகவே இளம் வயதினருக்கு அதிக அளவில் பாதிக்கிறது. தற்போது உலக அளவில் ஒட்டுமொத்தமாக 1.2-1.8 வெள்ளியின் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா அறிகுறிகள்:
இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகலாம். ஏனெனில் நமது மூளையில் உள்ள முன் பக்க மடல்கள் தான் நமது குணாதிசயம் மற்றும் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதையும் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு ஆகும். முக்கியமாக சமூக நிகழ்வுகள், மற்றவருடன் பழகுதல் ஆகியவற்றில் பிரச்சனையைஇந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிடம் நம்மால் பார்க்க முடியும். குறிப்பாக முடிவெடுக்கும் தன்மையும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளும் தன்மையும் மற்றவர்களை விட இவர்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கும்.
மேலும் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் அவர்கள் அவ்வளவு அக்கறை காட்ட மாட்டார்கள். சரியான உணவுப் பழக்கத்தை கடை பிடிக்காத காரணத்தினால் இவர்களுக்கு மிக விரைவிலேயே சொத்தைப்பல் ஆகியவை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. மேலும் மிக இயல்பான செயல்முறைகளான கைத்தட்டுதல் கூட இவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக மாறிவிடும்.
இவற்றை அடுத்து இவர்களின் பேச்சில் சில பிரச்சனைகள் உண்டாகும். பேசுவதிலும், எழுதுவதிலும், சரியான வார்த்தையை தேர்வு செய்வதிலும் அவர்களுக்கு பிரச்சனை இருக்கும். பொருட்களின் பெயர், நபர்களின் பெயர் ஆகியவற்றை கொடை இவர்கள் அடிக்கடி மறந்து விடுவார்கள். மேலும் சில வார்த்தைகளின் பொருளையும் இவர்கள் மறந்து விடுவார்கள். நோய் முற்றிய நிலையில் இருக்கும் நோயாளிகள் மொத்தமாக அமைதியாக இருப்பதற்கு காரணமும் இதுதான். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் பெரும்பாலும் 7-13 வருடங்கள் வரை தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான காரணங்கள்:
மூளையில் அசாதாரணமான புரதங்களின் தேக்கத்தினால் அங்குள்ள நியூட்ரான்கள் வித்தியாசமாக செயல்பட்டு இந்த குறைபாடை உண்டாக்குகின்றன. சில சமயங்களில் மரபு வழி காரணங்களினாலும் இந்த குறைபாடு உண்டாகலாம்.
எவ்வாறு கண்டறிவது:
நோயாளியின் வரலாறு மற்றும் அவர்கள் உடல்நிலை பற்றிய ஒரு அறிக்கையை முதலில் தயார் செய்ய வேண்டும். அதன் பிறகு எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் இந்த குறைபாடு இருப்பதை உறுதி செய்யலாம்.
Also Read : Dementia | 2050-க்குள் டிமென்ஷியா பாதிப்பு 3 மடங்கு அதிகரிக்கலாம்- இளம் வயதினரும் பாதிக்கப்படும் அபாயம்!
சிகிச்சை:
இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறை தற்போது வரை கண்டறியப்படவில்லை. நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் சில மருந்துகளை அவர்களுக்கு அளிக்கலாம். மேலும் அவர்களது பேச்சில் ஏற்படும் குறைபாடு சரி செய்வதற்கும் சில சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Brain Health, Dementia Disease, Health