முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஃபெர்டிலிட்டி ட்ரீட்மென்ட்டில் இருக்கும் பெண்களுக்கு மன ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை எப்படி கையாளுவது..? நிபுணரின் டிப்ஸ்..!

ஃபெர்டிலிட்டி ட்ரீட்மென்ட்டில் இருக்கும் பெண்களுக்கு மன ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை எப்படி கையாளுவது..? நிபுணரின் டிப்ஸ்..!

Infertility treatment

Infertility treatment

கருவுறுதல் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் சோகம், விரக்தி, கவலை, குற்ற உணர்வு, கோபம் மற்றும் பல நேரங்களில் மனச்சோர்வு போன்ற பலவித உணர்ச்சிகளை அனுபவிக்கிறார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

எய்ம்ஸ் (AIIMS) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி, ஏறக்குறைய திருமணமான 10-15% இந்திய தம்பதிகள் கருவுறுதல் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு குழந்தை பெற்று கொள்ள போராடுகிறார்கள். இந்த சூழலில் குழந்தை பெற்று கொள்ள முடியாத காரணத்தால் சமூகத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தையின்மை பிரச்னையை போக்க பல அதிநவீன சிகிச்சைகள் வந்து விட்டாலும் கூட, கருவுறுதலுக்காக சிகிச்சையை நாடும் ஒருவர் எவ்வித வருத்தமோ அல்லது அதிர்ச்சியையோ அனுபவிக்காமல் இருக்கும் அளவிற்கு நிலைமை இல்லை. கருவுறுதல் சிகிச்சை எடுத்து கொள்ளும் போது உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும் போராடும் பெண்களுக்கு எவ்வாறு அவருக்கு அன்புக்குரியவர்கள் ஆதரவளிக்க முடியும் மற்றும் சிகிச்சையில் உள்ள பெண்கள் தங்களை தாங்களே எப்படி சமாளித்து கொள்வது என்பதை பற்றி டாக்டர் வந்தனா ராமநாதன் மற்றும் டாக்டர் சீமா பி நம்பியார் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

கருவுறுதல் சிகிச்சையில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சி ரீதியிலான அதிர்ச்சியை சமாளிப்பது எப்படி?

இதற்கு பதிலளித்த டாக்டர் ராமநாதன், கருவுறுதல் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் சோகம், விரக்தி, கவலை, குற்ற உணர்வு, கோபம் மற்றும் பல நேரங்களில் மனச்சோர்வு போன்ற பலவித உணர்ச்சிகளை அனுபவிக்கிறார்கள். இந்த சூழலில் சிகிச்சையில் இருக்கும் பெண்களுக்கு மருத்துவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் நிபந்தனையற்ற ஆதரவு மற்றும் அன்பை வழங்க வேண்டும். கருவுறுதல் சிகிச்சையில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகரமான பாதிப்புகளை சமாளிக்க டாக்டர் வந்தனா ராமநாதன் பரிந்துரைக்கும் சில வழிகள் இங்கே...

- கருவுறுதல் சிகிச்சையால் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தகுந்த நிபுணர்களிடம் கவுன்சிலிங் செல்லலாம். ரிலாக்சேஷன் மற்றும் மைண்ட்ஃபுல்னஸ் டெக்னிக்ஸ் (Mindfulness techniques) சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் பெரும் உதவி செய்கிறது.

- எமோஷனலாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க மற்றொரு வழி சுய-கவனிப்பு (Self Care) ஆகும். பாதிக்கப்பட்ட பெண்கள் நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். கடந்த காலத்தை மறந்துவிட்டு நடந்து கொண்டிருப்பதிலும், நடக்க போவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

- Self- love-ஐ பயிற்சி செய்வது நம்பிக்கை மற்றும் மதிப்பையும் அதிகரிக்க மற்றொரு சிறந்த வழியாகும். தொடர்ந்து வேலைகளில் கவனம் செலுத்தினால் அது சாதித்த உணர்வை பெற்று உற்சாகமாக இருக்க உதவும். தவிர சிகிச்சையில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கை துணை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருக்க வேண்டும். உடல் ரீதியாக செய்ய கூடிய வேலைகளில் உதவுவதோடு அவரது பேச்சை காது கொடுத்து கேட்பது முதல் பல வழிகளில் ஆதரவாக இருக்கலாம் என்கிறார்.

கருவுறுதல் சிகிச்சையால் ஏற்படும் மனரீதியிலான பாதிப்புகளை சமாளிப்பது எப்படி.?

இதற்கு பதிலளித்த டாக்டர் நம்பியார், கருவுறாமை என்பது ஒருவரின் மன ஆரோக்கியத்திலும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கருவுறுதல் சிகிச்சை பெறும் பெண்கள் பெரும்பாலும் கண்ணுக்கு தெரியாத துயரத்தை அனுபவிக்கிறார்கள் என குறிப்பிட்டார். கருவுறுதல் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் பெண்களுக்கு ஏற்படும் துயரமானது அவர்களுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்திய மக்கள் தொகையில் சுமார் 3.9% - 16.8% வரை Primary infertility பாதிப்பு காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 12-18 மில்லியனுக்கும் அதிகமான தம்பதிகள் கருவுறாமை பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றார். கருவுறுதல் சிகிச்சை பெறும் பெண்களால் மட்டுமே அவர்களுக்கு மன ரீதியாக ஏற்படும் அதிர்ச்சி அல்லது பாதிப்புகளை சமாளிக்க முடியாது. அவரது குடும்பத்தினர், அலுவலகம் என அவர்களின் இயல்பு வாழ்க்கையில் அங்கம் வகிப்போர் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என கூறுகிறார்.

Also Read | குழந்தையின்மை பிரச்சனையால் மன வேதனையை அனுபவிக்கிறீர்களா..? நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இதுதான்!

நிறுவனங்கள் எவ்வாறு உதவலாம்.?

  • கருச்சிதைவு ஏற்பட்டால் அதற்காக விடுமுறை (Miscarriage leaves) அளிக்கலாம்.
  • விடுமுறை போன்ற உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கலாம். ஒரு பணியாளர் தனது மேலாளர் அல்லது அலுவலகத்தில் இருக்கும் HR-இடம் பேச கூடிய நேர்மறையான சூழலை உருவாக்கி தரலாம்.
  • சுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாட கூடிய இலவச ஆலோசனைகளுக்கான இலவச அணுகலை பெண் ஊழியர்களுக்கு வழங்கலாம்.

top videos

    குழந்தை பேறு தாமதமாக பெண்களே காரணம் என்ற களங்கத்தை உடைத்து கருவுறுதல் சிகிச்சை பெறும் பெண்களுக்கு ஆதரவான சூழலை குடும்பத்தினர் வழங்க வேண்டும்.

    First published:

    Tags: Fertility, Fertility treatment, Infertility