உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தோல்வியா..? இந்த விஷயங்களை ஃபாலே பண்ணுங்க..!
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தோல்வியா..? இந்த விஷயங்களை ஃபாலே பண்ணுங்க..!
உடல் எடை குறைப்பு
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் நேரமின்மை தான். மாலை நேர உடற்பயிற்சிகள் சவாலானதாக இருந்தால், உங்கள் வொர்க்அவுட்டை முடிக்க சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் பலரது தீர்மானங்கள் மற்றும் குறிக்கோள்களில் முக்கியமான ஒன்று உடல் எடையைக் குறைப்பது என்பது தான். ஆனால் என்ன? இந்த விஷயங்களை நிச்சயம் அனைவராலும் முறையாக நிறைவேற்ற முடியாமல் தோல்வியைத் தான் சந்திக்கும் நிலை ஏற்படும். இதுப்போன்று நீங்களும் தோல்வியைச் சந்தித்துள்ளீர்களா? இனி எவ்வித கவலையும் வேண்டாம். இந்த வழிமுறைகளை நீங்கள் முறையாக மேற்கொண்டாலே போதும் என்கிறார் நிபுணர்கள்.
உடல் எடையைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:
உடல் எடையைக்குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அதிக நேரம் நாம் உடற்பயிற்சிகளை பலர் மேற்கொள்வார்கள். ஆனால் இச்செயல் முற்றிலும் தவறு. எனவே இந்தாண்டில் நீங்கள் நினைத்துள்ள தீர்மானங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் எந்தவொரு செயலையும் அவசர அவசரமாக செய்ய வேண்டாம். இதற்கு மாறாக தினமும் 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
இதோடு மதிய உணவு அல்லது இரவு உணவில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும். இது உங்களுடைய உடல் எடையைக்குறைப்பில் பயனுள்ளதாக இருக்கும்.
ஆரம்பத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது ,உடல் வலி ஏற்படும். குறிப்பாக புதிதாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு 2 நாள்களாவது வலி இருக்கும் என்பதால், எதையும் அதிகமாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக புதிய உடற்பயிற்சிகளைச் செய்யும் போது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளவும்.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் நேரமின்மை தான். மாலை நேர உடற்பயிற்சிகள் சவாலானதாக இருந்தால், உங்கள் வொர்க்அவுட்டை முடிக்க சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். எனவே பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள முடிவெடுத்தால் அதிகாலையில் எழுந்திருப்பது நல்லது.
இதோடு எந்த நேரத்தில் சமைக்க வேண்டும், பணிகளை எப்போதும் முடிக்க வேண்டும், எப்போது விளையாட வேண்டும் என்று திட்டமிடுதலில் கவனம் செலுத்த வேண்டும். மனதளவில் நீங்கள் சோர்வாக இருக்கும் போது எதையும் செய்ய முடியாது. ஆனால் இந்த நேரத்திலும் நீங்கள் திட்டமிட்டுள்ளப்படி உங்களது பணிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். நேரில் சந்திக்க முடியவில்லை என்றாலும் இதுப்போன்றவர்களுடன் ஆன்லைனின் வாயிலாகவும் நீங்கள் தொடர்புக்கொண்டு உதவிகளை நீங்கள் கேட்கலாம் அல்லது உங்களது முயற்சிகளுக்கு அவர்கள் ஒத்துழைக்கும் சூழல் ஏற்படும்.
இதோடு உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும் போது உங்களின் திட்டமிடல் நிச்சயம் நிறைவேறும்.எனவே நீங்கள் இதுப்போன்ற விஷயங்களை மேற்கொண்டாலே உங்களின் கனவு நினைவாகும் மற்றும் தீர்மானங்களை எவ்வித இடையூறும் இல்லாமல் நிறைவேற்ற முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.