முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உஷார்... செல்போன் அதிகமா யூஸ் பண்ணுனா... மருத்துவர்கள் கூறுவது என்ன?

உஷார்... செல்போன் அதிகமா யூஸ் பண்ணுனா... மருத்துவர்கள் கூறுவது என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

அளவுக்கு அதிகமான செல்போன் பயன்பாடு தீவிர உடல் நல பாதிப்புக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவருக்கு திடீர் திடீரென்று மயக்கம் வந்தாலோ, சுற்றி உள்ள அனைத்து பொருள்களும் நிலையாக இல்லாமல் சுழன்றாலோ எப்படி ஒரு அச்ச உணர்வு ஏற்படும்? அப்படி ஒரு சூழலை கடந்த சில நாட்களுக்கு முன் எதிர்கொண்டிருக்கிறார் Fenella fox என்ற, இன்ஸ்டாகிராமில் பிரபலமான இளம்பெண் ஒருவர். திடீர் மயக்கம், அதிக தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் நடக்க முடியாத நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரோக்கியத்துடன் இருந்த அவருக்கு திடீர் உடல் நல கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய்ந்ததில் நாள் ஒன்றுக்கு 14 மணி நேரத்திற்கும் மேல் அவர் செல்போன் பயன்படுத்தியது தெரிய வந்தது.

பொதுவாக, சிலருக்கு காரணமே இல்லாமல் தலைசுற்றும், மயக்கம் வருவது போல தலை கிறுகிறுக்கும். சுற்றியிருக்கும் மனிதர்களும் பொருள்களும் சுழல்வதுபோலத் தெரியும். எந்தவித நோய்த்தாக்குதலும் இல்லாதபோது எதற்காக இப்படித் தலைச்சுற்றுகிறது என்று குழப்பமாக இருக்கும். இந்தப் பிரச்னையை மருத்துவர்கள் `VERTIGO’ என்கிறார்கள். குறிப்பாக இரு காதுகளுக்கு இடையிலான சம நிலை தவறும் பட்சத்திலோ, கழுத்து நரம்பில் பிரச்சனை ஏற்படும் பட்சத்திலோ இது ஏற்படலாம். அதுபோல, தொடர்ந்து செல்போன், கணினி போன்றவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் மயக்கம், தலைசுற்றல் போன்றவற்றை டிஜிட்டல் வெர்டிகோ என்று புதிய சொல்லாடல் கொண்டு அழைக்கிறார்கள். நம் உடல் நிலையாக இருக்கும் போது, கண்கள் அதிகப்படியான நகர்தலை திரையில் தொடர்ந்து பார்ப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

செல்போன் அதிகம் உபயோகிப்போர் டிஜிட்டல் வெர்டிகோவிற்கான லேசான அறிகுறிகள் தென்படும்போதே மருத்துவர்களை அணுகி அதனை சரி செய்வது நல்லது என்றும், இல்லையெனில் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். செல்போன், டாப்லெட், கணினி போன்றவற்றின் திரைகளை அதிகம் பார்க்காமல் இருப்பதன் மூலம் டிஜிட்டல் வெர்டிகோ வராமல் தற்காத்துக்கொள்ளலாம் என்றும், பணி நிமித்தமாக பயன்படுத்த வேண்டியிருந்தால் குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு ஒருமுறையாவது திரையை பார்ப்பதில் இருந்து சற்று இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே! என்றார் திருமூலர். அந்த வகையில், வளமான வாழ்க்கைக்கு நலமான உடலே அடித்தளமாக இருக்கும் நிலையில் அந்த உடல் அரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Mobile Phone Users