முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கருமுட்டைகளை உறைய வைக்கும் நடிகைகள்.. விருப்பப்படும் போது குழந்தை பெற்றுக்கொள்ள உதவும் மாற்றுவழி..!

கருமுட்டைகளை உறைய வைக்கும் நடிகைகள்.. விருப்பப்படும் போது குழந்தை பெற்றுக்கொள்ள உதவும் மாற்றுவழி..!

மாதிரி படம்

மாதிரி படம்

பாலிவுட் நடிகை கஜோலின் தங்கை மற்றும் நடிகையான தனிஷா முகர்ஜி, முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரும் தங்களுடைய முப்பதுகளில் கருமுட்டைகளை உறைய வைத்திருக்கிறார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீப காலமாக பிரபலங்கள், நடிகைகள் என்று வெளிநாட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் இருப்பவர்கள் கூட பின்னாளில் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தங்களுடைய கரு முட்டைகளை ஃபிரீஸ் செய்கிறார்கள். பரபரப்பான வாழ்க்கை சூழலில் 20 மற்றும் 30 களில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் தங்களுக்கு எப்போது சௌகரியமாக இருக்கிறதோ அப்போது உறைய வைக்கப்பட்ட கருமுட்டையில் பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள வசதியாக இருப்பதாக கூறுகிறார்கள். இதில், பாலிவுட் நடிகை கஜோலின் தங்கை மற்றும் நடிகையான தனிஷா முகர்ஜி, முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரும் தங்களுடைய முப்பதுகளில் கருமுட்டைகளை உறைய வைத்திருக்கிறார்கள்.

பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருப்பது உலகறிந்த செய்தி தான். தாமதமாக குழந்தைப் பெற அல்லது மகப்பேறு சார்ந்த பிரச்சனைகளுக்கு வேறு தீர்வுகள் இல்லையா என்பது இன்றைய சமூகத்தில் மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது! உலக அளவில் அறியப்பட்ட பிரபலங்களான ஜெனிபர் ஆனிஸ்டன், பிபாஷா பாசு, ஹிந்தி தொலைக்காட்சி உலகின் முடிசூடா ராணியாக வரும் ஏக்தா கபூர் உள்ளிட்ட பலரும், ஃபெர்டிலிட்டி என்று வரும் போது பல விதமான பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளார்கள். குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் இவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை இவர்கள் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.

இப்போது உலகம் எந்த அளவுக்கு நவீனமாக மாறி வந்தாலுமே, குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டால், ஒரு பெண்ணால் இயற்கையாக கருத்தரிக்க முடியாத சூழல் இருந்தால் அல்லது தாமதம் செய்தால், அதை இந்த சமூகம் வேறு கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது. சாதாரணப் பெண்களுக்கு, இத்தகைய பிரபலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக பேசுவது நம்பிக்கை அளிப்பதாகவும், கருத்தரிப்பதில் உள்ள சிக்கல்களை எதிர்கொள்ளும் துணிச்சலையும் அளிக்கிறது என்று கூறலாம்.

நோவா ஐவிஎப் பெர்டிலிட்டி சென்டரின் ஃபெர்டிலிட்டி சிறப்பு மருத்துவரான சந்தீப் தல்வார் இதைப் பற்றி கூறுகையில், “நாம் மில்லினிய நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே 20 மற்றும் 30 களில் இருப்பவர்கள் தங்களுடைய வேலை மற்றும் கேரியரில் கவனம் செலுத்தி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும், வலுவாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். எனவே குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தி, குழந்தையை வளர்ப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்ளவேண்டுமென்பதில் முக்கியத்துவம் கொடுத்து அதற்காக உழைக்கிறார்கள்.

ஒரு நபரின் ‘பயோலாஜிக்கல் கிளாக்’ என்பது இதில் ஒரு முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது அல்லது சிக்கல் ஏற்படும் என்ற சூழல் இருந்தது. ஆனால், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் முன்னேற்றங்களும், வளர்ச்சியும் இத்தகைய சவால்களை எளிதில் எதிர்கொள்ளவும் அதற்கான தீர்வுகளை வழங்கவும் உதவியாக இருக்கிறது. உதாரணமாக கருமுட்டைகளை அல்லது எம்ரியோவை உறைய வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்வுகள் இதற்காக இருக்கின்றது” என்று கூறுகிறார்.

கரு முட்டைகளை ஏன் உறைய வைக்கிறார்கள்?

பொதுவாகவே குழந்தைகளை தாமதமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டையை, மருத்துவ தொழில்நுட்பம் பயன்படுத்தி உறைய வைக்கலாம். அறிவியல்பூர்வமான ‘ஊசைட் கிரையோபிரிசர்வேஷன்’ (Oocyte Cryopreservation) என்பது இதன் பெயர் ஆகும். இது கருமுட்டைகளை உறைய வைப்பது என்று குறிப்பிடப்படுகிறது. இதில் முட்டைகளை உறையவைக்க, ஒரு பெண்ணுக்கு மருந்துகள் செலுத்தப்பட்டு அவருடைய ஓவரீஸ் தூண்டி விடப்படும். இதன் மூலமாக குறிப்பிட்ட அளவிலான முட்டைகள் ஒரு பெண்ணின் கருப்பையில் உருவாகும்.

அவை கருப்பையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட டெம்பரேச்சரில் உறைய வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் ஒரு பெண்ணோ அல்லது ஒரு தம்பதியோ இப்போது எனக்கு குழந்தை வேண்டாம் நான் தேவைப்படும் பொழுது இந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்கிறேன், என்று நினைப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பும் பொழுது உறைய வைக்கப்பட்ட கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற இந்த முறை உதவியாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல், ஒரு சில மருத்துவ காரணங்களால் குழந்தை பெற முடியாமல் போகும் சாத்தியங்கள் இருந்தால், அவர்கள் முட்டைகளை உறைய வைக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெண்களுடைய மாதவிடாய் தாமதமாகும் அல்லது நிற்கும் பொழுது உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகள், கருத்தரிப்பதில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனவேதான் பல நடிகைகளும் தங்களுடைய முப்பதுகளில் கருமுட்டைகளை உறைய வைக்கிறார்கள்.

Also Read | IVF முறையில் கரு வளர்ச்சி தோல்வியுற காரணம் இதுதான்... ஆய்வு முடிவுகள்

குழந்தை பெற்றுக்கொள்ள மாற்று வழிகள் உள்ளனவா?

ஒரு பெண்ணுக்கு மருத்துவ காரணங்களுக்காக அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக குழந்தை தாமதமாக பெற்றுக்கொள்ள விரும்பும் சூழ்நிலையில், அவருடைய கருப்பையில் இருந்து கருமுட்டைகளை எடுத்து உறைய வைத்து பின்னர் பயன்படுத்தலாம் இது கருமுட்டை உறைய வைத்தல் ஆகும்.

எம்ப்ரியோ ஃபிரீசிங் (Embryo freezing) : பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களும் அவர்களின் விந்தணுக்களையும் எடுத்து உறைய வைக்கலாம். அதில் ஒன்றுதான் எம்ப்ரியோ ஃபிரீசிங் என்று கூறப்படுகிறது. அதாவது கருவை உறைய வைப்பது!

இதற்கு பெண்ணின் கருப்பையில் இருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் ஆணிடமிருந்து பெறப்பட்ட விந்தணு ஆகிய இரண்டுமே தேவை. பெண்ணின் கருமுட்டைக்குள் விந்தணு செலுத்தப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு, -196 டிகிரி செல்சியஸில் லிக்விட் நைட்ரஜனில் உறைய வைக்கப்படும். தம்பதிகள் விருப்பப்படும் சமயம் உறையவைக்கப்பட்ட கருவிப் பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

செயற்கை கருத்தரிப்பு (Assisted Reproductive): நீங்கள் கருமுட்டைகளை உறைய வைக்க வேண்டும் அல்லது கருமுட்டை மற்றும் விந்தணுவை சேர்த்து உறைய வைக்க வேண்டும் என்ற விருப்பத்தை தேர்வு செய்யவில்லை; ஆனால் உங்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் செயற்கை கருத்தரிப்பு முறைகளை தேர்வு செய்யலாம். உதாரணமாக IVF.

IVF சிகிச்சைமுறைகளில் பெண்ணின் உடலில் இருந்து பல கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு பார்ட்னரின் விந்தணுக்கள் பெறப்படும். மருத்துவ ஆய்வகத்தில், முட்டையில் விந்தணு சேர்க்கப்பட்டு, குறிப்பிட்ட நாட்கள் வரை மருத்துவ கண்காணிப்பில் இருக்கும். கரு எந்த அளவுக்கு ஆரோக்கியமாக வளர்கிறது என்பதைப் பார்த்து, பின்னர், ஆரோக்கியமாக வளர்ந்த பிறகு அவை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் வைக்கப்படும்.

இதில் IUI என்று ஒரு மாற்று செயற்கை கருத்தரிப்பு முறையும் இருக்கிறது. இதில் செயற்கையாக ஓவிலேஷன் தூண்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட விந்தணுவை நேரடியாக பெண்ணின் கருப்பைப் பாதையில் செலுத்தி கரு உருவாக வைக்கும் முறை ஆகும்.

ஓவெரியன் சப்ரஷன் (Ovarian Suppression): பொதுவாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்த வேண்டும் என்றால் மேற்கூறிய வழிகள் தான் அதிகமாக பயன்படுத்தப்படும். ஆனால் அதிகம் அறியப்படாத ஒரு முறைதான், ஓவரியன் சப்ரஷன் என்று கூறப்படுகிறது. இந்த முறையில், குறிப்பிட்ட ஹார்மோன்களை பயன்படுத்தி பெண்ணுக்கு கருமுட்டைகள் மெச்சூர் ஆகாமல் அல்லது உற்பத்தி ஆகாமல் தடுக்கப்படும். அதாவது தற்காலிகமாக கருப்பையின் செயல்பாடு நிறுத்தப்படும்.

இதன் மூலம் முட்டைகள் உற்பத்தியாகமால் இருந்தால் எதிர்காலத்தில் இந்த சிகிச்சை நிறுத்தப்பட்ட பிறகு, முட்டைகள் இயற்கையாக உருவாக தொடங்கும். உதாரணமாக கேன்சர் தெரப்பி அல்லது வேறு சில தீவிரமான சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

top videos

    மேற்கூறிய மருத்துவ முறைகள் தவிர்த்து இயற்கையாகவே கருத்தரிப்பை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, போதுமான அளவு தூக்கம், தூக்கத்தைத் தவிர்க்காமல் இருப்பது மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படும் சப்ளிமென்ட் உள்ளிட்டவற்றை தவறாமல் எடுத்துக் கொள்வது ஆகியவை ஃபெர்டிலிட்டியை அதிகரிக்க உதவும்.

    First published:

    Tags: Fertility possibilities, Fertility treatment, IVF Treatment