முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தில் உடல் எடை ஏற்படுத்தும் சிக்கல்கள்.. அபாயத்தை தவிர்க்க பிரபல நிபுணரின் டிப்ஸ்

கர்ப்ப காலத்தில் உடல் எடை ஏற்படுத்தும் சிக்கல்கள்.. அபாயத்தை தவிர்க்க பிரபல நிபுணரின் டிப்ஸ்

கர்ப்பகால எடை பராமரிப்பு

கர்ப்பகால எடை பராமரிப்பு

கர்ப்பமாக இருக்கும் பெண் என்றாலோ அல்லது கர்ப்பம் தரிக்க திட்டமிட்டிருக்கும் அல்லது முயற்சிக்கும் பெண் என்றாலோ வாழ்க்கை முறை, உணவு முறை என பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த பட்டியலில் இருக்கும் மற்றொரு முக்கியமான ஒரு விஷயம் உடல் எடை.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்ப்பமாக இருக்கும் பெண் என்றாலோ அல்லது கர்ப்பம் தரிக்க திட்டமிட்டிருக்கும் அல்லது முயற்சிக்கும் பெண் என்றாலோ வாழ்க்கை முறை, உணவு முறை என பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த பட்டியலில் இருக்கும் மற்றொரு முக்கியமான ஒரு விஷயம் உடல் எடை.

ஆம், குழந்தைக்கு முயற்சிக்கும் ஒரு பெண் அல்லது கர்ப்பமாக இருக்கும் பெண் தனது உடல் எடையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் பல பெண்கள் கருத்தரித்திருக்கும் போது அல்லது இந்த முயற்சியின் போது அதிக உடல் எடை அல்லது குறைந்த உடல் எடை காரணமாக பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

நீங்கள் கருத்தரிக்கும் முயற்சியில் இருக்கும் பெண் என்றால் உங்களது அதிக அல்லது குறைந்த உடல் எடை கருத்தரிக்கும் வாய்ப்புகள் அல்லது வயிற்றில் இருக்கும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை கூட பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.! உடல் எடை சார்ந்த பிரச்சனைகள் எப்படி கர்ப்பத்தை பாதிக்கிறது என்பதை பற்றி பிரபல டயட்டிஷியன் மனோலி மேத்தா தனது இன்ஸ்டாவில் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதிக எடையால் கர்ப்பத்திற்கு ஏற்படும் சிக்கல்...

கருத்தரிக்கும் முயற்சியில் இருக்கும் ஒரு பெண் அதிக எடையுடன் இருப்பது சிக்கலை ஏற்படுத்தலாம். ஒரு பெண்ணின் பாடி மாஸ் இன்டக்ஸ் அதாவது BMI-ஐ கருத்தில் கொண்டு அந்த பெண் அதிக எடையுடன் இருக்கிறாரா என்பதை மருத்துவர்கள் பார்க்கிறார்கள். BMI-யின் அளவு 30-ஐ தாண்டினால், அது ஒழுங்கற்ற ஓவலேஷன் அபாயத்தை ஏற்படுத்த கூடும். இது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைப்பதோடு, PCOS பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. இதனால் கருமுட்டைகளின் தரம் பாதிக்கப்படுவதோடு ஹார்மோன் சமநிலையின்மை பாதிப்பு ஏற்படவும் வழிவகுக்கும். பல நிகழ்வுகளில் ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவுகளுக்கு, அதிக உடல் எடையுடன் இருப்பது காரணமாக இருக்கிறது. அதிக எடை காரணமாக ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டால், அது ஆண் ஹார்மோன்கள் மற்றும் oestrogen உற்பத்தியும் அதிகரிக்க கூடும்.

குறைந்த எடையால் கர்ப்பத்திற்கு ஏற்படும் சிக்கல்...

கர்ப்பமாக முயற்சிக்கும் அல்லது கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் மட்டுமல்ல குறைந்த எடையுடன் இருந்தாலும் கர்ப்பத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். BMI லெவல் 18.5-க்கும் குறைவாக இருக்கும் பெண்களுக்கு, குறைந்த உடல் எடை மாதவிடாய் சுழற்சியை நேரடியாக பாதிக்கும் என்கிறார் நிபுணர் மனோலி மேத்தா. எடை குறைவாக இருப்பது பெண்ணின் மாதவிடாயை ஒழுங்கற்றதாக மாற்றுவதோடு இனப்பெருக்க அமைப்பையும் பாதிக்க கூடும். எனவே எடை குறைவாக இருப்பவர்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் நேரத்தில் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


என்ன செய்யலாம்.?

எப்போதுமே ஆரோக்கியான எடையை பராமரிப்பது கருமுட்டைகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, மாதவிடாய் சுழற்சியை சீராக்கி கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
கர்ப்பம் தரிக்க வேண்டும் என திட்டமிட தொடங்கும் சில மாதங்களுக்கு முன்பே டயட்டில் சில ஆரோக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டும். டயட்டில் ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து சேர்ப்பதோடு உங்கள் உடலை வலுவாக்க தினசரி தவறாமல் ஒர்கவுட்ஸ்களில் ஈடுபட வேண்டும்.
ஒர்கவுட்ஸ் செய்வது அவசியம் தான் என்றாலும் துவக்கத்திலேயே தீவிர பயிற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். படிப்படியாக பயிற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவில் உடலில் ஆரோக்கியமான மாற்றங்களை காணலாம்.
ஆரோக்கியமான டயட் மற்றும் ஒர்கவுட்ஸ்களில் ஈடுபடும் முன் அடிப்படை உடல்நல பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த உரிய மருத்துவரை அணுகவும். மருத்துவர்களின் சரியான வழிகாட்டுதல் கருத்தரிக்க மற்றும் கர்ப்ப காலத்தை ஆரோக்கியமாக கடக்க உதவும்.
கர்ப்பகாலத்தில் நீங்கள் பின்பற்றும் ஆரோக்கியமான டயட்டை பிரசவத்திற்கு பிறகும் பின்பற்றினால் எதிர்காலத்தில் பல நோய்களை தவிர்க்கலாம்.
First published:

Tags: Overweight women, Pregnancy, Pregnancy Risks