கோடைக்காலம் வந்தாச்சு. வெயிலும் 100 டிகிரிக்கு மேல் அடித்து நம்மை பாடாய்படுத்துகிறது. நடந்து சென்றாலும் சரி, பைக், கார் போன்ற வாகனங்களில் சென்றாலும் சரி.. வீட்டிற்கு வந்தவுடனே எப்படா.. தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நினைப்புடன் வருவோம். அப்படி தண்ணீர் குடித்தால் மட்டும் தான் நம்மால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க முடியும் என்று நினைப்போம். ஆனால் இது சிறந்த வழி அல்ல என்றும், நீங்கள் வெயில் காலத்தில் உங்களது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் இதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இதுக்குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், வீடியோ ஒன்றைப் பகிர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் கோரி ரோட்ரிக்ஸ் , ஒரு நாளைக்கு கணிசமான அளவு தண்ணீர் குடிப்பது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், எடை இழப்பு, தோல் மற்றும் முடி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பிறவற்றிற்கும் உதவுகிறது. எனவே, தண்ணீருக்கு பல நன்மைகள் இருக்கும்போது, அதிகபட்ச நன்மைக்காக அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? என்பதை தற்போது நாம் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
View this post on Instagram
நம்முடைய உடலில் தண்ணீர் சத்து இல்லாத போது நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. மயக்கம் வருவது போன்ற நிலையில் தான் அதிகளவு தண்ணீரை நாம் தேடுவோம். நீங்கள் வெறும் தண்ணீரை மட்டும் குடிக்கும் போது, சிறுநீர் வழியாக சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்களை தண்ணீராக வெளியேற்றுகிறீர்கள். இதனால் நம்மை அறியாமலே உடல் பலவீனமாகிவிடும். இதனால் தான் தாகத்திற்கு நாம் வெறும் தண்ணீர் மட்டும் குடிக்காமல் இதோடு சேர்ந்து எலக்ட்ரோல்களை நீங்கள் சேர்க்க வேண்டும்.
எனவே நீங்கள் வெறும் தண்ணீர் மட்டும் குடிக்காமல் அதனுடன் உப்பு,இஞ்சி சேர்த்து சாப்பிடலாம். மேலும் வெயில் காலங்களில் சந்தைகளில் அதிகம் விற்பனையாகும் தர்பூசணி பழங்களையும் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ளலாம். இளநீரை கூட அடிக்கடி பருகலாம். இவை நிச்சயம் உங்களது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
Also Read | கருப்பு தண்ணீர் என்றால் என்ன? ஏன் பிரபலங்கள் இந்த தண்ணீரை குடிக்கிறார்கள் தெரியுமா?
பொதுவாக தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், எடை இழப்பு, தோல் மற்றும் முடி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பிறவற்றிற்கும் தீர்வாக அமைகிறது. எனவே, தண்ணீருக்கு பல நன்மைகள் இருப்பதால் நீங்கள் அதிகபட்ச வெறும் தண்ணீர் குடிப்பதோடு மட்டுமில்லாமல் மேற்க்கூறியுள்ள உணவுப்பொருள்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dehydration, Healthy juice, Hydrating drinks, Minerals, Water