முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பது நல்லதா?- மருத்துவர் சொல்வது என்ன?

வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பது நல்லதா?- மருத்துவர் சொல்வது என்ன?

வெப்பம்

வெப்பம்

Summer heat : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி தாண்டியுள்ளதால் மக்கள் வெப்பத்தை எதிர்கொள்ள தயங்குகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India
top videos

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொடும் நிலையில், பொதுமக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், வெப்பத்தை தணிக்க என்ன செய்ய வேண்டும் என மருத்துவர் சரவண பாரதி அறிவுரை வழங்கியுள்ளார்.

    குளிர்ந்த நீர் குடிப்பதால் உடல் சூடு குறையாது. குளிர்பானங்களை விட பழச்சாறுகளே சிறந்தது. 
    கோடைகால விடுமுறையில் குழந்தைகள் வெளியில் விளையாட செல்லும் பொழுது உச்சி வெயில் எனப்படும் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
    முதியவர்களுக்கு வாந்தி, பேதி ஒரு முறை ஏற்பட்டாலும் உடனே மருத்துவர் அணுக வேண்டும். முதியவர்களிடம் இந்த நேரத்தில் சோடியம் சத்து குறையக்கூடும். எனவே அவர்களுக்கும் இளநீர் மோர் போன்ற நீராகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    வெயில் காலத்தில் பருத்தி ஆடைகள் உடுத்த வேண்டும். முழுக்கை சட்டைகள் அணிவது சிறந்தது. கண்டிப்பாக கொடை எடுத்து செல்ல வேண்டும். நேரடியாக வெயில் தலையில் படுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வது நல்லது.
    குடிநீர் 2.5 லிட்டர் முதல் 3.5 லிட்டர் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். குளிர்ந்த நீருக்கும் சாதாரண நீருக்கும் வித்தியாசம் கிடையாது. எனவே குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்வதால் உடல் கூடுதலாக நீர் சத்து பெறப்போவதில்லை.
    First published:

    Tags: Heat Wave, Summer Heat, Summer tips