முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Anxiety Vs Panic attack : கவலை தாக்குதல் - பீதி தாக்குதல்.. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

Anxiety Vs Panic attack : கவலை தாக்குதல் - பீதி தாக்குதல்.. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

கவலை தாக்குதல் - பீதி தாக்குதல்

கவலை தாக்குதல் - பீதி தாக்குதல்

நோயாளியை அருகில் அழைத்து அமர வைத்து அவர்களை லேசாக வைக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்களை ஆறுதல்படுத்தி வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் கொடுக்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கவலை, மன அழுத்தம், சோகம் போன்ற வார்த்தைகள் ஒரே விதமான பொருள் தருவது போல தோன்றினாலும் இவை அனைத்தும் ஒரே விதமான சொற்கள் அல்ல. பயம், கவலை, மன அழுத்தம் ஆகியவை நமது மனதுடன் தொடர்புடையது. மேலும் இது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக விளைவுகளை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக வெகு வேகமாக இயங்கும் இந்த வாழ்க்கை முறையில் மன அழுத்தம் மற்றும் கவலை ஆகியவை ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்றுதான். அதே சமயத்தில் அளவுக்கதிகமாக கவலையும் மன அழுத்தமும் ஒருவருக்கு அதிகரிக்கும் போது அவை வேறொரு புதிய மனநல பிரச்சனையை உண்டாக்க கூடும்.

இது போன்ற சூழலில் சிலருக்கும் பேனிக் அட்டாக் எனப்படும் பேரச்ச அல்லது பீதி தாக்குதல்கள் ஏற்படுகிறது. ஆனால் உண்மையிலேயே பீதி தாக்குதல்களும் கவலை தாக்குதலும் வெவ்வேறு விதமானவை. அறிகுறிகள் ஒரே போல இருந்தாலும் மற்றும் விளைவுகள் வெவ்வேறானவை

பீதி தாக்குதல் மற்றும் கவலை தாக்குதல்களுக்கு இடையே உள்ள வேறுபாடு!

பீதி தாக்குதல்:

  • தீவிரம்: பீதி தாக்குதல்களின் அறிகுறிகள் மிகவும் தீவிரமானவை. இதனால் அந்த நபர் கிட்டத்தட்ட பித்து பிடித்ததை போல தோன்றுவார். தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்தோ அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளவும் முயற்சி செய்வார்.
  • துவக்கம்: திடீரென்று எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ஒருவர் வெறி பிடித்ததை போல நடந்து கொள்வார்.
  • காலம்: இதன் அறிகுறிகள் பொதுவாகவே 10 நிமிடங்கள் வரை நீடிக்கும் பிறகு மிக விரைவாகவே அடங்கிவிடும்.

இதைத்தவிரவேறு சில அறிகுறிகளும் நோயாளிக்கு ஏற்படலாம்

  • படபடப்பு
  • அதீத இதயத் துடிப்பு
  • அதிக வியர்வை
  • நடுக்கம்
  • மூச்சு விடுவதில் சிரமம்
  • நெஞ்சு வலி
  • அடி வயிற்றில் பிரச்சனை
  • மயக்கமாக உணர்வது
  • லேசான தலைவலி
  • சுய கட்டுபாடின்மை

கவலை தாக்குதல்கள்:

  • தீவிரம்: அறிகுறிகளின் தீவிரமானது வெவ்வேறு விதமாக இருக்கலாம். சில அறிகுறிகள் மிகவும் தீவிரமாகவும் சில மிகவும் லேசாகவும் இருக்கும்
  • துவக்கம்: இதை மெதுவாக ஆரம்பித்து காலப்போக்கில் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு கூட நீடிக்கலாம். மன அழுத்தம் அதிகரித்து அதிகரித்து கிட்டத்தட்ட ஒரு அட்டாக்கை போல மாறிவிடும்
  • காலம்: இதன் அறிகுறிகள் நீண்ட நாட்களுக்கு காணப்படும்.

இதைத்தவிரவேறு சில அறிகுறிகளும் நோயாளிக்கு ஏற்படலாம்..

  • தசைகள் நீட்சி
  • ஞாபகம் மறதி
  • கவன குறைவு
  • தூங்குவதில் பிரச்சனை
  • மயக்கம்
  • ஓய்வில்லாமல் இருத்தல்
  • எரிச்சல்
  • சீரற்ற இதய துடிப்பு
  • மூச்சு விடுவதில் சிரமம்

எவ்வாறு சமாளிப்பது?

அமைதியாக இருக்கவேண்டும்: நோயாளியின் அறிகுறிகளை பார்த்து பயப்படாமல் இருக்க வேண்டும். நீங்கள் அமைதியாக இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட நோயாளியும் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உணர்ந்து அவரும் மனதளவில் அமைதியாக இருப்பார்.

தாக்குதலை பற்றி கூறுங்கள்: இது வெறும் பேணிக் ஆட்டாக் தான் இதைப்பற்றி பயப்பட ஒன்றுமில்லை. இது விரைவில் சரியாகிவிடும். நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று நோயாளிக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். இதுவே அறிகுறிகளை மிக விரைவில் சரியாக்கிவிடும். பொதுவாகவே இந்த பேணிக் தாக்குதல்கள் அரை மணி நேரத்திற்குள்ளாகவே சரியாகிவிடும்.

ஆறுதல்: நோயாளியை அருகில் அழைத்து அமர வைத்து அவர்களை லேசாக வைக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்களை ஆறுதல்படுத்தி வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் கொடுக்கலாம்.

ஆழ்ந்த மூச்சு பயிற்சி: மனதை அமைத்து படுத்துவதற்காக மூச்சு பயிற்சி தியானம் போன்ற பயிற்சிகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு டெக்னிக்கை மட்டும் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக மூச்சுப் பயிற்சி ஈடுபடுவதன் மூலம் வெளியே உள்ள பிரச்சனைகளைப் பற்றி மறந்து மூச்சின் மீது கவனம் செலுத்தலாம்.

மெதுவாக பேச்சு கொடுங்கள்: நோயாளி சற்று சரியான நிலைக்கு வரும் நேரத்தில் அவர்களுடன் பேச்சு கொடுக்கலாம். எதனால் இப்படி நிகழ்ந்தது என்பதை அவர்களிடம் தெளிவாக கேட்டு எறிந்து நோயாளியின் சூழ்நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

தைரியம் கொடுக்க வேண்டும்: அறிகுறிகளினால் நோயாளி மனதளவில் பயந்து போய் இருப்பார். எனவே அவருக்கு தைரியம் கொடுக்கும் விதத்தில் இதுவும் கடந்து போகும் உன்னால் இதை சமாளிக்க முடியும் என்பது போன்ற தைரியமான வார்த்தைகளை அவருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

Also Read | Depression : மனச்சோர்வு எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் காரணங்கள் என்ன..?

மருத்துவ ஆலோசனை: இதற்கான தீர்வை பெறுவதற்காக நோயாளியை மருத்துவ ஆலோசனை பெறுமாறு உற்சாகப்படுத்தலாம். தகுந்த மனநல மருத்துவர் பார்த்து ஆலோசனை செய்யுமாறு அவர்களுக்கு அறிவுரை கூறலாம்.

First published:

Tags: Anxiety, Depression, Panic attack