முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சியா விதை Vs சப்ஜா விதை.. உடல் எடையை குறைப்பதற்கு எது சிறந்தது..?

சியா விதை Vs சப்ஜா விதை.. உடல் எடையை குறைப்பதற்கு எது சிறந்தது..?

சியா விதை Vs சப்ஜா விதை

சியா விதை Vs சப்ஜா விதை

இரண்டு விதைகளிலும் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடையைக் குறைக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சியா மற்றும் சப்ஜா விதைகள் உடல் எடையை குறைப்போர் மத்தியில் மிகவும் பிரபலமானது. ஆனால் இவை இரண்டில் எது உடல் எடையை குறைப்பதில் சிறந்தது என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. உண்மையில் சியா மற்றும் சப்ஜா விதை இரண்டுமே தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன.

இரண்டு விதைகளிலும் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடையைக் குறைக்கிறது. இருப்பினும், பலரால் சியா விதைகள் மற்றும் சப்ஜா விதைகள் இரண்டையும் அடையாளம் காண்பதில் குழப்பிக்கொள்வார்கள். ஏனெனில் இரண்டும் தோற்றத்திலும் ஒத்ததாகவே இருக்கும். ஆனால், நீங்கள் கவனமாகப் பார்த்தால், இரண்டுக்கும் இடையே நிச்சயமாக ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது.

சியா விதையில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகள்

சியா விதைகளில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்

TOI-இன் செய்திகளின்படி, சியா விதைகளில் கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இது பசையம் இல்லாதது. அதாவது இது குளுக்கோஸை அதிகரிக்காது. சாலட்டில் கலந்து சாப்பிடலாம் அல்லது புட்டிங், ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம். 100 கிராம் சியா விதைகளில் 486 கிராம் கலோரிகள் உள்ளன. அதே சமயம் 16.5 கிராம் புரதம், 42 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் 30 கிராம் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. இதனுடன், சியா விதைகளில் பல வகையான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. இதன் காரணமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரிக்கிறது. சியா விதையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் பசி உணர்வு இருக்காது. இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

சப்ஜா விதைகளில் காணப்படும் சத்துக்கள் மற்றும் நன்மைகள்

முதலில் சப்ஜா விதைகள் என்பது துளசி விதைகள் என்பது தெரியுமா..? சியா விதைகள் மற்றும் சப்ஜா விதைகளில் கிட்டத்தட்ட ஒரே அளவு கலோரிகள் உள்ளன. சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைத்த பிறகு சாப்பிடப்படுகிறது. இதில் துளசியின் சுவை கொஞ்சம் இருக்கும். அதனால்தான் இதை எந்த பானத்திலும் கலந்து குடிக்கலாம். 13 கிராம் சப்ஜா விதையில் 60 கலோரி உள்ளது. இது தவிர, 2 கிராம் புரதம், 7 கிராம் கார்போஹைட்ரேட், 2.5 கிராம் ஆரோக்கியமான கொழுப்பு, 3 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. சப்ஜா விதைகளால் ஜீரண சக்தியை மேம்படுத்தலாம். சப்ஜா விதைகளில் பெக்டின் காணப்படுகிறது, இதன் காரணமாக நமக்கு பசியை உண்டாக்காத ஹார்மோன்களை வெளியிட உதவுகிறது.

Also Read : உங்க வயிற்றை க்ளீன் செய்ய வேண்டுமா..? இந்த 3 பானங்களை குடித்து பாருங்க..!

சியா விதைகள் மற்றும் சஹாஜா விதைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு

சியா விதைகள் சாம்பல், பழுப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களின் கலவையாகும். சியா விதைகள் கருப்பு நிறமாக இருக்காது. அதாவது முற்றிலும் கருப்பாக இருக்காது. இதன் வடிவம் பெரிய ஓவல் வடிவத்தில் இருக்கும். மறுபுறம், சப்ஜா விதைகள் முழுமையாக கருப்பு நிறத்தில் இருக்கும். அதன் அளவு சிறியதாகவும் வட்டமாகவும் இருக்கும். இப்படித்தான் இந்த இரண்டு விதைகளையும் அடையாளம் காண முடியும்.

எப்படி சாப்பிடுவது..?

சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம். அப்படியேவும் சாலட் மேல் தூவி சாப்பிடலாம். இதை சுவைக்காக மட்டுமன்றி ஆரோக்கியத்திற்காக எந்த உணவுடனும் கலந்து சாப்பிடலாம். இது 30 முதல் 40 நிமிடங்களில் தண்ணீரில் கலந்து ஊறி விடும். மறுபுறம், துளசி விதைகளை தண்ணீரில் ஊற வைக்காமல் சாப்பிட முடியாது. இது தண்ணீரில் மிக விரைவாக கரைந்தாலும். இதன் சுவை துளசி போன்று இருக்கும்.

top videos

    சியா விதைகள் மற்றும் சப்ஜா விதைகள் இரண்டிலும் உள்ள சத்துக்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தாலும் , எடை குறைப்பதில் இது அதிக நன்மை பயக்கும் . ஆனால் பல ஆய்வுகளில், சியா விதைகள் எடையைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதேசமயம் சப்ஜா விதைகள் பற்றி அதிக ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Chia Seeds, Sabja Seed, Weight loss