முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இளைஞர்களுக்கு மாரடைப்பு அதிகரிக்க இதுதான் காரணமா..? மருத்துவர் தரும் விளக்கம்.!

இளைஞர்களுக்கு மாரடைப்பு அதிகரிக்க இதுதான் காரணமா..? மருத்துவர் தரும் விளக்கம்.!

Heart attack

Heart attack

பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்புகள் போன்றவற்றை உட்கொள்வது, புகைப்பிடித்தல், புகையிலை பயன்பாடு, தாமதமான தூக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல காரணங்களால் இளைஞர்களுக்கு நீரிழிவு, ஹைப்பர்டென்சன் ஆகியவையும், அதன் தொடர்ச்சியாக இதய நோய் ஆபத்துகளும் உருவாகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்பெல்லாம் 60, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மட்டுமே திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் 40, 45 வயதுக்கு உட்பட்ட இளையவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகுதான் இப்படியொரு நிகழ்வு அதிகரித்திருப்பதாக பரவலான சந்தேகம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த, இதயநோய் சிகிச்சை மையமான ஆசிய இதய நிறுவனம் (Asian Heart Institute) மருத்துவமனையில் பணியாற்றும் இதயநோய் சிகிச்சை நிபுணர் ராமகந்தா பாண்டாவிடம் இதுகுறித்து பேசியபோது, இளைஞர்களின் இதயநலன் எதனால் பாதிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

இக்கட்டான சூழல் அதிகரிப்பு : 

மருத்துவர் ராமகந்தா பாண்டா இதுகுறித்து கூறுகையில், “தற்போது இக்கட்டான சூழல் அதிகரித்து வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். அதிக அளவிலான இளைஞர்கள் எங்களின் ஆசிய இதய நிறுவனம் (Asian Heart Institute) மருத்துவமனைக்கு ஆபத்தான இதய நோய்களுடன் வருகின்றனர். இரண்டு காரணங்கள் கவலைக்கு உரியதாக உள்ளன.

முதலில், இதய நோய் கொண்ட இளம் நோயாளிகளுக்கும் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இரண்டாவதாக, தற்போதைய சூழலில் வயதை பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினருமே தங்கள் உடல்நலன் குறித்து விழித்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எந்த சமயத்திலும் இதய நோய் தாக்கலாம். குறிப்பாக இன்றைய வாழ்க்கைச் சூழல் என்பது ஸ்ட்ரெஸ் நிறைந்ததாக மாறியுள்ளது. நீரிழிவு, உடல் பருமன் மற்றும் ஹைப்பர்டென்சன் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் நமக்கு மனமாற்றம் தேவைப்படுகிறது. வெகு விரைவில் இதய நோய்க்கு வழிவகை செய்யும் தவறான வாழ்வியல் பழக்கங்களை கைவிட்டு, தடுப்பு நடவடிக்கைகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இளம் வயதிலேயே இதய நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதைச் செய்தால்தான் கடுமையான விளைவுகளை நாம் தவிர்க்க முடியும்’’ என்று தெரிவித்தார். இதய நோய்க்கான காரணங்கள் மற்றும் பல விஷயங்கள் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். அதை இப்போது பார்க்கலாம்.

இளம் வயதினருக்கு அதிக பாதிப்பு?

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மோசமான உணவு பழக்கங்கள், நார்ச்சத்து உணவுகள் குறைவு மற்றும் அதிகமான மாவுச்சத்து உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்புகள் போன்றவற்றை உட்கொள்வது, புகைப்பிடித்தல், புகையிலை பயன்பாடு, தாமதமான தூக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல காரணங்களால் இளைஞர்களுக்கு நீரிழிவு, ஹைப்பர்டென்சன் ஆகியவையும், அதன் தொடர்ச்சியாக இதய நோய் ஆபத்துகளும் உருவாகின்றன.

என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் ? 

உங்கள் மார்பு பகுதியில் ஏதேனும் வலி, அசௌகரியம் போன்றவை ஏற்பட்டால் அதுகுறித்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். ஏதேனும் வேலைகளை செய்யும்போது அல்லது ஓய்வில் இருக்கும்போது மூச்சிரைப்பு ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யக் கூடாது.

Also Read | ஆண்களைக் காட்டிலும் பெண்கள் நீண்ட ஆயுளுடன் வாழ என்ன காரணம்..? ஆய்வு தரும் விளக்கம்

top videos

    கழுத்து, தாடை, தொண்டை, மேல் வயிறு அல்லது முதுகு போன்ற பகுதியில் ஏற்படுகின்ற மிகுதியான வலி மற்றும் தோள்பட்டை உணர்வின்றி போவது ஆகியவை ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.

    First published:

    Tags: Cardiac Arrest, Heart attack, Heart disease, Heart Failure, Heart health