முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்களை அதிகமாக பாதிக்கும் ’மைக்ரேன் தலைவலி'.. காரணங்களும்.. தவிர்க்கும் வழிகளும்..!

பெண்களை அதிகமாக பாதிக்கும் ’மைக்ரேன் தலைவலி'.. காரணங்களும்.. தவிர்க்கும் வழிகளும்..!

மைக்ரேன்

மைக்ரேன்

டாக்டர் அனுராதா ஹச்.கே, நரம்பியல் ஆலோசகர் , ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை, பெங்களூரு ஸ்ட்ரெஸ் காரணமாக பெண்களுக்கு உண்டாகும் மைக்ரேன் தலைவலி குறித்த தனது நுண்ணறிவைப் பகிர்ந்து கொள்கிறார்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

நீடித்த மைக்ரேன் தலைவலி (Migraine Headache)  என்பது மாதத்தில் குறைந்தபட்சம் 15 நாட்களுக்காவது தலைவலி மற்றும் துடிதுடிக்க வைக்கும் வலி என்ற மருத்துவ நிலையை குறிக்கிறது. மைக்ரேன் தலைவலி காரணமாக குமட்டல், வாந்தி, வெளிச்சத்தை பார்த்தால் கூச்சம், அதிக ஒலியை கேட்டால் எண்ணவோட்டங்களில் தடுமாற்றம் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

மைக்ரேனால் பாதிக்கப்படும் நபர்களில் 90 முதல் 95 சதவீத நபர்களுக்கு இது வாழ்நாள் எல்லாம் நீடிக்கும் பிரச்சனையாக இருக்கிறது. அதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வளரும் பருவத்தில் ஆண்களை ஒப்பிடுகையில் பெண்களுக்கு 2 முதல் 3 மடங்கு அதிகமாக மைக்ரேன் தலைவலி பிரச்சினை உண்டாகிறது. பெண்களுக்கு மைக்ரேன் தலைவலி உண்டாவதில் ஹார்மோன் மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழ்வியல் பழக்க வழக்கங்கள் மற்றும் மரபு ரீதியான காரணங்களால் நீடித்த மைக்ரேன் வலி ஏற்படுகிறது. மங்கலான பார்வை, மூச்சிரைப்பு, ஒருபக்க தலைவலி, வாந்தி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

ஸ்ட்ரெஸ் மற்றும் மைக்ரேன் இடையே உள்ள தொடர்பு என்ன?

மைக்ரேன் தலைவலி உண்டாகுவதற்கான முக்கிய காரணங்களில் ஸ்ட்ரெஸ் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது. பணியிடத்தில் விதிக்கப்படும் இறுதிக்கெடு, குடும்ப பிரச்சினைகள், நிதி நெருக்கடி போன்றவை காரணமாக ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு காரணமாக ஸ்ட்ரெஸ் உண்டாகிறது.

சாப்பிடாமல் பட்டினி கிடப்பது, போதிய உறக்கமின்மை, கவலை, அச்சம், கோபம், மன அழுத்தம், மது அருந்தும் பழக்கம், சாக்லேட் சாப்பிடுவது போன்ற காரணங்களாலும் மைக்ரேன் தலைவலி உண்டாகும். இந்த ஸ்ட்ரெஸ் எப்போதெல்லாம் உண்டாகிறது என்ற கால அளவு சிலருக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. மூளையின் செயல்பாடு மிக அதிகப்படியாக இருக்கும் சூழலில் மைக்ரேன் அட்டாக் வருகிறது.

Also Read | ஒற்றைத் தலைவலி வருவது எதனால்? வகைகள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன?  

மைக்ரேன் தலைவலி மற்றும் ஸ்ட்ரெஸ் பிரச்சினைகளுக்கு பெண்கள் தீர்வு காண்பது எப்படி?

top videos

  மைக்ரேன் தலைவலியை தவிர்க்க பல விதமான உத்திகளை பெண்கள் கையாள முடியும். தினசரி வாழ்வியல் மாற்றங்களின் மூலமாகவே இதனை சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்.

  போதுமான தூக்கம் பெண்களுக்கு தேவையான அமைதி மற்றும் புத்துணர்ச்சியை தரும். தினசரி குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
  மனதுக்கு இதமான இசையை ரசிக்கலாம். இதன் மூலம் உங்கள் ரத்த அழுத்தம் குறையும் மற்றும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படும்.
  தினசரி காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்யலாம். உடலில் ஸ்ட்ரெஸ் உண்டாக்கும் அட்ரிலின், கார்டிசோல் ஹார்மோன்களின் சுரப்பு இதன் மூலம் கட்டுக்குள் வரும்.
  காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  தியானம் செய்வது நல்ல பலனை தரும் மற்றும் தூக்கத்தை மேம்படுத்தும். மனதை ஒருநிலைக்கு கொண்டு வருவதால் ஸ்ட்ரெஸ், கவலைகள் மறையும்.
  First published:

  Tags: Migraine Headache, Women Health