பொதுவாக நமது கூந்தல் ஆரோக்கியம் நம்முடைய டயட், தூங்கும் பழக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த லைஃப் ஸ்டைல் பழக்கம் உட்பட பல காரணிகளுடன் தொடர்புடையது.
அதிக எடை கொண்டிருப்பது அல்லது பருமனாக இருப்பது இதய நோய்கள், மூட்டு வலிகள், ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் குடல் பிரச்சினைகள் போன்ற பல சிக்கல்களுடன் தொடர்புடையது என்பது நமக்கு தெரியும். ஆனால் கூடுதலாக எடை சார்ந்த பிரச்சனைகளுக்கும், முடி உதிர்வுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா.?
பிரபல Gastroenterologist நிபுணரான டாக்டர் பழனியப்பன் மாணிக்கம் தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் கூறியிருப்பதை இங்கே பார்க்கலாம். இன்சுலின்-லைக் க்ரோத் ஃபேக்டர் (IGF-1) என்பது முக்கியமான ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் Hair bulb-ன் வேரில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் இந்த ஹார்மோன் இன்சுலின் போல் செயல்படுகிறது. எனவே இன்சுலின் வேலை செய்யாதபோது IGF வேலை செய்யாமல் போகும். இதனால், முடி வளர்ச்சியும் குறைகிறது என கூறி இருக்கிறார்.
மேலும் ஆண்களில் இடுப்பு சுற்றளவு 90 சென்டி மீட்டருக்கு அதிகமாகவும், பெண்களில் 80 சென்டி மீட்டருக்கு அதிகமாகவும் இருந்தால், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதற்கு காரணமாக இருப்பதாக டாக்டர் பழனியப்பன் மாணிக்கம் கூறியிருக்கிறார். வயிற்றை சுற்றி அதிகப்படியான கொழுப்பு அல்லது தொப்பை உள்ளவர்கள் என்றால், பெரும்பாலும் அவர்களின் உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்தாமல் அல்லது உற்பத்தி செய்யாமல் இருக்கும் வாய்ப்பு 90% உள்ளதாகவும், இதுவே முடி உதிர்வுக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
அதிக உடல் எடை மற்றும் முடி உதிர்வுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி மேலும் சில நிபுணர்கள் கூறியிருப்பதை தற்போது பார்க்கலாம். பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஜஸ்லீன் கவுர் இதுகுறித்து பேசுகையில், பெல்லி ஃபேட்டிற்கும் - ஹேர் லாஸிற்கும் இடையே மறைமுக தொடர்பு உள்ளது. இதற்கு காரணம் முடி வளர்ச்சி என்பது ஒரு நபரின் Vital Signs-களை பொறுத்தது. உடல் பருமனாக உள்ள நபருக்கு வைட்டமின் டி 12 மற்றும் பி போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பின் கூந்தல் அடர்த்தி மற்றும் தரம் குறைவாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனினும் இந்த கண்ணோட்டத்தின்படி படி பார்த்தால் ஒல்லியாக இருக்கும் நபர்களுக்குக்கும் முடி உதிர்வு ஏற்படலாம். எனவே இது ஒரு நபரின் உடலில் உள்ள வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களின் அளவை பொறுத்தது என்றார்.
எவ்வாறாயினும் அதிகப்படியான பெல்லி ஃபேட் உள்ளவர்கள் இன்சுலின் ரெசிஸ்டென்ஸால் பாதிக்கப்படலாம், இது பிக்மென்டேஷன் மற்றும் பிசிஓஎஸ் சிக்கல்களை ஏற்படுத்தலாம், இதன் காரணமாக முடி உதிர்தல் ஏற்படலாம் என்பதை ஜஸ்லீன் கவுர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகம் சாப்பிடுவது, மூட் ஸ்விங்ஸ் மற்றும் எடை பிரச்சினைகளால் மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படலாம். இறுதியில் இவை முடி வளர்ச்சி சுழற்சியை (hair growth cycle) சீர்குலைத்து முடி உதிர்தல் ஏற்பட வழிவகுக்கும். ஆரோக்கியமான எடையை பராமரிப்பது, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது உள்ளிட்வை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என்றார்.
பிரபல தோல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரிங்கி கபூர் பேசுகையில், Hair Follicle Stem Cells-களுக்கு Inflammatory signals-களை தூண்டுகிறது. இது அவற்றின் மீளுருவாக்கத்தை (Regeneration) சீர்குலைக்கிறது. இதனால் காலப்போக்கில் மயிர்க்கால்கள் பலவீனமடைந்து முடி மெல்லியதாக மாறுகிறது. மேலும் அதிக எடை கொண்டவர்கள் Androgenetic Alopecia என்னும் முடி பிரச்சனையால் ஏன் அதிகம் எளிதாக பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் இது நமக்கு விளக்குகிறது என்றார்.
Also Read | முடி உதிர்வு பிரச்சனையை சமாளிக்க முடியலையா..? உங்களுக்கான சில டயட் டிப்ஸ்..!
அதிகப்படியான பெல்லி ஃபேட்டானது Insulin growth factor ஃபங்ஷனிங்கை சீர்குலைக்கிறது.இதனால் ஏற்படும் IGF குறைபாடு முடியின் வேர்களுக்கு ரத்த ஓட்டத்தை குறைக்கிறது, இதனால் ஊட்டச்சத்தை இழந்து முடி உதிர்வு பிரச்னை ஏற்பட வழிவகுக்கிறது. இன்சுலின் அளவுகள் சரியாக இல்லாதபோது, IGF சரியாக வேலை செய்யாது. இதனால் முடி வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது. மன அழுத்தம் மற்றும் கார்டிசோல் உற்பத்தியை குறைக்க தினசரி போதுமான மற்றும் தரமான தூக்கத்தை உறுதி செய்வது, முடியை வலுப்படுத்த இரும்புச்சத்து மற்றும் பயோட்டின் நிறைந்த உணவுகளை எடுப்பது, ஆரோக்கிய எடையை பராமரிப்பது உள்ளிட்டவற்றின் மூலம் கூந்தல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கலாம் என்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.