சிக்கலின்றி குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதே திருமணமான தம்பதிகளின் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் தேவையாக இருக்கிறது. திருமணமான ஓரிரு மாதங்களிலோ அல்லது பல மாத காத்திருப்புக்கு பிறகோ கர்ப்பமாகும் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்கள் அச்சம் கொள்ள வைக்கும் மாற்றங்கள் உடலில் நிகழக்கூடும்.
பொதுவாக மாதவிலக்கு நேரத்தில் ரத்தப்போக்கு வரும் என்பதால் பெண்கள் அதனை கண்டு பயம் கொள்ள மாட்டார்கள். ஆனால் கருவுற்ற பிறகு சில நேரங்களில் ரத்தப்போக்கு ஏற்பட கூடும். இதனை கண்டு பல பெண்கள் அதிர்ச்சி கொள்வார்கள். வளரும் கருவிற்கு ஏதாவது சிக்கலோ என்று பதறுவார்கள். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு தாய் மற்றும் குழந்தைக்கு ஆபத்தானது.
இருப்பினும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கிற்கு சில நேரங்களில் பாதிப்பில்லாத காரணங்களும் இருக்கலாம். இது குறித்து சீனியர் கன்சல்டன்ட் மற்றும் பிரபல மகப்பேறு மருத்துவரான ரிஜாபின் என்ன சொல்கிறார் என்பதை இங்கே பார்க்கலாம்.
முதல் 3 மாதங்களில் ரத்தப்போக்கு:
பொதுவாக பெண்களின் கர்ப்பகாலம் மூன்று கட்டங்களாக ( 3 மாதங்களாக) பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப காரணங்களும், சிகிச்சைகளும் மாறுபடும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் அல்லது 12 வாரங்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 15% முதல் 20% வரை இருக்கும். அதாவது கர்ப்பமான பெண்களில் 10-ல் 2 பேருக்கு அவர்களது கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் ரத்தப்போக்கு ஏற்படலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எனினும் மருத்துவர் முதலில் கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசோதிப்பார். ஏனென்றால் இதற்கான வாய்ப்புகள் 10% முதல் 15% வரை இருக்கும். அதுவே கருத்தரித்த முதல் 14 நாட்களில் 45% முதல் 55% வரை கருச்சிதைவு விகிதம் இருக்கும். ஆரம்ப கட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டால், ஒரு பெண் கடுமையான ரத்தப்போக்கை அனுபவிப்பார். இதை தொடர்ந்து வயிற்றில் பிடிப்பு மற்றும் வலி ஏற்படலாம்.
இரண்டாவது & மூன்றாவது 3 மாதங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு:
கர்ப்பத்தின் 2-ஆவது (4- 6 மாதங்கள்) அல்லது 3-ஆவது (7-9 மாதங்கள்) மூன்று மாதங்களில் ஒரு பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டால் அதற்கு Cervical Incompetence காரணமாக இருக்கலாம். இது தாமதமான கருச்சிதைவு மற்றும் முன்கூட்டிய பிறப்புக்கு ஒரு காரணமாக இருக்கிறது. கருவை தக்கவைக்க Cervical-ஆல் இயலாத நிலையில் இது நிகழ்கிறது. இந்த சூழலில் பனிக்குடம் உடைந்து ரத்தம் மற்றும் கரு இரண்டும் வெளியேறும்.
பிளசென்டா ப்ரீவியா (Placenta Previa):
இது கருப்பையின் கீழ் பகுதியை நஞ்சுக்கொடி ஆக்கிரமிக்கும் ஒரு கண்டிஷன் ஆகும். கருப்பையின் முக்கிய பகுதியை ஓரளவு அல்லது முழுவதுமாக தடுக்கும் ஒரு நிலை இது. இந்த நிலை குழந்தையின் இயல்பான பிரசவத்தில் குறுக்கிடுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், எதிர்பார்க்கும் பெண்ணுக்கு வலியற்ற ரத்தப்போக்கு ஏற்படலாம். இதற்கு மருத்துவரின் உடனடி தலையீடு தேவைப்படும்.
நஞ்சுக்கொடி சிதைவு (Placental Abruption):
சுமார் 1% கர்ப்பத்தில் பிரசவ வலி தொடங்கும் முன்பே நஞ்சுக் கொடி தாயின் கருப்பையிலிருந்து பிரிந்து விடும் நிலை தான் இந்த Placental Abruption. இதனால் கடும் ரத்தப்போக்கு ஏற்படலாம், மேலும் இது தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் மருத்துவரின் உடனடி கவனிப்பு தேவைப்படும்.
வாசா ப்ரீவியா (Vasa Previa):
இது ஒரு அரிய கர்ப்ப சிக்கலாகும், இது ரத்த நாளங்கள் பர்த் கேனல் (Birth canal) ஓப்பனிங்கை க்ராஸ் செய்யும் ஒரு நிலை. இது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தான நிலை மற்றும் மருத்துவரின் உடனடி தலையீடு தேவைப்படுகிறது. இந்த கண்டிஷனின் போது குழந்தைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படலாம், இது ரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.
பிரசவம்:
கர்ப்ப காலத்தின் இருந்து கட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு பிரசவத்தின் அறிகுறியாக இருக்கலாம். குழந்தை இந்த உலகத்திற்கு வர தயாராக உள்ளது என்பதை இது காட்டுகிறது.
யூட்டரின் ரப்ச்சர் (uterine rupture):
இதுவும் ஒரு அரிதான நிலை, கருவின் இதயத் துடிப்பைக் குறைத்து ஆக்ஸிஜன் இல்லாமல் விட்டுவிட கூடிய ஆபத்தான கண்டிஷன் இது. இது தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தான நிலையாகும்.
எக்டோபிக் கர்ப்பம்:
எக்டோபிக் கர்ப்பம் என்பது கரு கருப்பைக்கு வெளியே, பெரும்பாலும் ஃபலோபியன் குழாய்களில் உருவாக தொடங்குவது ஆகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒருபெண் தலைச்சுற்றல், சின்கோபல் அட்டாக்ஸ் மற்றும் கடும் வயிற்றுப் பிடிப்புகளை அனுபவிக்கலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் மெடிக்கல் அல்லது சர்ஜிக்கல் தலையீடு தேவைப்படலாம்.
Also Read : குழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இந்த பழக்கங்களை மாற்றியே ஆக வேண்டும்..!
மோலார் கர்ப்பம்:
கருப்பையில் குழந்தை உரியமுறையில் வளர்வதற்கு பதில் ஒரு திசு (நஞ்சுக்கொடி) அதீதமாக வளரும் போது மோலார் கர்ப்பம் நிகழ்கிறது. இது அரிதான நிகழ்வு, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு பெண் கர்ப்பத்தையொத்த வாந்தி, கடுமையான குமட்டல் உள்ளிட்ட பல அறிகுறிகளை அனுபவிக்க நேரிடுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நோயாளியை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரே வழி திசுக்களை வெளியேற்றுவதுதான்.அறிகுறிகள் மோசமடையாமல் இருக்க கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இதுவும் சரிபார்க்கப்படுகிறது. சில நேரங்களில் ஒரு பெண்ணுக்கு இம்பிளான்டேஷன் காலத்தில் ரத்தப்போக்கு ஏற்படலாம். இது சுமார் 10-14 நாட்கள் நீடிக்கும். கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்படுவதற்கான பிற காரணங்கள் கருப்பை வாயில் உள்ள பாலிப்கள், கருப்பை வாய் அல்லது யோனியில் தொற்று, புற்றுநோய் மற்றும் கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பை வாய் மாற்றங்கள் உள்ளிட்டவை அடங்கும். கர்ப்பகால ரத்தபோக்கு விஷயத்தில் சில பாதிப்பில்லாதவை, மற்றவை உயிருக்கு ஆபத்தானவை என்பதால் எந்தவொரு சிக்கல்களையும் தவிர்க்க உரிய நேரத்தில் மருத்துவரை அணுக வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy changes, Pregnancy Risks, Pregnancy Sickness