முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அதிகளவில் பெண்களை தாக்கும் ஆஸ்துமா..? ஆரம்பகால அறிகுறிகளும்.. தடுக்கும் வழிகளும்..

அதிகளவில் பெண்களை தாக்கும் ஆஸ்துமா..? ஆரம்பகால அறிகுறிகளும்.. தடுக்கும் வழிகளும்..

Asthma

Asthma

ஆஸ்துமாவை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் பட்சத்தில் நம்மால் அதன் விளைவுகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

மூச்சுத் திணறல், நெஞ்சு வலி ஆகியவை ஆஸ்துமா நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஆகும். சுவாசிப்பதை கடினமாகும் இந்த நோயானது சுவாச பாதையில் ஏற்படும் அழற்சி தன்மையினால் ஏற்படுகின்றது. பல்வேறு காரணங்களினால் ஆஸ்துமா நோயானது ஏற்படலாம்.

பலருக்கும் ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பெண்களை அதிக அளவில் ஆஸ்துமா தாக்குவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். முக்கியமாக நகரங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக குழந்தைகள் பெண்கள் என பலருக்கும் ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

சமீபத்தில் கிடைத்துள்ள அறிக்கையின் படி ஆஸ்துமா நோயானது ஆண்களை ஒரு விதமாகவும், பெண்களை வேறு விதமாகவும் தாக்குவதாக அதில் தெரிய வந்துள்ளது. பருவ வயதை எட்டிய பிறகு பெண்களில் பெரும்பாலானோர் ஆஸ்துமா நோய் தாகும் அபாயத்தில் இருக்கின்றனர்.

முக்கியமாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்தான் பெண்களை ஆஸ்துமா நோய் எளிதில் தாக்குவதற்கான காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது. சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது போன்றவற்றினால் ஏற்படும் புகை, தூசி உணவு பொருட்களில் இருந்து வெளிவரும் வாசனையாகியவை அவர்களின் சுவாசப் பாதையில் கோளாறுகளை ஏற்படுத்துவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதை தவிர நீண்ட நேரத்திற்கு ஆஸ்துமாவை தூண்டக்கூடிய சூழ்நிலைகளில் இருப்பதாலும் இவை நிலைமையை மோசமாக்க கூடும். முக்கியமாக கிராமங்களில் பெரும்பாலான பெண்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்வதும் வீட்டை பராமரிப்பதை தங்களது முக்கிய வேலையாக செய்து வருகின்றனர். இது போன்ற பல்வேறு விதமான காரணிகள் பெண்கள் அதிக அளவில் ஆஸ்துமாவினால் பாதிக்கப்படுவதை ஊக்குவிக்கிறது.

Also Read : ஆஸ்துமா என்றால் என்ன ? ஆயுர்வேத சிகிச்சை மூலம் எவ்வாறு ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம்?

ஆஸ்துமா நோய் தாக்கியதில் 20 - 25 பெண்கள் நெஞ்சில் அழுத்தம், மூச்சு திணறல் ஆகியவற்றை அனுபவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் பட்சத்தில், அவை மிகுந்த ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்துமாக உள்ளதற்கான அறிகுறிகள்!

ஆஸ்துமாவை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் பட்சத்தில் நம்மால் அதன் விளைவுகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். ஒருவர் ஆஸ்துமா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதும், அவருக்கு என்ன விதமான காரணிகள் ஆஸ்துமாவை ஏற்பட காரணமாக உள்ளன என்பதையும் கண்டறிவது அவசியமாகும். ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கீழே உள்ள அறிகுறிகள் பொதுவாக ஏற்படுகின்றன

 • மூக்கு ஒழுகுதல்
 • தும்மல்
 • தலைவலி
 • மூச்சுத் திணறல்
 • படிக்கட்டுகள் ஏறும் போது மூச்சுத்திணறல்
 • இருமும் போது சளி வெளிவருதல்
 • பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள முடியாமை

ஆஸ்துமாவில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

ஆஸ்துமா ஏற்படுவதை முழுவதுமாக நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் முடிந்த அளவு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பை நம்மால் குறைக்க முடியும். அதுக்கு நம்முடைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே போதுமானது.

 • ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்
 • ஆஸ்துமாவை உண்டாக்கும் காரணிகளை கண்டறிந்து அவற்றில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.
 • தூசு புகை போன்றவற்றிலிருந்து ஒவ்வாமையை ஏற்படுத்தும் சூழ்நிலைகளில் இருந்தும் தள்ளி இருக்க வேண்டும்
 • மூச்சில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
 • சரியான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

First published:

Tags: Asthma, Lungs health, Women Health