முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மூட்டுவலிக்கு பலன் தருமா மஞ்சள்..? எப்படி பயன்படுத்த வேண்டும்..?

மூட்டுவலிக்கு பலன் தருமா மஞ்சள்..? எப்படி பயன்படுத்த வேண்டும்..?

Arthritis

Arthritis

பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட மஞ்சள் பொடிகளை வாங்கி பயன்படுத்துவதைக் காட்டிலும், நாமே மஞ்சள் பொடி தயாரித்து உபயோகம் செய்வது சிறப்பாக அமையும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மூட்டுவலி ஏற்பட்டால் ஒரு நபரின் அன்றாடப் பணிகளும் கூட பாதிக்கப்படும். ஏனென்றால் மூட்டுகளை இயல்பாக அசைக்காமல் எந்தவொரு வேலையையும் சுலபமாக செய்ய இயலாது. சதாரணமாக உட்காருவது, குனிந்து நிமிருவது, கால்களை மடக்குவது போன்ற காரியங்கள் கூட மிக சிரமமானதாக மாறிவிடும்.

மூட்டுவலி பிரச்சினை ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அசௌகரியம் மற்றும் வீக்கம் போன்றவற்றை தவிர்க்க எண்ணற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். அந்த வகையில் மூட்டு வலியை கட்டுப்படுத்த உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம்.

மூட்டுவலியை குறைப்பதோடு, அழற்சியை குறைப்பதற்கு உண்டான மிக முக்கியமான வேதிப்பொருளான குர்குமின் என்னும் சத்து மஞ்சளில் நிரம்பியிருக்கிறது. பொதுவாக உணவுக்கு நிறமூட்டியாகவும், நல்ல மனமூட்டியாகவும் இருக்கின்ற மஞ்சளை உட்கொள்வதால் மிகச் சிறப்பான பலன்களை பெற முடியும்.

மூட்டுவலியால் ஏற்படுகின்ற அசௌகரியம் மற்றும் அழற்சி போன்றவை தற்காலிகமானது அல்ல. அவை நீண்ட காலத்திற்கு நமக்கு தொந்தரவை ஏற்படுத்தக் கூடியதாகும். ஆகவே, சீரான இடைவெளியில் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

மஞ்சளின் பிற பலன்கள் : 

மஞ்சளில் ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள் உள்ளன. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மற்றும் ஸ்ட்ரெஸ் அளவுகளை குறைக்கும். குறிப்பாக வயது முதிர்வு அறிகுறிகளை கட்டுப்படுத்துகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் ஏற்படும் பாதிப்பை இதய நோய்க்கு அடிப்படையான காரணம் என்று கருதப்படும் நிலையில், மஞ்சளில் உள்ள குர்குமின் இந்த பாதிப்பை தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் பண்பு மஞ்சளுக்கு உள்ளது.

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது எப்படி?

  • நாம் சமைக்கும் சோறு அல்லது காய்கறி மற்றும் சூப் போன்றவற்றின் மீது மஞ்சள் பொடி தூவி வேக வைக்கலாம்.
  • மூட்டுவலி பிரச்சினையால் அவதி அடைபவர்கள் டீ-யில் மஞ்சள் சேர்த்து அருந்தலாம்.
  • சாலட் அல்லது கூட்டு, பொரியல் வகைகளில் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பாலில் 2 அல்லது 3 பூண்டு பல் தட்டிப்போட்டு, அதனுடன் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தலாம்.
  • மஞ்சள் பொடி தயாரிப்பு : 

    பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட மஞ்சள் பொடிகளை வாங்கி பயன்படுத்துவதைக் காட்டிலும், நாமே மஞ்சள் பொடி தயாரித்து உபயோகம் செய்வது சிறப்பாக அமையும். ஏனெனில் ஆலைகளில் மஞ்சள் பொடி தயாரிக்கும்போது அதில் உள்ள குர்குமின் சத்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    Also Read | Turmeric : மஞ்சளை பயன்படுத்துவதால் ஏற்படும் அறிவியல் நன்மைகள்! 

top videos

    ஆகவே, மஞ்சள் கட்டியாக வாங்கி வெயிலில் நன்றாக உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பொடியில் வண்டு பிடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய இறுக்கமான பாட்டிலில் அதை சேமித்து வைத்து உபயோகம் செய்ய வேண்டும்.

    First published:

    Tags: Arthritis Pain, Turmeric