முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராப்டிங் சிகிச்சை ஏன் செய்யப்படுகிறது..?

கொரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராப்டிங் சிகிச்சை ஏன் செய்யப்படுகிறது..?

மாதிரி படம்

மாதிரி படம்

டாக்டர். ராஜேஷ் டி.ஆர்., ஆலோசகர் கார்டியோடோராசிக் மற்றும் வாஸ்குலர் சர்ஜன், காவேரி மருத்துவமனை, எலக்ட்ரானிக் சிட்டி (பெங்களூர்), கொரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராப்டிங் (CABG) சிகிச்சை பற்றிய விரிவாக விளக்குகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இதயத்தில் இருக்கும் ரத்த நாளங்களில் அடைப்புகள் இருந்தால், அதற்கு செய்யப்படும் பைபாஸ் அறுவை சிகிச்சைகளில் ஒன்று தான் கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராப்டிங் சிகிச்சையாகும். ரத்த நாளங்களில் அடைப்பு என்று கேட்கும் போது கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், இதயம் நன்றாக செயல்பட உதவும் ஒரு முக்கியமான சிகிச்சைகளில் ஒன்று. மேலும், CABG என்று பொதுவாகக் கூறப்படும் இந்த சர்ஜரி, இதய அறுவை சிகிச்சை நிபுணர்களால் அதிகமாக செய்யப்படும் சிகிச்சைகளில் ஒன்று. CABG சிகிச்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.

அதிரோஸ்க்லேரோசிஸ் (Atherosclerosis) என்ற நோய்க்கு CABG அறுவை சிகிச்சை : 

அதிரோஸ்க்லேரோசிஸ் என்பது ஆர்ட்டரிகள் கடினமாகவும், குறுகலாகவும் மாறும் நிலையைக் குறிக்கிறது. ரத்த நாளங்களில் ஆங்காங்கே கொழுப்புகள் தேங்கி, அதன் உட்புற சுவர்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதை பிளேக் (plaque) என்று அழைக்கிறார்கள். இந்த அடைப்புகள் நாளடைவில் இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதனால் இதயத்திற்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, மாரடைப்பு உள்ளிட்ட வேறு சில தீவிரமான இதய பாதிப்புகள் உண்டாகலாம்.

அதிரோஸ்க்லேரோசோஸ் என்ற ரத்த நாள பாதிப்பு ஒரு கரோனரி ஆர்டரி நோய் என்று கூறப்படுகிறது. இந்த இதய நோய்க்கு CABG அறுவை சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இந்த நோய் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் உடனடியாக அறுவை சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. நோய் பாதிப்பின் தீவிர தன்மைக்கு ஏற்ப, முதல் கட்டத்தில் பல்வேறு மருந்துகள் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி உள்ளிட்ட சிகிச்சைகளை இதய நோய் நிபுணர்கள் பரிந்துரை செய்வார்கள். அதற்கு பிறகுதான் இந்த பைபாஸ் கிராஃப்ட்டிங் சர்ஜரியை மருத்துவர்கள் தேர்வு செய்வார்கள். ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து அடைப்புகளை நீக்க முடியாது என்ற நிலையை இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே CABG சிகிச்சை செய்யப்படும்.

கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராப்டிங் சிகிச்சையின் போது என்ன நடக்கும்?

ரத்த நாளங்களில் பாதிப்பு இருப்பதால் உடலில் இருக்கும் நோயாளியின் உடலில் இருந்து வேறு சில பகுதிகளில் இருந்து ரத்த நாளங்கள் சேகரிக்கப்பட்டு அது கரோனரி ஆர்ட்டரியில் இணைக்கப்படும். பொதுவாகவே உடலில் இருந்து சேகரிக்கப்படும் இந்த ரத்த நாளம் நோயாளியின் நெஞ்சுப்பகுதியிலிருந்து, கால்கள் அல்லது முன்னங்கையில் ஆகிய பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டு பாதிப்பு அடைந்த ரத்த நாளத்துடன் இணைக்கப்படும்.

பாதிக்கப்பட்ட ரத்த நாளத்துக்கு மாற்றாக புதிய ரத்த நாளத்தின் வழியாக இதயத்திற்கு ரத்தம் பாயும். அடைப்புகள் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல ஒரு நோயாளிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பைபாஸ் கிராப்ட்டுகள் தேவைப்படும். அதாவது ஒரு ரத்த நாளத்துக்கும் மேலாக நோயாளியை முதலில் இருந்தே இந்த பிளட் வெசல் எடுக்கப்பட்டு இதயத்துடன் பொருத்தப்படும்.

CABG அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன:

  • இதயம் துடித்துக் கொண்டிருக்கும் போதே, பைபாஸ் சர்ஜரி செய்யப்படும். ஆபத்துகள் மிகவும் குறைவு மற்றும் சில நாட்களிலேயே வீடு திரும்பலாம் என்ற காரணங்களால், பல நோயாளிகளும் இந்த வகை அறுவை சிகிச்சையையே அதிகம் விரும்புகிறார்கள்.
  • பல அறுவை சிகிச்சைகளில் minimally invasive வகைகள் இருப்பது போல, இந்த பைபாஸ் சிகிச்சையிலும் நெஞ்சுப் பகுதியை திறந்து அறுவை சிகிச்சை செய்யலாம், MICS CABG என்று கூறப்படும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில், நெஞ்சுப் பகுதியில் இருக்கும் சிறிய ஒபனிங்க்ஸ் மூலம், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
  • Also Read | இதய அறுவை சிகிச்சை வரமா..? சாபமா..? விளக்கும் பிரபல இதய நோய் நிபுணர்

    CABG சிகிச்சைக்குப் பின்னர்:

    • பொதுவாக இதய பைபாஸ் சர்ஜரி செய்த பிறகு ரிக்கவரி காலம் என்பது 5 – 7 நாட்கள் என்று கூறப்படுகிறது. நீங்கள் எந்த வகை பைபாஸ் கிராஃப்ட்டிங் சிகிச்சையைத் தேர்வு செய்கிறீர்களோ, அதற்கு ஏற்றார் போல மிக விரைவாகவும் ரெகவர் ஆகி விடலாம்.
    • அறுவை சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருந்துகள், உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை நோயாளிகள் பின்பற்ற வேண்டும். அது மட்டுமல்லாமல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கிரேடட் உடற்பயிற்சிகளை தவறாமல் தினசரி செய்ய வேண்டும்.
    • ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவது, தினசரி உடற்பயிற்சி செய்வது, அதிக எடை உள்ளவர்கள் எடை குறைப்பது, புகைப் பழக்கத்தை தவிர்ப்பது ஆகியவை மிகவும் அவசியம்.
top videos

    First published:

    Tags: Cardiac Arrest, Heart attack, Heart health