முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இதய அறுவை சிகிச்சை வரமா..? சாபமா..? விளக்கும் பிரபல இதய நோய் நிபுணர்

இதய அறுவை சிகிச்சை வரமா..? சாபமா..? விளக்கும் பிரபல இதய நோய் நிபுணர்

Heart surgery

Heart surgery

டாக்டர் ராஜேஷ் டி ஆர், ஆலோசகர் கார்டியோடோராசிக் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர், காவேரி மருத்துவமனை, எலக்ட்ரானிக் சிட்டி (பெங்களூரு), இதய அறுவை சிகிச்சை வரமா, சாபமா என்பது குறித்த தனது கருத்தை பகிர்ந்து கொள்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மனிதர்களுக்கு வரும் பெரும்பாலான இதய நோய்கள் தடுக்க கூடியவை. இதய நோய்களுக்கு வழிவகுக்கும் ஆபத்து காரணிகளை நம்மில் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறோம். இருந்து இதய நோய் பாதிப்புகள் இதனால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

இதற்கு காரணம் நம்மிடம் இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை கட்டுப்படுத்தும் விருப்பம் இல்லாததே. உலக நாடுகளுக்கு மத்தியில் நீரிழிவு நோயின் தலைநகராக விளங்கும் இந்தியா, சமீப காலமாக இதய நோய்களின் தலைநகராகவும் மாறி வருகிறது. கிராமங்கள், நகரங்கள் என்ற பேதமின்றி லட்சக்கணக்கான இந்தியர்கள் இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இருந்தும் இப்போதும் கூட ஆறுதலளிக்கும் விஷயம் என்னவென்றால், இதை நோய்களுக்கு பயனுள்ள மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளது. பெரும்பாலான இதய நோய்களை மருந்துகளால் கட்டுப்படுத்தலாம். ஒருவேளை மருந்துகள் பலனளிக்காவிட்டால் கூட அறுவை சிகிச்சை இல்லா சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை ஆப்ஷன்கள் உள்ளன. இது தொடர்பாக Cardiothoracic மற்றும் Vascular surgeon டாக்டர் ராஜேஷ் டி ஆர்ஷேர் செய்துள்ள தகவல்களை பார்க்கலாம்.

ஏறக்குறைய எனது 20 ஆண்டுகால பிராக்டீஸ் பீரியட்டில் ஹார்ட் சர்ஜரி செய்து கொள்ளுங்கள் என நான் அறிவுரை கூறிய போதெல்லாம் அதற்கு நோயாளிகளின் ரியாக்ஷன் ஒரே மாதிரியாகவே இருந்து வருகிறது. பெரும்பாலும் அவர்களின் ரியாக்ஷன் இவை தான், "நான் மிகவும் இளமையாக இருக்கிறேன், நான் இன்னும் வேலை செய்கிறேன், என் குடும்பத்தை பராமரிக்க நான் சம்பாதிக்க வேண்டும், எனக்கு சிறிய குழந்தைகள் உள்ளனர்". ஆனால் ஹார்ட் சர்ஜரி செய்து கொள்ள நாங்கள் அறிவுறுத்துவதற்கான காரணமே அவர்கள் கூறும் காரணங்களை மனதில் வைத்து தான். இதய கோளாறு உள்ளவர்கள் தங்கள் வாழ்விற்கு திரும்ப உதவவே நாங்கள் சர்ஜரியை பரிந்துரைக்கிறோம்.

தவறான கருத்துக்கள்:

இதயத்தில் ஒருமுறை சர்ஜரி செய்து கொண்டால் அந்த இதயம் சாதாரணமாக செயல்படாமல் போகலாம், நோயாளிகளால் இயல்பான வாழ்க்கையை நடத்த முடியாமல் போகலாம், சர்ஜரியின் போது தவறுகள் நடக்கலாம் போன்ற தவறான கருத்துக்கள் பொதுவானவை. பொதுவாக இதய அறுவை சிகிச்சைகள் நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்றன என்றார். ஹார்ட் ஆப்ரேஷன் செய்து கொண்ட பிறகு உண்மையில் இதயம் முன்பை விட சிறப்பாக செயல்படுகிறது மற்றும் வாழ்க்கை மிகவும் வலுவானதாக மாறும் என்பது எண்ணற்ற ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

Also Read | உலக ஆரோக்கிய தினம் 2023 : இதய நலன் காக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!

ஹார்ட் சர்ஜரியில் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை நோயாளிகள் கருத்தில் கொண்டால், சர்ஜரி எவ்வாறு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும் என்பதை எளிதாக ஏற்று கொள்ள முடியும். தற்போது ஹார்ட் சர்ஜரி செய்து கொண்ட நோயாளி அடுத்த நாள் நடக்க துவங்கி விடுகிறார். சூழலை பொறுத்து 4 - 5 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். உடல்நிலை சீக்கிரம் இயல்பாகிவிட்டால் ஹார்ட் சர்ஜரி செய்து கொண்ட 2-4 வாரங்களுக்குள் வழங்கன் வேலைக்கு திரும்பலாம். அந்தளவிற்கு இது பொதுவான சர்ஜரியாகி விட்டது.

அறுவை சிகிச்சை இதய பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது. பலர் மருத்துவர் பரிந்துரைத்தாலும் கூட தங்களது ஹார்ட் சர்ஜரியை ஒத்திவைக்கின்றனர். இதற்கு காரணம் ஆரம்ப அறிகுறிகள் அவர்களை சமாளிக்கும் அளவிற்கு இருப்பதே. ஆனால் இது நோயாளிகளுக்கு தவறான பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. இதய சிக்கல்களுக்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இதயம் நிரந்தரமாக பாதிக்கப்பட்டு பிரச்சினை மேலும் மோசமாகலாம். இதய நோய் தீவிரமாக முன்னேறி இருக்கும் நிலைகளில் கூட ஆப்ரேஷன் செய்யப்படலாம், ஆனால் அப்போது ரிஸ்க் அதிகமாக இருக்கும், எதிர்பார்த்த முடிவுகளும் கிடைக்காது. எனவே சரியான நேரத்தில் ஹார்ட் சர்ஜரி செய்தால் தான் இதய செயல்பாட்டைப் பாதுகாக்க முடியும் மற்றும் ஆப்ரேஷன் ரிசல்ட் சிறப்பாக இருக்கும் என்கிறார் நிபுணர் ராஜேஷ்.

வரம்:

top videos

    நவீன முறைப்படி ஹார்ட் ஆப்ரேஷன்ஸ் இப்போது சிறிய கீறல்கள் மூலம் செய்யப்படுகின்றன, மேலும் இதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் வலி போன்ற அசௌகரியம் குறைவாக இருக்கிறது, சர்ஜரியிலிருந்து வேகமாக மீள அனுமதிக்கிறது. இதயம் கடும் பாதிப்பை சந்தித்தாலும், இதய செயலிழப்பு ஏற்பட்டாலும் கூட, இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை இதயம் பொருத்துதல் போன்ற சர்ஜரி ஆப்ஷன்கள் உள்ளன. Medical Management பயனற்றதாகிவிட்டால் ஹார்ட் சர்ஜரி சிறந்த ஆப்ஷன். உண்மையில் நான் ஹார்ட் சர்ஜரி ஆப்ஷனை சாபமாக பார்க்கவில்லை, ஒரு வரமாகவே பார்க்கிறேன் என்றும் ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Heart disease, Heart Failure, Heart health