நம் நாட்டில் ஒரு கரு உருவாகி 24 வாரங்கள் வரை அதனை கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இதனிடையே கருக்கலைப்பு பற்றியும், இதற்காக கருக்கலைப்பு மாத்திரைகள் எடுத்து கொள்வதால் ஏற்படும் சில முக்கிய பக்கவிளைவுகள் பற்றியும் சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாக்ஷி நாயர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் ஆரம்ப 9 வாரங்களில் கருக்கலைப்பு மாத்திரைகளை பாதுகாப்பாக பயன்படுத்தி கருவை கலைத்து கொள்ளலாம். எனினும் பாதுகாப்பான மற்றும் முறையான கருக்கலைப்பு செயல்முறையை உறுதி செய்ய உரிய மருத்துவர்களை அணுகி மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை பெற கடுமையாக பரிந்துரைக்கப்படுவதாக டாக்டர் சாக்ஷி நாயர் கூறினார்.
கர்ப்பத்தின் பிற்பகுதியில் (24 வாரங்கள் வரை) மருத்துவ நிபுணர்கள் மூலம் அபார்ஷன் செய்து கொள்ளலாம் என்றாலும், கர்ப்பத்தின் துவக்க கட்டங்களில் பிரைவஸியை பேண நினைக்கும் கர்ப்பிணிகள் பெரும்பாலும் கருக்கலைப்பு மாத்திரைகளை (Abortion pills) தேர்ந்தெடுக்கின்றனர். எனினும் மார்க்கெட்டில் கிடைக்கும் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவது மற்றும் அந்த மாத்திரைகளின் பாதுகாப்பு மற்றும் சரியான தன்மை உள்ளிட்ட பலவற்றை கருத்தில் கொள்வது அவசியம் என்கிறார் சாக்ஷி நாயர்.
கர்ப்பத்தை கலைக்க நினைக்கும் போது உரிய நிபுணரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வை பெறுவது முக்கியம். கர்ப்பத்தை கலைக்க தீர்மானிக்கும் பெண்களுக்கு Ectopic pregnancy (கருப்பைக்கு வெளியே வளரும் கர்ப்பம்) அறிகுறி இருக்கிறதா என பார்க்க, கருவின் இருப்பிடத்தை கண்டறிய மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் டெஸ்ட் செய்கிறார்கள்.
அல்ட்ராசவுண்ட் ஒரு எக்டோபிக் கர்ப்பத்தை வெளிப்படுத்தினால், அந்த நேரத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் எடுத்து கொள்வதால், கருப்பை முழுவதிலும் ரத்தம் குவிந்து விடும். இதன் விளைவாக ஏற்படும் தொடர்ச்சியான ரத்த போக்கு ஒரு ஆபத்தான சூழலை உருவாக்குகிறது. ஆபத்தை குறைக்க அவசர அறுவை சிகிச்சை செய்ய நேரலாம் என்றார்.
கர்ப்பத்தை கலைக்க MTP kit போன்ற கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்துவதில் உள்ளார்ந்த சிக்கல்கள் இல்லை. இவற்றை பயன்படுத்துவதால் சிறிய பக்க விளைவுகள் இருக்கலாம் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் குறுகிய காலத்திற்குள் அவசர அறுவை சிகிச்சை செய்யும் சூழலை உருவாக்கும் குறிப்பிடத்தக்க சில நிலைமைகளை ஏற்படுத்தலாம். இந்த சூழலில் உடனடியாக அறுவைசிகிச்சை செய்யத் தவறினால் அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என எச்சரிக்கிறார் டாக்டர் சாக்ஷி. சில சந்தர்ப்பங்களில் கருவானது கருப்பையில் வளராமல் fallopian tube-ல் இடம்மாறி வளர கூடும். இது எக்டோபிக் கர்ப்பம் என அழைக்கப்படுகிறது. இந்த சூழலில் ஒருவர் தெரியாமல் கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்டால் அது அதிகப்படியான ரத்த போக்கை ஏற்படுத்தும். அதிகப்படியான ரத்த போக்கின் போது வெளியேறும் திசுக்கள் fallopian tube-ன் சுவரை கிழிக்க கூடும். இது Fallopian tube சிதைய வழிவகுக்கும் என்பதோடு இதன் விளைவாக கடும் வலி ஏற்படும் மற்றும் ரத்தப்போக்கு மேலும் அதிகரிக்கும்.
பக்க விளைவுகள்:
கருவானது கருப்பையில் இருக்கும் போது MTP kit-ஐ பயன்படுத்தி கருக்கலைப்பு செய்வது சாத்தியம் என்றாலும் சில சிறிய பக்க விளைவுகள் இருக்கலாம். MTP kit எடுப்பதால் கருப்பைச் சுவரில் இருந்து ஏற்படும் ரத்த போக்கு காரணமாக வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகள், முதுகுவலி, தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். MTP kit-ஐ பயன்படுத்திய பின் அதிக ரத்தப்போக்குடன் கடுமையான வலியை எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம் எனவும் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Abortion, Contraceptive Pills