முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஹார்மோன் பிரச்சனையா..? காலை எழுந்தவுடன் இந்த 5 பழக்கங்களை கடை பிடியுங்கள்

ஹார்மோன் பிரச்சனையா..? காலை எழுந்தவுடன் இந்த 5 பழக்கங்களை கடை பிடியுங்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

உங்கள் எண்ணங்களிலும்,யோசனைகளிலும் தடுமாற்றம் நிலவுகிறதா? இது போன்ற மனநிலை மாற்றங்கள் உங்கள் ஹார்மோன் அளவுகளின் சமநிலையின்மையின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்

  • Last Updated :
  • Tamil Nadu |

நம் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள நாம் நம் வாழ்க்கை முறையை சரியாக வழிநடத்த வேண்டும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஹார்மோன் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.

உங்கள் எண்ணங்களிலும்,யோசனைகளிலும் தடுமாற்றம் நிலவுகிறதா? இது போன்ற மனநிலை மாற்றங்கள் உங்கள் ஹார்மோன் அளவுகளின் சமநிலையின்மையின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.  இந்த சமநிலையின்மையானது உங்களுக்கு கவலை, விரக்தி, சோர்வு, எடை அதிகரிப்பு, தோல் அரிப்பு, ஆற்றல் இழப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளைக் கூட ஏற்படுத்தலாம்.

உங்கள் காலை நேர பழக்க வழக்கங்களை சற்று சரி செய்து கொண்டாலே இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அத்தகைய மாற்றங்கள் குறித்து நாம் இந்தப் பதிவில் விளக்கமாகப் பார்ப்போம்.

எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்தல்: நம் குடல் ஆரோக்கியத்தை பாதுகாத்தாலே நம் உடல் நன்றாக இருக்கும். அதனால் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நாம் தினமும் காலையில் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். இது உங்கள் குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதோடு, இது உங்கள் ஹார்மோனின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்!

நாளை சூரிய வெளிச்சத்துடன் தொடங்குங்கள்: நீங்கள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் போது, உங்கள் கார்ட்டிசால் ஹார்மோனின் அளவுகள் (மன அழுத்த ஹார்மோன்) அதிகமாக இருக்கும். அதனால், நீங்கள் தூக்கத்தில் இருந்து எழுந்த உடனே உங்கள் மொபைல் போனைப் பார்ப்பது, அது மேலும் கார்ட்டிசால் ஹார்மோனின் அளவுகளை அதிகப்படுத்தும். அதனால் எழுந்த உடன் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுங்கள். குறைந்தது 45 நிமிடங்களுக்குப் பிறகு,  போன் உள்ளிட்ட இதர சாதனங்களை பார்க்கத் தொடங்கலாம். காலை எழுந்தவுடன் சூரிய ஒளியில் வெளிப்படுவது உங்கள் ஹார்மோனின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

லேசான உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்களது நாளை லேசான உடற்பயிற்சி செய்து தொடங்குங்கள். இது உங்கள்  நிணநீர் அமைப்பு, செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவியாக இருக்கும். அதோடு, இவை அனைத்தும் உங்கள் ஹார்மோன் சமநிலைக்கு வழிவகுக்கும்.

காலையில் காபி குடிப்பதை தவிர்க்கவும்: வெறும் வயிற்றில் காபி குடிப்பது உங்கள் உடலுக்கு மிகவும் தீங்கானது. அதனால், காலையில் எழுந்த உடன் காபி குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

இதையும் வாசிக்கஉங்க குழந்தையிடம் நெகடிவான எண்ணங்கள் அதிகமாக உள்ளதா..? அவர்களை மீட்டெடுக்க டிப்ஸ்..!

புரதம் நிறைந்த காலை உணவு: உங்கள் காலை உணவு மிகவும் முக்கியமானது. நீங்கள் அதனை ஒருபோதும் தவிர்த்து விடக் கூடாது. காலை எழுந்த உடன் லேசான உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி செய்து, 90 நிமிடத்திற்குள் சத்தான புரதம் நிறைந்த காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், சரியாக சாப்பிடவில்லை என்றால், உங்கள் பசி ஹார்மோன்கள் உங்கள் ஆற்றலைப் பாதிக்கும். இதுவே உங்கள் தூக்கம்/விழிப்பு சுழற்சியையும் பாதிக்கும்!

top videos

    வெறுங்காலில் நடத்தல்: தரையில் வெறுங்காலுடன் நடக்க வேண்டும். இது மன அழுத்த ஹார்மோனான கார்ட்டிசாலை இயல்பாக இயங்கச் செய்யும். இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தி வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. அதோடு, இது நினைவை மேம்படுத்துகிறது.

    First published:

    Tags: Hormonal Imbalance, Lifestyle change