முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்க சிறுநீரகங்கள் நன்றாக வேலை செய்கிறதா என தெரிஞ்சுக்கனுமா..? இந்த 2 சிம்பிள் டெஸ்ட் போதும்..!

உங்க சிறுநீரகங்கள் நன்றாக வேலை செய்கிறதா என தெரிஞ்சுக்கனுமா..? இந்த 2 சிம்பிள் டெஸ்ட் போதும்..!

சிறுநீரக பரிசோதனை

சிறுநீரக பரிசோதனை

நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிய முடியாது. இது அறிகுறியற்ற நிலையிலிருந்து தீவிரமடையும்போது மட்டுமே அறிகுறிகளை வெளிப்படுத்து. எனவேதான் இதன் பாதிப்பு தீவிரமாக உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உயிர் வாழ மூளை, இதயம் எந்த அளவிற்கு முக்கியமோ அதற்கு இணையான முக்கியத்துவம் சிறுநீரகத்திற்கும் உண்டு. இது ஓயாமல் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, நச்சு நீரை அகற்றி உடலின் நீர்ச்சத்தை சமநிலை செய்ய பெரிதும் உதவுகிறது. இதனாலேயே சிறுநீரகங்கள் உடலின் வடிகட்டி என்றும் அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

எப்போதுமே நாம் கொலஸ்ட்ரால் பற்றியும், இரத்த அழுத்தம் பற்றியும் மட்டுமே கவலைகொள்கிறோம். ஆனால் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை கண்டுக்கொள்வதில்லை. எனவேதான் நாள்பட்ட சிறுநீரக நோயால் chronic kidney disease (CKD) பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

டாக்டர். சுனிதா கபூர், சிட்டி எக்ஸ்ரே & ஸ்கேன் கிளினிக் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் மற்றும் ஆலோசகர் “ நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது சிறுநீரகங்கள் சேதமடைந்து இரத்தத்தை வடிகட்ட முடியாமல் போகும் நிலையாகும். இந்த நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு நீரிழிவு நோய் முக்கிய காரணமாகும். இந்தியாவிலும், இந்த நோய் பொதுவாக நீரிழிவு நோயாளிகளிடம் காணப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் CKD நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, மற்றொரு மதிப்பீட்டின்படி, எட்டு இந்தியர்களில் ஒருவர் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.

இந்த நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிய முடியாது. இது அறிகுறியற்ற நிலையிலிருந்து தீவிரமடையும்போது மட்டுமே அறிகுறிகளை வெளிப்படுத்து. எனவேதான் இதன் பாதிப்பு தீவிரமாக உள்ளது. அதோடு நாள்பட்ட சிகிச்சையும் தேவைப்படுகிறது. சிறுநீரகங்கள் செயலிழந்து, தடுப்பு சிகிச்சைக்கு மிகவும் தாமதமாகும்போது மட்டுமே இதன் தீவிரத்தை உணரத் தொடங்குகின்றனர். இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு பொதுவாக டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. எனவேதான் அவ்வப்போது சிறுநீரக ஆரோக்கியத்தை தெரிந்துகொள்வதும் அவசியம்.

டாக்டர் கபூர் கருத்துப்படி. "சிறுநீரக நோயைக் கண்டறிவதற்கான இரண்டு முக்கியமான பரிசோதனைகளில் குளோமருலர் வடிகட்டுதல் விகிதம் (eGFR) estimated Glomerular Filtration Rate மற்றும் சிறுநீர் அல்புமின்-கிரியேட்டினின் விகிதம் urine Albumin-Creatinine Ratio (uACR) என இரண்டு வகைகள் உள்ளன. eGFR என்பது இரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படும் பரிசோதனையாகும். uACR சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. eGFR சோதனையில் உங்கள் சிறுநீரகங்கள் இரத்தத்தை எப்படி சுத்தப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது மற்றும் uACR உங்கள் சிறுநீரில் அல்புமின் என்ற புரதம் இருந்தால், உங்கள் சிறுநீரகங்கள் சேதமடைந்துள்ளன என்று அர்த்தம்.

eGFR சோதனை

estimated Glomerular Filtration Rate (eGFR) ஆனது ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது, குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அனைவரும் இந்த டெஸ்டை எடுக்க வேண்டும். இது உடலின் நிலையான சீரம் கிரியேட்டினின் அளவுகளில் இருந்து கணக்கிடப்படுகிறது. சீரம் கிரியேட்டினைனை விட ஈஜிஎஃப்ஆர் துல்லியமானது. சீரம் கிரியேட்டினின் தசை நிறை மற்றும் வயது, பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. வேகமாக மாறிவரும் கிரியேட்டினின் அளவுகள், தசை நிறை மற்றும் உடல் அளவின் உச்சம் அல்லது உணவு முறையில் மாற்றம் உள்ள நோயாளிகளுக்கு eGFR நம்பகமானது அல்ல.

Also Read : இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் 3 இலைகள்.. நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க டிப்ஸ்..!

uACR சோதனை

ஒரு uACR சோதனையானது 24 மணி நேரத்திற்குள் உங்கள் சிறுநீரில் எவ்வளவு அல்புமின் (albumin) செல்கிறது என்பதை அறிய உதவுகிறது. 30 அல்லது அதற்கு மேற்பட்ட சிறுநீர் அல்புமின் இருப்பின் அது சிறுநீரக நோய் இருப்பதை உறுதி செய்வதாக அர்த்தம். மேலும் இந்த முடிவுகளை உறுதிப்படுத்த, மீண்டும் இரண்டு முறை அதே டெஸ்ட் எடுக்கப்படுகிறது.

டைப் 1 நீரிழிவு நோயாளிகள் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பைக் கண்டறிந்து கண்காணிக்க ஆண்டுதோறும் சிறுநீர் அல்புமின் வெளியேற்றத்தை மதிப்பீடு செய்ய வேண்டும்.

இந்த டெஸ்டுகளை தவிர, உங்கள் மருத்துவர் உங்கள் மெடிக்கல் வரலாறை கண்கானிப்பார். பின் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதையை அறிய அல்ட்ராசவுண்ட் அல்லது CT ஸ்கேன் போன்ற பிற ஆய்வகம் மற்றும் இமேஜிங் சோதனைகள் மூலம் அதன் படத்தை பெற இந்த ஸ்கேன்களை எடுக்க சொல்வார்கள். இந்த பரிசோதனைகள் மூலம் பெறப்பட்ட ஒரு முழுமையான மதிப்பீடுகளை வைத்து உங்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்வார்.

"இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோயின் பரவலானது நோயாளிகளை மட்டுமல்ல, முழு சுகாதார அமைப்புகளையும் பாதிக்கிறது. இதைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், ஆரம்ப கட்டத்திலேயே அதன் அறிகுறிகள் மற்றும் நோயைக் கண்டறிய ஸ்கிரீனிங்கை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயின் தீவிரத்தை குறைக்க முடியும். நல்ல செய்தி என்னவென்றால், சி.கே.டி ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால், நாள்பட்ட சிறுநீரக நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்” என்கிறார் டாக்டர் கபூர்.

First published:

Tags: Kidney Disease, Kidney Failure, Kidney Stone