முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உலக இட்லி தினம் 2023 | காரசாரமான பொடி இட்லி செய்வது எப்படி?

உலக இட்லி தினம் 2023 | காரசாரமான பொடி இட்லி செய்வது எப்படி?

சுவை மிகுந்த பொடி இட்லி செய்வது மிக சுலபம். இது பள்ளிக்குசெல்லும் குழந்தைகள் , அலுவலகம் செல்பவர்கள், பயணத்திற்கும் கூட தயார் செய்து கொடுக்கலாம், கெடாமல் இருக்கும், உட்கொள்வதும் எளிது .

  • Last Updated :
  • Tamil Nadu, India

இட்லி பிடிக்காதவர்களுக்கும் காரசாரமான பொடி இட்லி என்றால் ரொம்பவே பிடிக்கும். பொதுவாக பொடி இட்லி என்பது சின்ன சின்ன இட்லிகள் அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லியுடன் கடுகு, கருவேப்பிலை தாளித்து, இட்லி பொடி மற்றும் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு மிதமான சூட்டில் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறப்படுகிறது.

தேவையான பொருட்கள் :

மினி இட்லி-1 கோப்பை அல்லது 4 இட்லி சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்

நல்லெண்ணெய் -1 மேஜைக்கரண்டி

நெய் -  தேவையான அளவு

பொடி -1 மேஜைக்கரண்டி அல்லது காரத்திற்க்கு ஏற்ப

கறிவேப்பிலை-1 கொத்து

கொத்தமல்லி- சிறிதளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் காய வைத்து கறிவேப்பிலை சேர்க்கவும் உடனே மிதமான தீயில் இட்லி பொடி சேர்த்து அடுப்பை அனைத்து விட வேண்டும்.

அதன் பின்னர் இட்லியை சேர்த்து பொடி இட்லியில் நன்கு ஓட்டும் வரை கிளற வேண்டும்.

பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும்.

3 நிமிடம் கழித்து அதில் நெய் சிறிதளவும் கறிவேப்பிலையும் கொத்தமல்லியும் சேர்த்து கிளற வேண்டும்.

top videos

    தேவைப்பட்டால் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்தால் காரசாரமான சுவையான பொடி இட்லி தயார்.!

    First published:

    Tags: Food recipes, Idly podi, Spicy Food