முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உலக இட்லி தினம் 2023 | கம்பு இட்லி ரெசிபி.. சர்க்கரை நோயாளிகளுக்கான சூப்பர் டிபன்.!

உலக இட்லி தினம் 2023 | கம்பு இட்லி ரெசிபி.. சர்க்கரை நோயாளிகளுக்கான சூப்பர் டிபன்.!

கம்பு இட்லி

கம்பு இட்லி

கம்பு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த தானியமாகும். அதனால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்த கம்பு இட்லி ஒரு சிறந்த காலை டிபன்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிறுதானிய வகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த உணவுகளில் ஒன்றானது கம்பு. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்கள் உடலிற்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இதனை உண்பவர்களுக்கு இவ்வனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.

தேவையான பொருட்கள்:

கம்பு - ஒரு கப்

உளுத்தம் பருப்பு - அரை கப்

புழுங்கல் அரிசி - அரை கப்

உப்பு - தேவையான அளவு

Babi 's Recipes - Easy South Indian Recipes with step by step pictures: Kambu Idli | Pearl Millet Idli | Healthy Breakfast ( video recipe)

செய்முறை :

கம்பு, அரிசி, உளுந்து இந்த மூன்றையும் தனித்தனியாக ஊற வையுங்கள். கம்பை நைஸான ரவை பதத்தில் அரைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்து வையுங்கள். சற்று புளித்ததும், இட்லிப் பானையில் ஊற்றி வேகவைத்து எடுத்தால்

சுடச், சுட கம்பு இட்லி தயார்.

Also Read | இன்று உலக இட்லி தினம்... சாஃப்டான இட்லி செய்ய சில டிப்ஸ்...

சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும் கம்பு : 

top videos

    கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால் இதனை உண்ணும்பொழுது உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் காக்க உதவும். கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. மேலும் இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடல் எடை குறையும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புவார்கள் கம்பு உணவை தினமும் ஒரு வேலை எடுத்துக்கொள்ளலாம்.

    First published:

    Tags: Breakfast, Food recipes, Idly podi