முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உலக இட்லி தினம் 2023 | சாம்பார் இட்லி தெரியும், பொடி இட்லி தெரியும்... தயிர் இட்லி தெரியுமா..?

உலக இட்லி தினம் 2023 | சாம்பார் இட்லி தெரியும், பொடி இட்லி தெரியும்... தயிர் இட்லி தெரியுமா..?

தயிர் இட்லி

தயிர் இட்லி

இட்லிக்கு சட்னி சாம்பார் இல்லையா.? கவலை வேண்டாம்.. மீந்த இட்லியை வைத்து சுலபமான முறையில் தயிர் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்...

  • Last Updated :
  • Tamil Nadu, India

காலையில் மீந்த மினி இட்லியை வைத்து மாலையில் அருமையான  'தயிர் இட்லி' செய்து சாப்பிடலாம்.  இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்...

தேவையான பொருட்கள் :

இட்லிகள் - தேவையான அளவு (குறைந்தது எட்டு அதிகபட்சம் பத்து)

பச்சை மிளகாய் - 2

தயிர் - 1 டம்ளர்

தேங்காய் - 1 பத்தை

சீரகம் - 1/2 டீஸ்பூன்

இஞ்சி - 1/2 துண்டு

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - தேவையான அளவு

Curd idli| idli| curd recipes| sweet dahi recipes| sweet raita

செய்முறை:

முதலில் தயிரை எடுத்துக் கொள்ளவும்.  தேவையான கொத்தமல்லி, இஞ்சி, சீரகம், தேங்காய், பச்சைமிளகாய் எடுத்து அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இறுதியில் இது அலங்கரிக்க தேவைப்படும். இப்பொழுது அரைத்த விழுதை தயிரில் போட்டு நன்றாக கடைந்து கொள்ளவும். இட்லிகளைச் சிறு, சிறு துண்டுகளாக்கி அரைத்த கலவையில் ஊற விட்டு கொத்தமல்லியைத் தூவி விடவும். காராபூந்தியை இதன்மேல் தூவி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

பின்குறிப்பு :

1.தயிரில் இட்லி வெகுநேரம் ஊறினால் இட்லி குலைந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதனால் பரிமாறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தயிரை ஊற்றி இட்லியை வேக வைப்பதும் நல்லது.

top videos

    2.விரும்பினால் பொடித்த திராட்சை, பைனாப்பிள் கொண்டு அலங்கரிக்கலாம். காராபூந்தியை சாப்பிடும் போது தான் சேர்க்க வேண்டும். முதலிலேயே சேர்த்தால் ஊறி விடும் நன்றாக இருக்காது.

    First published:

    Tags: Breakfast, Curd, Food recipes