பேக்கிங் சோடா சமையலறை அறையில் ஒரு முக்கியமான பொருளாகும். இது கேக்குகள், மஃபின் மற்றும் குக்கீகள் போன்ற பேக்கிங் ஐட்டம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதே போல மஞ்சள் தூள் ஒரு பிரதான சமையலறை பொருள். பெரும்பாலான சமையல் அறைகளில் மஞ்சள் இல்லாமல் இருக்காது என்று சொல்லலாம். கிட்டத்தட்ட நாம் சமைக்கும் எல்லா உணவுகளிலுமே மஞ்சள் தூள் பயன்படுத்துகிறோம். பேக்கிங் சோடா மற்றும் மஞ்சள் தூள் ஆகிய இரண்டு பொருட்களுமே நம் உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன.
இவை இரண்டும் தனித்தனியாக நன்மைகளை அள்ளி வழங்கினாலும், இவை இரண்டையும் ஒன்றாக பயன்படுத்துவது புத்திசாலித்தனமாக இருக்காது. ஏன் என்று யோசிக்கிறீர்களா? இதனை தெரிந்து கொள்வதற்கு முன்பு பேக்கிங் சோடா பற்றிய ஒரு சில விஷயங்களை பார்ப்போம்.
பேக்கிங் சோடா ஒரு பல்துறை பொருள். இது சமையல் மற்றும் சுத்தம் செய்தல் உட்பட பல நன்மைகளை கொண்டுள்ளது. சமையலை பொருத்தவரை, பேக்கிங் சோடா பேக் செய்யப்படும் உணவுகள், இறைச்சிகளை மென்மையாக்குதல் பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்தல், நெஞ்செரிச்சல் அல்லது செரிமான பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைதல் என்று பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. சுத்தம் செய்தலில் கறைகளை அகற்றுதல், டியோடரைசாக பயன்படுத்தப்படுதல் மற்றும் பல்வேறு மேற்பரப்புகளை சுத்தம் செய்யவும் இது உதவுகிறது.
இதனை சிறிய அளவைகளில் உட்கொள்ளும் போது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனினும், அதிகப்படியாக பேக்கிங் சோடா எடுத்துக் கொள்வது வயிறு கோளாறுகள், எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் மெட்டபாலிக் அல்கலோசிஸ் போன்ற பக்க விளைவுகளை கொண்டுள்ளது. ஆகவே பேக்கிங் சோடாவை சுகாதார நிபுணரின் ஆலோசனையின் படி, மிதமான அளவுகளில் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, அதிக ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த பிரச்சனைகள் அல்லது சிறுநீரக கோளாறுகள் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனையின்றி அதனை சாப்பிடக்கூடாது.
இது தவிர தோசைக்கு மாவு தயாரிக்கும் பொழுது, அதில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்ப்பது தோசையை மொறு மொறுப்பாக மாற்ற உதவும். மேலும் பிரட் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை மென்மையாக்குவதற்கும் பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. இதனை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்றவற்றிற்கு மருந்தாகவும் அமைகிறது. மேலும் இதன் ஆற்றும் பண்புகள் காரணமாக இது சரும எரிச்சல் மற்றும் சன்பர்ன் போன்றவற்றிற்கும் உதவுகிறது.
View this post on Instagram
இப்பொழுது பேக்கிங் சோடா மற்றும் மஞ்சள் தூள் ஆகிய இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தினால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பதை இப்போது பார்க்கலாம். தோசை மாவை மஞ்சள் நிறமாக மாற்ற மஞ்சள் தூள் சேர்க்கும் பொழுது அதில் ஒருபோதும் பேக்கிங் சோடாவை கலக்க வேண்டாம். ஏனெனில் பேக்கிங் சோடா மஞ்சள் தூளுடன் இணையும் போது சிவப்பு நிறமாக மாறும்.
பேக்கிங் சோடா மஞ்சள் தூளுடன் இணையும் பொழுது அது ஒரு வேதி வினைக்கு உட்படுகிறது. இந்த வேதிவினை காரணமாக அது பிரவுன் கலராக மாறி கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. மஞ்சள் தூள் மட்டுமல்லாமல், பேக்கிங் சோடாவை எலுமிச்சை சாறு, வினிகர், மோர் போன்றவற்றுடன் கலக்க வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், அவை இரண்டும் ஒன்றாக வினை புரியும் பொழுது அதன் சுவையில் மாற்றம் ஏற்படுகிறது.
பேக்கிங் சோடாவை பயன்படுத்தி நாம் செய்யக்கூடிய ஒரு சில குக்கிங் ஹேக்குகளை இப்போது பார்க்கலாம்:-
Also Read | சமையல் பொருட்களின் சூப்பர் ஹீரோவாக பேக்கிங் சோடா... அதை வைத்து இத்தனை விஷயங்கள் செய்யலாமா..!!
கூடுதல் குறிப்புகள்:-
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baking soda, Cooking tips, Turmeric