முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தவளை வடை செய்ய ஈஸியான ரெசிபி...!

தவளை வடை செய்ய ஈஸியான ரெசிபி...!

venkatesh bhat makes tavala vadai | ஆமவடை என்றால் அதில் ஆமை எல்லாம் சேர்ப்பது கிடையாது. அதே போல தவலை வடை காலப்போக்கில் மருவி தவளை வடை ஆனது. தமிழில் ஒரு எழுத்து மாறினாலும் அதன் அர்த்தமே மாறிவிடுகிறது. அந்த வகையில் இந்த தவலை வடை, தவளை எல்லாம் சேர்த்து செய்வது கிடையாது. முற்றிலும் சைவ பொருட்களை கொண்டு செய்யப்படும் இந்த தவலை வடை அலாதியான சுவை கொண்டது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக வடை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது உளுந்து வடை, பருப்பு வடை, மசால் வடை, ஓட்ட வடை தான் அது என்ன? தவளை வடை. அந்த தவளை வடையை எப்படி செய்வது என்பது பற்றி செஃப் வெங்கடேஷ் பட் வீடியோவை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 100 கிராம்

பயத்தம்பருப்பு - 100 கிராம்

கடலை பருப்பு -100 கிராம்

துவரம் பருப்பு - 100 கிராம்

பச்சரிசி - 100 கிராம்.

கடுகு - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - 1 மூடி (துருவிய தேங்காய்)

' isDesktop="true" id="921967" youtubeid="Oyl9KuDTRII" category="food">

செய்முறை:

1. முதலில் உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி இவற்றை எடுத்து சுத்தமாக கழுவி 5 பொருட்களையும் சேர்த்தது ஒரு 4 மணி நேரம் நன்றாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த பருப்புகள் ஊறும் பொழுதே 10 சிவப்பு மிளகாயையும் சேர்த்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

2. ஊறிய பிறகு இதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு கிரைண்டரில் கொரகொரப்பாகவும் இல்லாமல் மற்றும் மைய அரைத்துக் கொள்ளாமலும் நடுத்தரமாக அரைத்து கொள்ள வேண்டும்.

3. பின் ஒரு வாணலியில் 30-40 ml கடலை எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு பொறிந்தவுடன் 1 மூடி துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக ரோஸ்ட் செய்து கொள்ளவும்

4. அது நல்லா ரோஸ்ட் ஆனவுடன் 1 டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள் சேர்க்கவும். இவை அனைத்தையும் சேர்த்து மிதமாக வறுத்துக் கொள்ளவும். அவை நன்றாக வறுப்பட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

5. பின் அரைத்து வைத்த மாவில் தேங்காய், கடுகு, பெருங்காயம் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

Also see... இன்று உலக இட்லி தினம்... சாஃப்டான இட்லி செய்ய சில டிப்ஸ்...

6. பிறகு கையில் வடை தட்டுவதாக இருந்தால் கையில் தண்ணீர் தடவி கொள்ளுங்கள் அல்லது வாழை இலையில் வடை தட்டுவதாக இருந்தால் அந்த இலையில் எண்ணெய் தடவி கொள்ளுங்கள்.

7. பிறகு கொஞ்சமாக மாவை எடுத்து வாழை இலையில் எண்ணெய் தடவி ரவுண்டாக இருக்குமாறு தவளை வடையை தட்டி கொள்ளுங்கள்.

8. பிறகு ஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு சிமிலில் வைத்து 8-10 நிமிடம் தவளை வடையை வேக வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.

9. அவ்ளோதாங்க இப்பொழுது ஒரு சூடான சுவையான தவளை வடை ரெசிபி ரெடி.

top videos

    10. ஈஸியா இதை வீட்ல எல்லாரும் செஞ்சி சாப்பிடுங்க. இந்த டிப்ஸ் எல்லாருக்கும் புடிக்கும் மறக்காம ட்ரை பண்ணி பாருங்க.

    First published:

    Tags: Evening Snacks