முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரையில் சட்னி செய்ய ரெசிபி..!

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரையில் சட்னி செய்ய ரெசிபி..!

வல்லாரை துவையல்

வல்லாரை துவையல்

vallarai chutney | வல்லாரை கீரையோடு சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னியாக்கி, தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூளை சோர்வு நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும்.

  • Last Updated :

இயற்கையாகவே ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. அத்தகைய கீரையில் சட்னி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

வல்லாரை கீரை - அரை கட்டு

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - இரண்டு

மிளகு - கால் டீஸ்பூன்

புளி - ஒரு கோலி குண்டு அளவு

பூண்டு - 2 பல்

எண்ணெய் - தேவைகேற்ப

உப்பு - தேவைகேற்ப

கடுகு - சிறிதளவு

கறிவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை

1. முதலில் வல்லாரைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

2. பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஆற வைக்கவும்.

3. அதே கடாயில் சுத்தம் செய்த வல்லாரைக் கீரையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

Also see... இருமல், சளி தொல்லையை போக்கணுமா? இந்த துவையலை தினமும் சாப்பிடுங்க..!

4. அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, புளி சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

5. பிறகு, கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேபில்லை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கிளறி இறக்கவும்.

top videos

    6. இப்போது ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி ரெடி..

    First published:

    Tags: Chutney, Food