முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / லீவு விட்டாச்சு.. உங்கள் குழந்தைகளுக்காக ஆரோக்கியத்துடன் சுவையான ரெசிபீஸ்..!

லீவு விட்டாச்சு.. உங்கள் குழந்தைகளுக்காக ஆரோக்கியத்துடன் சுவையான ரெசிபீஸ்..!

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்

குழந்தைகளின் விடுமுறை நாட்களில் அவர்களுக்கு சுவையான சத்தான இந்த மாதிரியான ஸ்நாக்ஸ் வகைகளை செய்து கொடுத்து அசத்துங்கள்..

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடைக்காலம் வந்தாலே குழந்தைகளின் விடுமுறை நாட்கள் நம் மனதிற்கு முதலில் நினைவுக்கு வரும். வீட்டில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற மனநிலை ஒருபுறம் இருந்தாலும், இந்த நாட்களில் என்ன மாதிரியான உணவுகளை செய்துக்கொடுக்கலாம் என்ற நினைப்பும் எழக்கூடும்.

இதோடு வீட்டிலே இருப்பதால் உடல் எடையும் அதிகரிக்கக்கூடாது. எனவே இதுப்போன்ற மனநிலையில் நீங்கள் இருந்தால் இனி கவலை வேண்டாம். ஆரோக்கியத்துடன் அதிக சுவையைத் தரக்கூடிய சில சிம்பிள் ரெசிபிகள் இங்கே உள்ளது. இதோ என்னென்ன என்பது குறித்து வாங்க தெரிஞ்சுக்கலாம்..

ஆரோக்கியமான கோடைகால சமையல் டிப்ஸ்:

1. கேரட் பொரியல் பப்ஸ்:

தேவையான பொருள்கள் :

கேரட் - 150 கிராம்

பாசிப்பருப்பு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

தேங்காய் துருவியது - 3டீஸ்பூன்

கடுகு – 1 தேக்கரண்டி

மிளகாய் வத்தல் – 2

சீரகம் – 1 தேக்கரண்டி

மஞ்சள் – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

கோதுமை மாவு – 250 கிராம்

எண்ணெய்- தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் கேரட்டை நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் கேரட் மற்றும் பருப்பை ஊற வைக்கவும். இதையடுத்து கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்த பருப்பை சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • பின்னர் கறிவேப்பிலை, நறுக்கிய கேரட், சிவப்பு மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். கடாயை மூடி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி ஆற வைக்கவும்.
  • கேரட் பப்ஸ் செய்வதற்கு, மாவை எண்ணெய் சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் மாவை திரட்டி அதில் பொரியலை சேர்த்து பப்ஸ் போன்று செய்துக்கொள்ளவும். இறுதியில் எண்ணெய்யை சூடாக்கி பொரித்து எடுத்தால் போதும். சுவையாக கேரட் பப்ஸ் ரெடி.
  • 2. மாம்பழ சல்சா:

    தேவையான பொருள்கள் : 

    மாம்பழம் – 1 தோல் நீக்கி நறுக்கியது

    மிளகு – கால் கப்

    வெங்காயம் – ¼ கப்

    பச்சை மிளகாய் – 1

    கொத்தமல்லி – 2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

    சுவைக்கு சர்க்கரை

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    மேற்கூறியுள்ள அனைத்துப்பொருள்களையும் முதலில் ஒரு பவுலில் எடுத்து கலக்கிக்கொள்ளவும். இவற்றை சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து பரிமாறுவதற்கு முன்னர் கொஞ்ச நேரம் குளிரவைத்து பரிமாறினால் உங்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும்.

    3. பாண்டா சோடா ஷிகன்ஜி:

    தேவையானப் பொருட்கள்:

    புதினா இலைகள் – 3

    எலுமிச்சை – 4

    தேன் – 2 தேக்கரண்டி

    தண்ணீர்

    சோடா – தேவையாள அளவு

    செய்முறை:

top videos

    ஒரு பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். இப்போது புதினா இலைகளை குழைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து எலுமிச்சை சாறு மற்றும் சோடா சேர்த்தால் போதும் சுவையான மற்றும் ஆரோக்கியமான சோடா ரெடி. இந்த ரெசிபிகள் நிச்சயம் கோடைக்காலத்தில் உங்களுக்கு ஹெல்த்தியாக இருக்கும். எனவே நீங்களும் டிரை பண்ணிப்பாருங்கள்

    First published:

    Tags: Evening Snacks, Food recipes, Snacks