கன்னடா மற்றும் தெலுங்கு புத்தாண்டு தினமான தெலுங்கு வருட பிறப்பு யுகாதி பண்டிகை (Ugadi) என அனைவராலும் அழைக்கப்படுகிறது. அந்த யுகாதி பண்டிகை இந்த வருடம் மார்ச் 22ஆம் தேதியான நாளை வருகிறது. இந்நாளில் வேம்பு-வெல்லக் கலவையை பச்சடி போல செய்து உறவினர்களுக்கு கொடுத்து யுகாதி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
வெல்லம் - 100 கிராம்
புளி - 50 கிராம்
மாங்காய் – 1
வேப்பம்பூ - அரை கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
1. முதலில் வெல்லத்தைத் தூளாக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து ஒரு டம்ளர் அளவுக்குக் கெட்டியான கரைசலாக எடுத்துக் கொள்ளவும்.
2. பின்னர் மாங்காயினைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. வெல்லம், புளிக்கரைசல், மாங்காய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து நன்றாகக் கிளறினால் யுகாதி பச்சடி ரெடி.
குறிப்பு
யுகாதி பச்சடியில் சேர்க்கப்படும் வெல்லம், சந்தோஷத்தை குறிக்கும். உப்பு வாழ்க்கையின் மீதான பற்றை குறிக்கும். வேப்பம் பூ வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும். புளி சவாலான தருணங்களை குறிக்கும். மாங்காய் துண்டுகள் புதிய சவால்கள் மற்றும் ஆச்சரியங்களை குறிக்கும். கடைசியாக பச்சை மிளகாய் கோபம் ஏற்படுத்தும் வாழ்க்கையின் தருணங்களை குறிக்கும். சந்தோஷமாக வாழ்ந்திட வாழ்க்கையின் இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே இந்த பச்சடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pachadi recipes