முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காரசாரமான தக்காளி ஊறுக்காய் செய்ய ரெசிபி...!

காரசாரமான தக்காளி ஊறுக்காய் செய்ய ரெசிபி...!

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஊறுகாய்

tomato Pickle | பொதுவாக ஊறுகாய் என்றதும் மாங்காய், எலுமிச்சை, நாரத்தை, நெல்லி, பச்சைமிளகாய் போன்றவைதான் நினைவுக்கு வரும். தக்காளி என்றதும் அது சாம்பாருக்கும் சமையலுக்கும் தான் என்று நினைப்பீர்கள். ஆனால் தக்காளியை வைத்து சுவையான ஊறுகாயை செய்யலாம். இந்த பதிவில் தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் இருந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தக்காளி ஊறுகாய் சிறப்பாகவே இருக்கும். இந்த ஊறுகாயை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், சப்பாத்திக்கு தொட்டு கொள்ளலாம். தயிர்சாதத்துக்கு மோர் மிளகாய் விட இந்த தக்காளி ஊறுகாய் சிறந்த காம்பினேஷனாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

தக்காளி - 4

எண்ணெய் - 2 tsp

புளி தண்ணீர் - அரை கப்

மிளகாய் தூள் - 5 tsp

மஞ்சள் - 1/2 tsp

வெந்தையத் தூள் - 1 tsp

கள் உப்பு - 3 tsp

தாளிக்க

எண்ணெய் - 3/4 tsp

காய்ந்த மிளகாய் - 5

கடுகு - 1 tsp

பூண்டு - 10

தக்காளி

செய்முறை :

1.தக்களியை நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.

2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

3.அதோடு புளித் தண்ணீர் சேர்க்கவும். அடுத்ததாக மிளகாய்த் தூள், மஞ்சள், வெந்தையத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

4.நன்கு எண்ணெய் பிரிந்து வருமாறு வதக்கவும்.

5. தாளிக்க மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி ஊறுகாயில் கொட்டவும்.

top videos

    6.சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி..

    First published:

    Tags: Pickle, Tomato