சப்பாத்தி இன்று அனைவரின் வீட்டிலும் கட்டாய உணவாகி விட்டது. அப்படி பலர் சப்பாத்தி சுடும்போது எதிர்கொள்ளும் பிரச்னை கடினமான சப்பாத்தி. அதாவது சப்பாத்தி மென்று சாப்பிட கடினமாக இருக்கும் அல்லது வறண்டு போய்விடும். இதனால் சப்பாத்தி சாப்பிடுவதும் சிரமமாக இருக்கும். இதை தவிர்க்க.. சாஃப்ட்டான சப்பாத்தி வேண்டுமெனில் இனி இப்படி சப்பாத்தி மாவு பிசையுங்கள்.
சப்பாத்தி மாவு எப்படி பிசைய வேண்டும்..?
கோதுமை மாவு வீட்டில் அரைத்தது அல்லது கடையில் வாங்கியது என எதுவாக இருந்தாலும் அதை சல்லடையில் சலித்து பயன்படுத்துங்கள்.
பாத்திரத்தில் தேவையான மாவு கொட்டிக்கொள்ளுங்கள். பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக இந்த சீக்கிரெட் பொருளான சர்க்கரையை சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரைதான் சாஃப்ட் சப்பாத்திக்கான முதல் காரணம். எனவே ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஒரு வாழைப்பழத்தையு சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். இது சப்பாத்திக்கு சுவையும் சேர்க்கும்.
அடுத்ததாக சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டி கொண்டு கிளறுகள் . அதாவது கொழுக்கட்டை மாவு பிசைவது போல் கிண்டுங்கள்.
சூடு ஆறியதும் கைகளைக் கொண்டு நன்கு பிசையுங்கள். பின் அதை பாத்திரத்தில் உருட்டி உயர்த்தி அடித்து அடித்து பிசையுங்கள். இவ்வாறு செய்வதால் மாவு தளர்வு கொடுக்கும் இறுக்கமாக இருக்காது.
பின் எண்ணெய் கொஞ்சம் சேர்த்து பிசைந்துவிட்டு ஈரத்துணி போட்டு மூடிவிடுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து பிசையுங்கள்.
உருட்டும் போது மின் விசிரிக்கு கீழ் உருட்டாதீர்கள். இல்லையெனில் காற்று நேரடியாக படும்போது மாவின் ஈரப்பதம் போய் வறண்டு போய்விடும். இதனால் மாவு மென்று சாப்பிட கடினமாக இருக்கும்.
மேலே குறிப்பிட்டபடி மாவு பிசைந்தால் நீங்கள் சுடும் சப்பாத்தி மிகவும் சாஃப்ட்டாக இருக்கும். உங்களைப் போல் சப்பாத்தி சுட யாரும் இல்லை என்பது போல் ஆகிவிடும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.