முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பாய் வீட்டு பிரியாணி மணக்க இந்த மசாலா பொடி தான் காரணம்.. 3 பொருள் இருந்தா போதும்..!

பாய் வீட்டு பிரியாணி மணக்க இந்த மசாலா பொடி தான் காரணம்.. 3 பொருள் இருந்தா போதும்..!

பிரியாணி மசாலா

பிரியாணி மசாலா

மற்ற பிரியாணிகளில் கிடைக்காத சுவை முஸ்லீம் வீட்டு பிரியாணியில் கிடைப்பதற்கு என்ன காரணம்..?

  • Last Updated :
  • Tamil Nadu, India

எத்தனை வகை பிரியாணி சாப்பிட்டாலும் முஸ்லீம் வீட்டு பிரியாணி என்றாலே அது தனி சுவைதான். அதனால்தான் சென்னையில் கூட பாய் வீட்டு பிரியாணி என்கிற பெயரில் பல கடைகளை காண முடிகிறது. இருந்தாலும் அப்படி மற்ற பிரியாணிகளில் கிடைக்காத சுவை முஸ்லீம் வீட்டு பிரியாணியில் கிடைப்பதற்கு என்ன காரணம்..? இந்த ரெசிபியை கவனிங்க.. உங்களுக்கே தெரியும்.

தேவையான பொருட்கள் :

பட்டை - 20 கிராம்

ஏலக்காய் - 20 கிராம்

கிராம்பு - 15 கிராம்

கல் உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை :

இந்த பிரியாணி மசாலா செய்ய வேண்டுமெனில் மசாலா பொருட்களை நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும்.

கடாயில் போட்டு வறுத்தால் வாசனை மாறிவிடும்.

2 நாள் வரை நன்கு வெயிலில் காய வைத்து பின் மிக்ஸி ஜாரில் அனைத்தையும் போடுங்கள்.

இறுதியாக கல் உப்பு ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு மைய பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் பிரியாணி மசாலா தயார்.

top videos

    இதை காற்று புகாத டப்பாவில் அடைத்து வெளியே கூட வைக்கலாம். கல் உப்பு சேர்த்திருப்பதால் சீக்கிரம் கெட்டுப்போகாது. வாசனையும் நீண்ட நாள் இருக்கும்.

    First published:

    Tags: Biriyani, Cooking tips, Masala