முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இருமல், சளி தொல்லையை போக்கணுமா? இந்த துவையலை தினமும் சாப்பிடுங்க..!

இருமல், சளி தொல்லையை போக்கணுமா? இந்த துவையலை தினமும் சாப்பிடுங்க..!

தூதுவளை துவையல்

தூதுவளை துவையல்

Thuthuvalai thuvaiyal | தூதுவளை இலை சளிப்பிரச்னைக்கு தீர்வாக அமையும். தூதுவளை துவையலை செய்து அடிக்கடி சாப்பிட்டால் சளிப்பிரச்னைகள் சரியாகும்.

  • Last Updated :

ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவையல்‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் இருமலும் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம்.

தேவையான பொருள்கள்

தூதுவளை இலை - 2 கப்

புதினா - 1 கப்

பூண்டு - 4 பல்

இஞ்சி - 1/2 துண்டு

சிறிய வெங்காயம் - 10

சிவப்பு மிளகாய் - 6

எண்ணெய் - 2 டீஸ்பூன்

புளி - கோலிக்குண்டு அளவு

துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க

கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை

1. பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும்.

2. கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆற வைக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.

3. மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்.

top videos

    4. இப்போது சுவையான சத்தான தூதுவளை துவையல் ரெடி.

    First published: