முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நெஞ்சு சளியை முறிக்கும் தூதுவளை ரசம்.. ரெசிபி இதோ..

நெஞ்சு சளியை முறிக்கும் தூதுவளை ரசம்.. ரெசிபி இதோ..

தூதுவளை ரசம்

தூதுவளை ரசம்

பல வகையான பிரச்னைகளுக்கு தூதுவளை மருத்துவ குணம் நிறைந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இறுமல், நெஞ்சு சளி, வயிற்று வலி, பித்தம், வாத நோய்கள் என பல வகையான பிரச்னைகளுக்கு தூதுவளை மருத்துவ குணம் நிறைந்தது. அதில் ரசம் எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தூதுவளை இலைகள் - கைப்பிடி அளவு

எண்ணெய் - 1 tsp

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

தக்காளி - 2

மிளகு - 1 tsp

சீரகம் - 1tsp

பூண்டு - 3

துவரம் பருப்பு - 1 tsp

பெருங்காயத்தூள் 1 சிட்டிகை

மஞ்சள் பொடி - 1/4 tsp

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தே.அ

தாளிக்க :

கடுகு - 1 tsp

சீரகம் - 1 tsp

எண்ணெய் - 1 tsp

செய்முறை :

முதலில் அனைத்து பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், துவரம் பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் பூண்டு மற்றும் தூதுவளை இலைகளை சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைக்க வேண்டும். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் ஊற வைத்த புளியை கரைத்துக்கொள்ளுங்கள். தக்காளியையும் கரைத்துக்கொள்ளுங்கள்.

இரண்டையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

புளிப்பு சுவை போதுமானது எனில் அரைத்து மிளகு சீரகத்தை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

பின் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் , காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின் கரைத்த ரசம் கரைசலை சேர்த்து கலந்துவிட்டு கொதிக்க விடுங்கள்.

top videos

    ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் தூதுவளை ரசம் தயார்..!

    First published:

    Tags: Chest pain, Cold, Rasam rice