முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நொடியில் தாளிப்பு மாங்காய் ஊறுகாய்.. பழைய சோறு, மதிய உணவு என எதற்கும் தொட்டுக்கொள்ளலாம்..!

நொடியில் தாளிப்பு மாங்காய் ஊறுகாய்.. பழைய சோறு, மதிய உணவு என எதற்கும் தொட்டுக்கொள்ளலாம்..!

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய் பிரியர் எனில் உங்களுக்காகவே இந்த ரெசிபி...

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாங்காய் ஊறுகாய் என்றாலே நாவூறும். அதை எந்த குழம்புக்கும் தொட்டுக்கொள்ளலாம். சிலர் வெறுமனே சாப்பிடுவார்கள். அப்படி நீங்களும் மாங்காய் ஊறுகாய் பிரியர் எனில் உங்களுக்காகவே இந்த டிப்ஸ்.

தேவையான பொருட்கள் : 

  • மாங்காய் - 3
  • நல்லெண்ணெய் - 1 கப்
  • மிளகாய் தூள் - 1 கப்
  • உப்பு - 1 கப்
  • பெருங்காயத்தூள் - 1 1/2 tsp
  • கடுகு - 2 tbsp
  • வெந்தையம் - 1 tbsp
  • மஞ்சள் 1 tsp
  • பூண்டு - 1

top videos

    செய்முறை :

    முதலில் மாங்காயை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
    வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கிக்கொள்ளுங்கள். கடுகை அப்படியே அரைத்து பொடியாக்கிக்கொள்ளுங்கள். பூண்டையும் தனியாக மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
    தற்போது பெரிய கிண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொடிகளையும் ஒன்றாக கொட்டுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
    தற்போது அரைத்த பூண்டு பேஸ்ட்டையும் சேருங்கள். அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். பின்பு நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து மசாலாவை கிளறி பிரட்டுங்கள்.
    இறுதியாக நல்லெண்ணெய்யை காய்ச்சி கலவையில் ஊற்றி சூடு பதத்துடன் கிளறுங்கள்.
    அவ்வளவுதான் நொடியில் மாங்காய் ஊறுகாய் ரெடி.
    First published:

    Tags: Mango, Pickle