முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பிஸியான வேலைக்கு நடுவே சமையலா..? உங்களுக்கான அசத்தல் ’ஒன் பாட் மீல்’ ரெசிபி..

பிஸியான வேலைக்கு நடுவே சமையலா..? உங்களுக்கான அசத்தல் ’ஒன் பாட் மீல்’ ரெசிபி..

டெண்டிலி பாத்

டெண்டிலி பாத்

மகாராஷ்டிரா மாநிலம் பாம்பே சாண்ட்விச் முதல் அனைவரும் விரும்பி உண்ணும் பாவ் பாஜி மற்றும் வடா பாவ் வரை அசத்தலான உணவுகளைக் கொண்டு தனித்து நிற்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியமானது அதன் மாறுபட்ட மற்றும் வெவ்வேறு வகையான உணவுகளில் பிரதிபலிக்கிறது. ஆம், நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்துவமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் பாம்பே சாண்ட்விச் முதல் அனைவரும் விரும்பி உண்ணும் பாவ் பாஜி மற்றும் வடா பாவ் வரை அசத்தலான உணவுகளைக் கொண்டு தனித்து நிற்கிறது.

நம் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியமானது அதன் மாறுபட்ட மற்றும் வெவ்வேறு வகையான உணவுகளில் பிரதிபலிக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆம், நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு தனித்துவமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் பாம்பே சாண்ட்விச் முதல் அனைவரும் விரும்பி உண்ணும் பாவ் பாஜி மற்றும் வடா பாவ் வரை அசத்தலான உணவுகளைக் கொண்டு தனித்து நிற்கிறது. இங்கு உள்ள மற்றொரு பிரபலமான உணவு டெண்டிலி பாத் ஆகும். இது நமக்கு எளிதில் கிடைக்கும் கோவைக் காய் கொண்டு செய்யப்படுகிறது. அது மட்டும் அல்ல, இதனை செய்வதும் எளிது. இது ஒரு ஒன் பாட் மீல் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவைக் காய் உடன், அரிசி, வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் கோடா மசாலா எனப்படும் தனித்துவமான மசாலா கலவை சேர்த்து இது ஒரே பாத்திரத்தில் தயாரிக்கப்படுகிறது. கோவைக் காயில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் எடை இழக்கவும் கோவைக் காய் உதவுகிறது.

top videos

    தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:

    ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
    அடுத்து அதனை வேறு பாத்திரத்திற்கு மாற்றி, குக்கரில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகைப் போடவும்.
    அடுத்து நறுக்கி வைத்த பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
    பின்னர், அதில் நறுக்கிய வெங்காயம், கோவைக் காயைப் போட்டு வதக்கவும்.
    நன்கு வதங்கிய பின்னர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கோடா மசாலாவைச் சேர்க்கவும்.
    சற்று நேரம் கிளறி விட்ட பின்பு அரிசியை சேர்த்து கிளறி விடவும். அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி விடவும். மிதமான தீயில், 15 நிமிடங்களுக்கு வேக விடவும்.
    மிகக் குறைந்த தீயில், ஒரு சில நொடிகள் விட்டு விட்டு, அடுப்பை அணைத்து விடவும். நாம் வறுத்த வைத்த முந்திரி, துருவிய தேங்காய், கொத்தமல்லி எல்லாம் சேர்த்து சூடாக பரிமாறுங்கள்.
    இதனை வெறும் தயிர் அல்லது தயிர் பச்சடி உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இன்று ஏதாவது புதிதாக சமைக்கலாம் என்று நீங்கள் திட்டமிட்டு இருந்தால், இந்த டெண்டிலி பாத் அதற்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
    First published:

    Tags: Food recipes, Recipe