முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / செம டேஸ்ட்... காரசாரமான 'கோல்கொண்டா சிக்கன்' செய்வது எப்படி?

செம டேஸ்ட்... காரசாரமான 'கோல்கொண்டா சிக்கன்' செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்த எக் ரோல் செய்யலாமா?

குழந்தைகளுக்கு பிடித்த எக் ரோல் செய்யலாமா?

எப்பவும் போல சிக்கனை வைத்து சிக்கன் கிரேவி, சிக்கன் பிரியாணி, சிக்கன் ப்ஃரைனு செய்யாம இந்த முறை தெலுங்கானா ஸ்பெஷல் கோல்கொண்டா சிக்கன் செய்யலாம் வாங்க...

  • Last Updated :
  • Tamil Nadu, India

அசைவ உணவு என்றாலே பலருக்கும் விருப்பம்தான். விடுமுறை நாட்களில் மீன், ஆடு, கோழி என அசைவ உணவுகளின் வாசனை மூக்கை துளைக்கும். ஆனால், அனைவரும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் என ஒரே ரெசிபியை செய்வோம்.

இந்த முறை ஏதாவது புதுசா ட்ரை பண்ணலாம் என நீங்க யோசித்தால், ஒரு சூப்பரான சிக்கன் ரெசிபி பற்றி கூறுகிறோம். ஸ்பெஷல் கார சாரமான சுவையில் தயாராகும் ‘கோல்கொண்டா சிக்கன்’-னை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் (கால்) - 1.2 கிலோகிராம்

சோள மாவு - 30 கிராம்.

பச்சை மிளகாய் - 10.

இஞ்சி - 100 கிராம்.

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி.

தயிர் - அரை கப்.

கொத்தமல்லி பொடி - 1/2 ஸ்பூன்.

வெங்காயம் - 2.

மிளகு - 1 ஸ்பூன்.

முட்டை - 1.

மைதா - 20 கிராம்.

பூண்டு பல் - 20.

கொத்தமல்லி தழை - ஒரு கொத்து.

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்.

சாட் மசாலா - 1/2 ஸ்பூன்.

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் எடுத்துக் கொண்ட சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து தனியே எடுத்து வைக்கவும். தொடர்ந்து எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தற்போது கோப்பை ஒன்றை எடுத்து அதில் சுத்தம் செய்த சிக்கனுடன், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சோள மாவு, உப்பு மற்றும் மைதா சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

பின்னர் இதனுடன் ஒரு முட்டையை உடைத்து சேர்க்கவும். தொடர்ந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடத்திற்கு நன்கு ஊற வைக்க வேண்டும்.

Also Read | அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தற்போது இதே கடாயில் சிறிதளவு எண்ணெயுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தொடர்ந்து தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடுபடுத்தவும்.

இறுதியாக இதில் பொரித்து வைத்த சிக்கன் துண்டுகள், சாட் மசாலா, மிளகாய் தூள், கொத்தமல்லி பொடி ஆகியவற்றை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான கோல்கொண்டா சிக்கன் ரெடி!

top videos


    First published:

    Tags: Food, Food recipes