முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ராஜ்மாவில் கட்லெட் செஞ்சிருக்கீங்களா? இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள்...!

ராஜ்மாவில் கட்லெட் செஞ்சிருக்கீங்களா? இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள்...!

ராஜ்மா கட்லெட்

ராஜ்மா கட்லெட்

rajma cutlet | புரதச்சத்து நிறைந்த ராஜ்மா தானியத்தை பலரும் வேக வைத்து மாலை நேரத்தில் சாப்பிடுவார்கள். ஆனால் அதைக் காட்டிலும் நல்ல சுவையில் என்றைக்காவது இப்படி கட்லெட்டாக சமைத்து சாப்பிடலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புரதச்சத்து நிறைந்த ராஜ்மா தானியத்தை பலரும் வேக வைத்து மாலை நேரத்தில் சாப்பிடுவார்கள். ஆனால் அதைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக நல்ல சுவையில் என்றைக்காவது இப்படி கட்லெட்டாக சமைத்தால், சத்துக்களுடன் சுவையும் கிடைக்கும். கண்டிப்பாக இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

ராஜ்மா - 1 கப்

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 4

பச்சை மிளகாய் - 3

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் - 1/2 டீஸ்பூன்

சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்

காஷ்மீர் சிவப்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்

உப்பு - தே.அ

பெரிய உருளைக்கிழங்கு - 1

கொத்தமல்லி - சிறிதளவு

புதினா - சிறிதளவு

எலுமிச்சை சாறு - 1/2

எண்ணெய் - 1 tsp

நெய் - 1 tsp

செய்முறை :

ராஜ்மாவை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் குக்கரில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து 4 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள். பின் அதை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக உருளைக்கிழங்கையும் வேக வைத்துக்கொண்டு மசித்து வைத்துக்கொள்ளுங்கள்.
மற்ற பொருட்களையும் பொடியாக நறுக்கி தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது வாணலி வைத்து அதில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின் தூள் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் அரைத்த ராஜ்மாவை சேர்த்து கிளறுங்கள். மசாலாக்கள் ராஜ்மாவுடன் கலக்க வேண்டும். போதுமான உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் அடுப்பை அணைத்துவிட்டு மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்ததும் கைகளில் எலுமிச்சை அளவு உருண்டை எடுத்துக்கொண்டு கட்லெட் போல் கைகளில் வைத்து தட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
மீண்டும் தவா வைத்து எண்ணெய் விட்டு கட்லெட்டை இரு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் சுவையான ராஜ்மா கட்லெட் ரெடி. இதற்கு புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.
First published: