முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சுவையான மட்டன் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி..? இந்த வீக் எண்ட் செஞ்சு அசத்திடுங்க..!

சுவையான மட்டன் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி..? இந்த வீக் எண்ட் செஞ்சு அசத்திடுங்க..!

Spring Roll

Spring Roll

விழாக்களின் போதும் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து அரட்டை அடிக்கும் போதும் இந்த மட்டன் ஸ்ப்ரிங் ரோல் மிகவும் ஏற்ற உணவு பொருளாக இருக்கும்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

சீன உணவு பொருட்களில் ஸ்ப்ரிங் ரோலை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மிகப் பிரபலமான சீன உணவுப் பொருளான இந்த ஸ்ப்ரிங் ரோல் விதவிதமான முறைகளில் தயார் செய்யப்படுகிறது. வெஜ் ஸ்ப்ரிங், ரோல் சிக்கன் ஸ்ப்ரிங் ரோல், மட்டன் ஸ்ப்ரிங் ரோல் என பலவிதமான ஸ்பிரிங் ரோல்கள் உணவகங்களில் கிடைக்கின்றன.

ஆனால் சிலருக்கு வெளியே உணவகங்களில் சாப்பிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். மேலும் உணவகங்களில் கிடைக்கும் அனைத்து உணவு பொருட்களுமே உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்டவர்களுக்கான பதிவு தான் இது. நாவில் எச்சில் ஊற வைக்கும் மட்டன் ஸ்ப்ரிங் ரோலை நம்மால் வீட்டிலேயே மிக எளிதாக தயாரிக்க முடியும். அதிக சுவையுடன் மொறுமொறுவென்று இருக்கும் இந்த ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் விழாக்களின் போதும் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து அரட்டை அடிக்கும் போதும் இந்த மட்டன் ஸ்ப்ரிங் ரோல் மிகவும் ஏற்ற உணவு பொருளாக இருக்கும். இந்த மாட்டின் ஸ்ப்ரிங் ரோலுடன் டோமட்டோ கெட்சப், மயோனைஸ் போன்ற உங்களுக்குப் பிடித்த சாஸை பயன்படுத்தி நீங்கள் உட்கொள்ளலாம். இப்போது வீட்டிலேயே எவ்வாறு மட்டன் ஸ்ப்ரிங் ரோல் தயார் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 • நறுக்கிய மட்டன் கால் கிலோ
 • நறுக்கிய கொத்தமல்லி இலைகள் 2 டேபிள் ஸ்பூன்
 • அரைத்த இஞ்சி – 1 டீஸ்பூன்
 • சீரகத்துள் - அரை டீஸ்பூன்
 • கறி மசாலா - அரை டீஸ்பூன்
 • மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
 • கருப்பு மிளகு - கால் டீஸ்பூன்
 • சாட் மசாலா - கால் டீஸ்பூன்
 • நறுக்கிய வெங்காயம் - ஒன்று
 • நறுக்கிய பூண்டு - நான்கு பற்கள்
 • மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
 • பெருஞ்சீரக விதைகள் - கால் டீஸ்பூன்
 • ஸ்ப்ரிங் ரோல் ஷீட் - 10
 • வெஜிடபிள் ஆயில் கால் கப்
 • உப்பு தேவையான அளவு

top videos

  செய்முறை:

  அடுப்பை எடுத்து கடாயில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, அதனுடன் பூண்டு, இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
  வெங்காயம் நன்றாக வதங்கியதும் பிறகு நாம் எடுத்து வைத்துள்ள அனைத்து மசாலாக்களையும் அதனோடு சேர்த்து ஒரு நிமிடம் வரை மீண்டும் அதனை வதக்கவும்.
  இப்போது நாம் எடுத்து வைத்துள்ள நறுக்கிய மட்டன் துண்டுகளை கடாயில் போட்டு கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி கறி மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை மூடி வைத்து விடவும்.
  எட்டில் இருந்து பத்து நிமிடங்கள் வரை நன்றாக வேகவைத்தபின், அதனோடு கொத்தமல்லி இலைகள் சேர்த்து மீண்டும் நன்றாக வதக்க வேண்டும்.
  நீர் முழுவதும் வற்றி போகும் வரை சமைத்த பிறகு, இப்போது நாம் எடுத்து வைத்துள்ள ஷீட்களை டைமண்ட் ஷேப்பிற்கு மாற்றி நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலாவை அந்த சீட்டின் மற்றொரு முனையில் வைத்து மூன்று பக்கமும் சீட்டை மடித்து கொள்ளவும்.
  இப்போது ஸ்ப்ரிங் ஷீட்டின் திறந்த முனைகளில் எண்ணெயை தடவி கொள்ளவும்.
  இப்போது அந்த ஸ்ப்ரிங் ரோல்களை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை உள்ள எண்ணையை வடித்து எடுப்பதற்கு, ஒரு பேப்பரின் மேல் வைத்து எண்ணெயை முடிந்த அளவு வடிகட்டிக் கொள்ளவும்.
  அவ்வளவுதான் சுவையான மட்டன் ஸ்பிரிங் ரோல் தயார். இதனோடு கிரீன் சட்னி அல்லது மயோனைஸ் சேர்த்து அனைவருக்கும் பரிமாறலாம்.
  First published:

  Tags: Mutton, Mutton recipes, Snacks