முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நாவுக்கு ருசியான பெரிபெரி ஃபிரைஸ் ரெசிபி... சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்..

நாவுக்கு ருசியான பெரிபெரி ஃபிரைஸ் ரெசிபி... சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்..

Peri peri fries

Peri peri fries

உப்பு, பெரி பெரி மசாலா அல்லது சீஸ் போன்றவை சேர்க்கப்பட்ட ஃபிரை வகையை சாப்பிடும்போது நாவில் சுவை நாளங்கள் தாளம் போட்டுக் கொண்டிருக்கும்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

கோடை விடுமுறை நெருங்கி வரும் நிலையில், குழந்தைகளுக்கு வித, விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அசத்த வேண்டும் என்ற எண்ணம் எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும். வெளியிடங்களுக்கு, தியேட்டர்களுக்கு செல்லும்போது குழந்தைகள் ஆசை, ஆசையாக கேட்டு வாங்கி சாப்பிடுகின்ற ஃபிரை வகைகளை நாம் வீட்டிலேயே செய்து கொடுத்து அசத்த முடியும்.

அந்த வகையில் உருளைக் கிழங்கில் செய்து கொடுக்கக் கூடிய ஃபிரை வகைகள் குழந்தைகளின் கலோரி தேவையையும் நிறைவு செய்யும். உருளைக் கிழங்கில் ஸ்டார்ச் சத்து நிறைந்து இருப்பதால் குழந்தைகளுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். உப்பு, பெரி பெரி மசாலா அல்லது சீஸ் போன்றவை சேர்க்கப்பட்ட ஃபிரை வகையை சாப்பிடும்போது நாவில் சுவை நாளங்கள் தாளம் போட்டுக் கொண்டிருக்கும். இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நீளமான வடிவில் உள்ள உருளைக் கிழங்கு கால் கிலோ அளவு எடுத்துக் கொள்ளுங்கள். பொறிப்பதற்கு தேவையான செக்கு எண்ணெய் 200 மில்லி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அளவு வினிகர் ஆகியவற்றையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.

செய்முறை

 • உருளைக்கிழங்கை நீள வாக்கில் கத்திபோல நருக்கி எடுக்கவும். இப்படி நறுக்கினால் மட்டுமே ஃபிரை நல்ல மொறுமொறுப்பாக கிடைக்கும் மற்றும் திருப்தியான உணர்வு கிடைக்கும்.
 • வீட்டில் ஃபிரை முயற்சி செய்கின்ற பலரும் செய்கின்ற பொதுவான தவறு, நறுக்கிய கிழங்குகளை தண்ணீரில் ஊற வைப்பது ஆகும். ஆனால், அப்படி ஊற வைக்கத் தேவையில்லை. தண்ணீரில் அலசி எடுத்துக் கொண்டாலே போதும்.
 • பின்னர் வினிகர் சேர்த்து சிறிது நேரம் ஊற விடவும்.
 • இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை மிதமான தீயில் வேக வைக்கவும்.
 • அவ்வபோது கிழங்கை திருப்பி விட வேண்டும். அப்போதுதான் நன்றாக சிவந்து வெந்து வரும்.
 • இறுதியாக ஃபிரை செய்யப்பட்ட கிழங்குகளை எடுத்து அதன் மீது உப்பு சேர்த்து குலுக்கி எடுத்துக் கொள்ளவும்.
 • Also Read | Evening Snacks : மொறு, மொறுப்பான பனீர் பிரெட் பஜ்ஜி... சாப்பிட்டு பார்க்க ரெசிபி இதோ...

  காரசாரமான பெரிபெரி மசாலா ஃபிரைஸ் :

top videos

  மேற்கண்ட அதே ஃபிரை செய்முறையில், மசாலா மற்றும் தேவையான பொருட்களை சேர்த்தால் பெரிபெரி ஃபிரைஸ் தயார் ஆகிவிடும். உருளைக் கிழங்கை ஏற்கனவே பார்த்தபடி மொறுமொறுப்பாக பொறித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெரிபெரி மசாலா தூள் ஆகியவற்றை தூவி குலுக்கி வைக்கவும். இந்த மொறுமொறுப்பான ஃபிரைஸ்களை சாப்பிடுவதற்கு சைட் டிஷ்ஷாக புதினா சட்னி அல்லது வெண்ணெய் அல்லது மயோனைஸ் அல்லது தக்காளி சாஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

  First published:

  Tags: Evening Snacks, Potato recipes