முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பருப்பில்லாமல் தக்காளி சாம்பார்... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... நீங்களும் செஞ்சு பாருங்க..!

பருப்பில்லாமல் தக்காளி சாம்பார்... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... நீங்களும் செஞ்சு பாருங்க..!

தக்காளி சாம்பார்

தக்காளி சாம்பார்

தினமும் இட்லி தோசைக்கு என்ன சட்னி அரைப்பது என்பதே பெரிய குழப்பமா இருக்கா.? இந்த தக்காளி சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

என்னதான் வித விதமான டிபன் வெரைட்டி இருந்தாலும் நம் வீடுகளில் அதிகம் செய்யும் உணவு இட்லி, தோசை தான், அதுவும் பெரும்பாலான வீடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் காலையில் சமைக்கும் உணவு இட்லி தான். ஆய்வின் படி தோசையை விட இட்லி உடலுக்கு நல்லது எனவும் கூறப்படுகிறது. இட்லி, தோசையை விட அதற்கு ருசியாக தினம் தினம் வெரைட்டி சட்னி அரைப்பது தான் கொஞ்சம் கஷ்டமான வேலை.  அப்படி இருக்கையில் எப்பொழுதும் அரைக்கும் தக்காளி சட்னிக்கு பதிலாக இந்த தக்காளி சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 8 - 10

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளாய் - 4- 5

பூண்டு - 10 பல்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு -  தேவைக்கேற்ப

கடுகு

கொத்தமல்லி

செய்முறை:

  • முதலில் 8 தக்காளியை இட்லி பாத்திரத்தில் போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • வேக வைத்த தக்காளியை தோல் நீக்கி மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
  • பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் தக்காளி கரைசலை சேர்க்க வேண்டும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
  • கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான தக்காளி சாம்பார் தயார்.
  • ஒருமுறை வீட்டில் இந்த ரெசிபியை செய்து பாங்கள்.   இட்லி, தோசை பிடிக்காதவர்கள் கூட இந்த சாம்பாருக்காக விரும்பி சாப்பிடுவார்கள்.
First published:

Tags: Breakfast, Chutney, Sambar Recipe, Tomato