முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சளித்தொல்லை நீங்க ஆம்லெட்யை இப்படி செய்து சாப்பிடுங்க..!

சளித்தொல்லை நீங்க ஆம்லெட்யை இப்படி செய்து சாப்பிடுங்க..!

Garlic Omelette

Garlic Omelette

உங்களுக்கு ஆம்லெட் பிடிக்கும் என்றால் ஒரு முறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள். சுவையானது மட்டும் அல்ல ஆரோக்கியமானதும் கூட.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் ஆரோக்கியத்திற்கு முட்டை முக்கியமான உணவுப்பொருளாக உள்ளது. அதனால், தான் மருத்துவர்கள் நமது உணவு பழக்கத்தில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர். அவித்த முட்டை பிடிக்காதவர்கள் முட்டை பொரியல், ஆம்லெட், வேகவைத்த மசாலா முட்டை என பல முறைகளில் சமைத்து சாப்பிடுகிறோம்.

அதுவும், ஆம்லெட் என்றால் நம்மில் பலருக்கும் பிடித்த உணவு பொருட்களில் ஒன்று… எப்போது ஹோட்டல்களில் சாப்பிட்டாலும், “அண்ணா, பெப்பர் தூக்கலா ஒரு ஆம்லெட்” என்ற வார்த்தை இல்லாமல் அன்றைய சாப்பாடு முடித்திருக்காது. அப்படி, நீங்களும் ஆம்லெட் பிரியராக இருந்தால் நாங்கள் உங்களுக்கு ஒரு புதிய வகை ஆம்லெட் ரெசிபி பற்றி கூறுகிறோம்.

பொதுவாக ஆம்லெட் வெங்காயம் மற்றும் மிளகாய் கலவையில் செய்து பார்த்திருப்போம். ஆனால், தக்காளி மற்றும் பூண்டுடன் சேர்த்து ஆம்லெட் செய்து பார்த்ததுண்டா?... இந்த ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்கள்… உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் :

முட்டை - 2.

பச்சை மிளகாய் - 2.

பூண்டு பற்கள் - 4.

வெங்காயம் - 1.

உப்பு - தேவைக்கேற்ப.

மீடியம் சைஸ் தக்காளி - 1.

மிளகாய் தூள் - கால் ஸ்பூன்.

சீஸ் - தேவைப்பட்டால்.

செய்முறை :

முதலில் ஆம்லெட் செய்ய தேவையான வெங்காயத்தை எடுத்து தோலுறித்து, நன்கு பொடியாக வெட்டிக்கொள்ளவும். அதேநேரம், வெள்ளை பூண்டை தோலுறித்து சிறிய பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எடுத்து வைத்துள்ள தக்காளியையும் சன்னமாக சிறிய அளவில் வெட்டி தயாராக வைத்துக்கொள்ளவும்.

இப்போது, ஆம்லெட் செய்ய எடுத்துக்கொண்ட 2 முட்டையை உடைத்து, ஒரு கோப்பையில் உற்றி நன்றாக கலக்கிக்கொள்ளவும். முட்டை சிறியதாக இருப்பின், கூடுதலாக ஒரு முட்டையினை சேர்த்துக்கொள்ளவும்.

பின்னர், முட்டை பாத்திரத்தில் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், பூண்டு மற்றும் வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இதையடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.

Also Read | கருகிய உணவை சாப்பிட்டால் கேன்சர்..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆம்லெட் செய்ய ஒரு தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடேற்றவும். சட்டி நன்கு சூடேறியதும் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பாத்திரம் முழுவதும் பரப்பிவிட்டு, அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.

பின்னர், இந்த சட்டியில் நாம் கலக்கி தயாராக வைத்துள்ள முட்டையின் சேர்மத்தை ஊற்றி பொன்னிறமாகும் வரை (இர பக்கமும்) வேகவைத்து எடுத்தால் சுவையான பூண்டு ஆம்லெட் ரெடி!.

காலை உணவுக்கு ஏற்ற இந்த ஆம்லெட்டினை ஒரு கோப்பை தயிருடன் சேர்த்து பரிமாறலாம். ஆம்லெட்டின் காரத்தை குறைக்க, இதன் மீது சீஸ் துருவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

காரம் அதிகம் விரும்பாதவர்கள், இந்த ஆம்லெட் செய்முறையின் போது பச்சை மிளகாயினை தவிர்த்து விடலாம். இதற்கு பதிலாக மிளகாய் தூளின் அளவினை சிறிது அதிகரித்துக்கொள்ளலாம்.

First published:

Tags: Boiled egg, Egg recipes, Food, Food recipes