உலக இஸ்லாமிய மக்கள் இந்த மாதத்தில் நோன்பு வைப்பது வழக்கமான ஒன்றாகும். இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான், இந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதியான் இன்று தொடங்கி ஏப்ரல் 21 அன்று முடிவடைகிறது. இந்த நேரத்தில், முஸ்லிம்கள் சூரிய உதயத்திற்கு முன் உணவு உண்டு, அந்த நாள் முழுவதும் நோன்பு இருப்பார்கள். அப்படி நோன்பு முடிந்த பின் சாப்பிடும் உணவானது சத்துக்கள் நிறைந்ததாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதோடு சுவையானதாகவும் இருக்க வேண்டும். அதனால் இந்த பதிவில் சுவை மிகுந்ததாகவும் சத்துகள் நிறைந்ததாகவும் ரமலான் ஸ்பெஷல் ரெசிபி மட்டன் ஹலீம் கஞ்சி எப்படி செய்வதென்று தெரிந்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
கோதுமை ரவை - 1/2 கப்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பாசிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபின் ஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பொன்னிறமாக வதக்கிய வெங்காயம் - சிறிது
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மட்டன் வேக வைத்த நீர் - 6 கப்
புதினா - சிறிது
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1/4 கப்
முந்திரி - சிறிது
செய்முறை:
1. முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மட்டனை உப்பு மற்றும் தயிர் சேர்த்து பிரட்டி அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
2. பின்பு கோதுமை ரவையை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதேப் போல் மற்ற பருப்புக்களையும் நீரில் தனித்தனியாக 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். 3-4 மணிநேரம் கழித்து, ஊற வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் பருப்புக்களில் உள்ள நீரை வெளியேற்றிவிடுங்கள்.
3. பிறகு ஒரு கனமான நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவை மற்றும் பருப்புக்களை போட்டு சில நிமிடங்கள் கிளறி, பின் ஒரு கப் நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
4. பருப்புகள் நன்கு வெந்ததும், அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் வேக வையுங்கள். அதன் பின் பச்சை மிளகாய் அரைத்த விழுது, சீரகம், மிளகு, இஞ்சி பூண்டு விழுது, பொன்னிறமாக வதக்கிய வெங்காயம், கரம் மசாலா, மட்டன் நீர் சேர்த்து கிளறிவிடுங்கள்.
5. பின்பு அதில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி, 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடி வைத்து குறைவான தீயில் ஒரு மணிநேரம் வேக வைக்க வேண்டும்.
6. அதன் பின் மூடியைத் திறந்து, வாணலியில் உள்ள மட்டன் துண்டுகளை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு கரண்டி எடுத்துக் கொண்டு வாணலியில் உள்ள கலவையை நன்கு நசுக்கி விட வேண்டும்.
Also see... ரமலான் 2023: புனித மாதத்தில் நோன்பு வைப்பதற்கான தேதி மற்றும் விதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
7. பிறகு மட்டன் துண்டுகளை மீண்டும் வாணலியில் சேர்த்து, நெய் ஊற்றி நன்கு கிளறிவிட்டு, அடுப்பை அணைக்க வேண்டும். இறுதியில் பொன்னிறமாக வதக்கிய வெங்காயம் மற்றும் முந்திரி துண்டுகளால் அலங்கரித்தால், சுவையான மட்டன் ஹலீம் தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fasting, Ramadan Fasting, Ramzan