கோடைக்காலம் துவங்கி விட்டது. சில நாட்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்க இருக்கிறது. இந்நிலையில், அவ்வபோது ஏதாவது பிள்ளைகளின் ஆசைகளுக்கு இணங்க தின்பண்டங்கள் செய்து தர வேண்டியிருக்கும் . இதற்கான கடைகளில் விற்கக் கூடிய பண்டங்கள், சிப்ஸ், பேக்கரி ஐட்டங்களை அடிக்கடி வாங்கிக் கொடுப்பது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும். எனவே சுவையான, சத்து நிறைந்த ஆரோக்கியமான பல தின்பண்டங்களை வீட்டிலேயே செய்யலாம். அதில் ஒன்று தான் பனீர் ஃபிரை.
பனீரை விரும்பாதவர்கள் மிக மிகக் குறைவு. புரதம் நிறைந்த உணவை காரசாரமான ஃபிரை, கிரேவி, இனிப்பு, என்று எல்லா வகையான உணவுகளிலும் பயன்படுத்தலாம். அதிலும், சுவையான, தங்க நிறத்தில் மொறுமொறு வென்ற ஃபிரை என்பதை விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன?
கோல்டன் பனீர் ஃபிரை என்பது பனீரில் செய்யக்கூடிய ஒரு அற்புதமான உணவு. வெளிப்புறத்தில் கரகரப்பாக முறுமுறுப்பாக தங்க நிறத்திலும் உள்ளே மிருதுவாகவும் மென்மையாகவும் இரண்டு வெவ்வேறு தன்மையில் சாப்பிடுவதற்கு மிக அற்புதமாக இருக்கும். அது மட்டுமல்ல, சில நிமிடங்களிலேயே இதை செய்து விடலாம்.
கோல்டன் பனீர் ஃபிரை செய்வதற்கு தேவையான பொருட்கள் :
கோல்டன் பனீர் ஃபிரை செய்முறை :
ஸ்டெப் 1: பனீர் ஃபிரை பேஸ்ட்
ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், உப்பு, கருப்பு மிளகு தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தூள் ஆகியவற்றை சேர்க்கவும். இதை ஒரு மிருதுவான பேஸ்ட்டாக மாற்ற தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஸ்டெப் 2: பனீரை துண்டுகளாக வெட்டுதல்
பனீரை ஒரே மாதிரி, சிறிய துண்டுகளாக (cubes) வெட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து அதில் பனீர் க்யூப்ஸை நன்றாகக் கலக்கவும்.
ஸ்டெப் 3: பனீர் ஃபிரை செய்முறை
ஒவ்வொரு பனீர் க்யூப்ஸையும் சோள மாவு பேஸ்ட்டில் நன்றாக தோய்த்து, பிரட்தூள்களில் கோட்டிங் செய்து எடுக்கவும்.
Also Read | கோடைக்கு குளுகுளு இளநீர் ஐஸ்க்ரீம்.! வீட்டிலேயே செய்து அசத்துங்க.!
இதற்கிடையில், கடாயில் கடுகு எண்ணெய் வைத்து, லேசாக புகை வரும் வரை சூடாக்கவும். இப்போது சோள மாவு மற்றும் பிரட் தூளில் பிரட்டி எடுக்கப்பட்ட பனீர் க்யூப்ஸை சூடான எண்ணெயில் மெதுவாக போட்டு, முழுவதுமாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக பனீர் க்யூப்ஸையும் வறுத்து எடுக்கவும்.
ஸ்டெப் 4: பரிமாற தயாராக உள்ளது
பனீர் க்யூப்ஸ் நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும். சூடாக, தக்காளி கெட்ச்-அப் மற்றும் புதினா சட்னியுடன் பரிமாறவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Evening Snacks, Paneer, Paneer recipes