மஞ்சூரியன் என்பது வயது வித்தியாசமின்றி அனைவரின் நாவிலும் எச்சில் ஊற வைக்கும் பிரபலமான டிஷ் ஆகும். இந்த சீன உணவு பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமானது. கோபி மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன் என பலவகை மஞ்சூரியன்கள் இருந்தாலும் சுஜி மஞ்சூரியன் (Suji Manchurian - ரவை மஞ்சூரியன்) தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.
ரவை மஞ்சூரியன் ரெசிபியானது அதன் தனித்துவமான சுவை காரணமாக பிரபலமடைந்து வருகிறது குறிப்பாக குழந்தைகள் மத்தியில். குழந்தைகளின் பசியை போக்க சரியான ஸ்னாக்காக இருக்கிறது சுஜி மஞ்சூரியன். ஹோட்டல்ஸ் மற்றும் ரெஸ்டாரன்ட்ஸ்களில் நீங்கள் மஞ்சூரியனை சுவைத்திருக்கலாம். வீட்டிலும் சுவையான மஞ்சூரியனை செய்து சுவைக்க விரும்பினால் சுஜி மஞ்சூரியன் செய்வதற்கான ஈஸி ரெசிபி இங்கே...
சுஜி மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்...
ரவை உருண்டை செய்ய:
கிரேவி செய்ய:
செய்முறை:
வெங்காயம் மற்றும் குடைமிளகாயை பொடியாக நறுக்கி மஞ்சூரியன் உருண்டைகளை தயார் செய்யும் ப்ராசஸை துவக்க வேண்டும். கடாய் ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்து சிறிது ஆயில் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து சூடாக்கி கொள்ளுங்கள். ஆயில் காய்ந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாயை கடாயில் கொட்டி தீயை லேசாக வைத்து சாஃப்டாகும் வரை வதக்கவும். பின் இந்த மிக்ஸிங்கில் எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்கு குக் செய்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த கலவையில் எடுத்து வைத்திருக்கும் 1 பவுல் ரவையை சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கடாயில் இருக்கும் கலவை வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். பின் கடாயில் இருக்கும் மிக்சிங் லேசான சூட்டிற்கு வந்தவுடன் கைகளால் அதனை எடுத்து சிறு சிறு உருண்டைகளாகபிடிக்கவும். அடுத்து இந்த பால்ஸ்கள் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
Also Read | குழந்தைகளுக்கு 'ஹெல்த் ட்ரிங்ஸ்’கொடுப்பது நல்லதா..? கெட்டதா..? குழந்தைகள் நல மருத்துவரின் பதில்..!
இப்போது மஞ்சூரியனுக்கான கிரேவி செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை சூடாக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். சில நிமிடங்கள் கழித்து பிளாக் பெப்பர் பவுடர், சிவப்பு மிளகாய் தூள், தக்காளி & சோயா சாஸ் மற்றும் ஷெஸ்வான் சட்னி உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் (அரோரூட்) எடுத்து அதை தண்ணீர் ஊற்றி கரைத்து கொண்டு இந்த கலவையை கடாயில் இருக்கும் கிரேவியில் சேர்த்து சில நிமிடங்கள் குக் செய்யவும். சில நிமிடங்களுக்கு பின் ஏற்கனவே ரெடி செய்து வைத்திருக்கும் ரவா உருண்டைகளை கிரேவியில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சில நிமிடங்கள் வேக வைக்கவும். பின் அடுப்பை அணைத்து விட்டு இறக்கினால் சுவையான சுஜி மஞ்சூரியன் ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food recipes, Rava recipes