பொதுவாக நம்மில் பலர் தினமும் ரசம் சாதம் சாப்பிடுவது வழக்கம். ரசம் செரிமானத்தை ஊக்குவிக்கும் ஒரு நல்ல உணவாகும். இதனை சூப் போன்று அப்படியே கூட குடிக்கலாம். பொதுவாக நாம் தக்காளி ரசம், மிளகு ரசம் தான் அடிக்கடி செய்வோம். ஆனால், வேப்பம் பூ கொண்டும் சுவையான ஆரோக்கியமான ரசம் செய்யலாம். பொதுவாக வேப்பம் பூ ரசத்தை தமிழ் புத்தாண்டு அன்று செய்வது வழக்கம். ஆனால், இதனை அவ்வப்போது செய்து சாப்பிட்டால், நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை குறித்து பார்ப்போம், வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
- வேப்பம் பூ - 1 டீஸ்பூன்
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவைக்கேற்ப
- சர்க்கரை - ½ தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - ⅛ தேக்கரண்டி
தாளிக்க:
- நெய்/எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடுகு - ½ தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 4
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி

செய்முறை:
- முதலில், புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். முன்பே ஊற வைக்க மறந்து விட்டால், சூடான நீரில் 20 - 30 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.
- அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், அதில் வேப்பம் பூவை சேர்த்து ரோஸ்ட் செய்து கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்வது அவசியம்.
- அதை தனியாக எடுத்து வைத்து விட்டு, வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போடவும். அது வெடித்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, மற்றும் பெருங்காயம் சேர்த்து, அதில் புளியை நன்றாக கரைத்து ஊற்ற வேண்டும்.
- அடுத்து, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- கொத்தி வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு நாம் ரோஸ்ட் செய்து வைத்துள்ள வேப்பம் பூவை சேர்க்க வேண்டும். அவ்வளவு தான், சுவையான சத்தான வேப்பம் பூ ரசம் தயார்!
Also Read | Puthandu 2023: தமிழ் புத்தாண்டு தினத்துக்கு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்க சூப்பரான 'வாழ்த்துகள்' இதோ!
குறிப்பு:
- பொதுவாக கோடை காலத்தில் வேப்ப மரத்தில் வேப்பம் பூக்கள் நிறைய இருக்கும். அப்போதே நாம் பூக்களை எல்லாம் பறித்து வைத்துக் கொண்டு வீட்டில் உலரவிட்டு பிறகு காற்று புகாத ஏதேனும் ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
- வேப்பம் பூவை வதக்கும் போது கண்டிப்பாக அடுப்பை மிதமான தீயில் வைப்பது அவசியம் ஆகும்.
- அதே போல் அதன் மனம் நன்கு வரும் வரை ஜாக்கிரதையாக ரோஸ்ட் செய்ய வேண்டும்.
- நாம் வறுத்த வைத்துள்ள வேப்பம் பூவை கடைசியாக அடுப்பை அணைத்த பின்னரே சேர்க்க வேண்டும். வேப்பம் பூவை சேர்த்த பின்னர் ஒரு போதும் ரசத்தை கொதிக்க வைக்கக் கூடாது.
- பிரிட்ஜில் வைத்து இரண்டு நாட்களுக்கு கூட இதனை நாம் பயணப்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.